"அதை" எல்லாம் கிளறி.. இந்தியா பற்றி அரபு நாடுகளில் ரிப்போர்ட் செய்யப்பட்டது எப்படி தெரியுமா? பின்னணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நுபுர் சர்மா விவகாரத்தை சவுதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி மற்றும் சில இஸ்லாமிய நாடுகள் மிக கடுமையாக ரிப்போர்ட் செய்துள்ளன.

பாஜக செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, இஸ்லாமிய இறை தூதுவர் நபிகள் நாயகத்தை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். இஸ்லாமிய இறை தூதுவர் நபிகள் நாயகத்தை நேரடியாக இகழ்ந்து, சில அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளை பேசி இருந்தார்.

அவரின் இந்த பேச்சு உலகம் முழுக்க கடும் விமர்சனங்களை சந்தித்தது. இதையடுத்து நுபுர் சர்மா பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார்.

 நுபுர் சர்மா

நுபுர் சர்மா

இந்த நிலையில் நுபுர் சர்மா விவகாரத்தை சவுதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி மற்றும் சில இஸ்லாமிய நாடுகள் மிக கடுமையாக ரிப்போர்ட் செய்துள்ளன. அந்தந்த நாடுகளில் இருக்கும் பிரபல ஊடகங்களில் இந்த விவகாரம் பற்றி கடுமையான சில கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. முக்கியமாக அரபு நாட்டு ஊடகங்கள் இந்தியா பற்றி முக்கியமான சில கருத்துக்களை தங்கள் ஊடகங்களில் வெளியிட்டு உள்ளன.

அல் ஜஸ்ஸிரா

அல் ஜஸ்ஸிரா

கத்தாரை சேர்ந்த அல் ஜஸ்ஸிரா ஊடகத்தில் வெளியான செய்தியில் , அரபு நாடுகள் இந்த விவகாரம் காரணமாக கோபத்தில் இருப்பதாகவும். இந்திய பொருட்களை உலகம் முழுக்க பல நாடுகளில் இஸ்லாமியர்கள் புறக்கணித்து வருவதாகவும். இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடர்ந்து வெறுப்பு அதிகரித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. அதோடு இந்தியா பிரான்ஸ் மற்றும் சீனாவின் பாதையை பின்பற்றி இஸ்லாமியர்களை எதிர்க்கிறது என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அறிக்கை

அறிக்கை

அதேபோல் இந்தியாவில் மத ரீதியான மோதல்கள் அதிகரித்து உள்ளதாக, சிறுபான்மையினர் பாதுகாப்பு இன்றி இருப்பதாக அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையையும், அந்த ஊடகம் வெளியிட்டுள்ளது.

அதேபோல் அரப் டைம்ஸ் ஊடகம், இந்தியா அரசு தனது செய்தி தொடர்பாளரை fringe என்று அழைத்துள்ளதாக கூறியுள்ளது. இந்த ஊடகம் குவைத்தில் இருந்து வெளியாகும் ஊடகம் ஆகும். இந்த ஊடகத்தில் நுபுர் சர்மா கருத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் அமைதியான குணம், இஸ்லாம் மார்க்கத்தின் அறிவுரைகள், இறை தூதர் நபிகளின் பெருமைகளை தெரியாமல் அவர்கள் பேசி உள்ளனர் என்றும் விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது.

அரப் நியூஸ்

அரப் நியூஸ்

சவுதி அரேபியாவில் வெளியாகும் அரப் நியூஸ் கருத்தில், இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளதாக ரிப்போர்ட் செய்துள்ளது. அது தொடர்பாக உலக நாடுகள் தெரிவித்த கருத்துக்களை இந்த ஊடகம் பட்டியலிட்டுள்ளது. துபாயில் வெளியாகும் கல்ப் நியூஸ், நுபுர் சர்மாவிற்கு எதிராக மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பதியப்பட்ட எப்ஐஆர்களை பட்டியலிட்டுள்ளது. அதேபோல் கான்பூரில் நுபுர் சர்மா கருத்தால் ஏற்பட்ட கலவரம் குறித்தும் விளக்கமாக ரிப்போர்ட் செய்துள்ளது.

கலீஜ் டைம்ஸ்

கலீஜ் டைம்ஸ்

அரபு அமீரகத்தில் வெளியிடப்பட்ட கலீஜ் டைம்ஸ் ரிப்போர்ட்டில்,இந்தியாவில் மைனாரிட்டிகளுக்கு எதிராக அழுத்தம் உள்ளது. இதற்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் பல்வேறு நாடுகள் வைக்கப்பட்டு வருகின்றன, என்று விமர்சனம் வைத்துள்ளது. இதில் துருக்கிதான் பழைய விஷயங்களை எல்லாம் கிளறி ரிப்போர்ட் செய்துள்ளது. அதன்படி துருக்கியில் வெளியாகும் TRT World ஊடகத்தில், 2014ல் இருந்து ஏற்பட்ட பல்வேறு இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்கள் பற்றி பட்டியலிடப்பட்டுள்ளது.

பழைய விஷயங்கள்

பழைய விஷயங்கள்

இந்து கூட்டங்கள் மூலம் செய்யப்பட்ட குழு வன்முறைகள் பற்றியும், இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல் பற்றியும், தலித் மரணங்கள், மாட்டுக்கறி தாக்குதல்கள் பற்றியும் ரிப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல் லவ் ஜிகாத் என்று கூறி இஸ்லாமிய இளைஞர்கள் தாக்கப்படுவது, கொரோனா காலத்தில் இஸ்லாமியர்களை கொரோனா பரப்பினார்கள் என்று விமர்சனம் செய்தது உள்ளிட்ட பல விஷயங்களை சுட்டிக்காட்டி விமர்சனம் செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+