இந்தியா முடங்கும் ஆபத்து.. இஸ்ரேல் ஈரான் மோதலால் இப்படி கூட நடக்குமா! இதுதான் சர்வதேச அரசியல்
டெல்லி: அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் ஈரான் மோதல் அடுத்த கட்டத்திற்குப் போய்விட்டது. இப்போது இஸ்ரேல் மீது ஈரான் மிகப் பெரிய தாக்குதலை ஆரம்பித்துள்ளது. தற்போதைய சூழலில் இந்தத் தாக்குதல் அவ்வளவு சீக்கிரம் முடிவதற்கு எந்தவொரு வாய்ப்பும் இருப்பதாகத் தெரியவில்லை. இதற்கிடையே இந்த தாக்குதலால் இந்தியாவுக்கு என்ன மாதிரியான சிக்கல் ஏற்படும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இஸ்ரேல் ஈரான் மோதல் இப்போது சமாளிக்க முடியாத நிலையை அடைந்துள்ளது. இத்தனை காலம் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்தாலும் நேரடியாக உள்ளே வரவில்லை. ஆனால், இன்று அதிகாலை ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதலை நடத்தியது. இதனால் அங்குப் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இது இந்தியாவை எப்படிப் பாதிக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

இந்தியா
இதில் இஸ்ரேல், ஈரான் ஆகிய இரு நாடுகள் உடனும் இந்தியா நல்ல ஒரு வர்த்தக உறவு கொண்டிருந்தது. ஆனால், சமீபத்திய மோதல்களால் சில ஆண்டுகளாக வர்த்தக உறவு குறைந்தே வருகிறது.
ஈரான் வர்த்தகம்
டிரம்ப் நிர்வாகத்தின் அழுத்தம் காரணமாக, ஈரான் உடனான எண்ணெய் வர்த்தகத்தை ரத்து செய்ய இந்தியா நிர்ப்பந்திக்கப்பட்டது. கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்தவில்லை என்றால் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்கா கூறியதால், ஈரானுடனான இந்தியாவின் வர்த்தகம் 2017இல் சுமார் 14 பில்லியன் டாலர்களிலிருந்து கடந்த ஆண்டு 1.4 பில்லியன் டாலர்களாகக் குறைந்தது.
இஸ்ரேல் வர்த்தகம்
அதேபோல அங்கு அதிகரித்துள்ள பதற்றம் மற்றும் காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்களால் இஸ்ரேலுடனான வர்த்தகமும் 2022இல் 11 பில்லியன் டாலர்களிலிருந்து கடந்த ஆண்டு 3.75 பில்லியன் டாலர்களாகக் குறைந்துவிட்டது. இருப்பினும், இஸ்ரேலிடம் இருந்து இந்தியா வாங்கும் பாதுகாப்பு உபகரணங்களின் அளவு கடந்த பத்து ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. 2015இல் சுமார் 5.6 மில்லியன் டாலர்களாக இருந்த பாதுகாப்புத் துறை கொள்முதல் இப்போது 128 மில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.
இதுதான் அதிகபட்ச பாதிப்பு
இதில் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டால் தான் ஈரானில் பாதிப்பு அதிகமாக இருக்கும். ஹர்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல்கள் இடையூறை சந்தித்தால் இந்தியாவின் வர்த்தகம் பாதிக்கப்படும். இது இந்தியாவிற்குப் பொருளாதார ரீதியாக நிச்சயம் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஏனென்றால் இந்தியாவின் எரிசக்தி இறக்குமதியில் 40-50% இந்த பகுதியின் வழியாகவே நடைபெறுகிறது. இதனால் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் கடுமையாக உயரக்கூடும். கப்பல் செலவுகள், பாதுகாப்பு மற்றும் காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரிக்கும். இதனால் பணவீக்கம் கூட அதிகரிக்கும்.
சர்வதேச அரசியல்
இஸ்ரேல்- ஈரான் மோதலை கையாள்வது இந்தியாவுக்கு எப்போதும் ஒரு சவாலான விஷயமாக இருந்து வருகிறது. ஏனெனில் இந்தியா இரு நாடுகளுடனும் வலுவான உறவுகளைக் கொண்டுள்ளது. அதேநேரம் இந்த நாடுகளும் நேர் எதிர் நிலைப்பாட்டைக் கொண்டதாக உள்ளன. அமெரிக்கா மற்றும் ஜி-7 நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றன. இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள உரிமை இருப்பதாகவும் ஒருபோதும் அணு ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது என்றும் ஜி7 நாடுகள் கூறியுள்ளன. மறுபுறம் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், பெலராஸ் உள்ளிட்ட நாடுகள் ஈரானுக்குப் பின்னால் இருக்கிறது.
மறுபுறம் இன்னும் வேறு சில விஷயங்களும் இருக்கிறது. இஸ்ரேல், ஈரான் என இரு நாடுகளிலும் கணிசமான இந்தியர்கள் வசிக்கிறார்கள். அவர்களை இந்தியாவுக்கு மீட்டு வரும் நடவடிக்கை ஒரு பக்கம் தொடர்கிறது. அதேபோல இந்த மோதலால் தங்கம் விலையும் கூட நிச்சயம் உயரும் என்றே அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications