Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவை ‘பாரத்’ என மாற்ற ரூ.14,304 கோடி செலவாகும்.. அடேங்கப்பா! ஏழைகளுக்கு 1 மாதம் உணவு தரலாமாமே!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 'இந்தியா' என்பதை 'பாரத்' என மாற்ற மத்திய பாஜக அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது வெளிப்படையாகத் தெரிகிறது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் இதுகுறித்த மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஒருவேளை இந்தியா 'பாரத்' என பெயர் மாறினால், இதற்கு எவ்வளவு செலவாகும் என்ற தகவல் அனைவரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.

ஜி20 மாநாட்டிற்கான அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்குப் பதிலாக President of Bharath எனக் குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், நாட்டின் பெயரை இந்தியா என்பதற்கு பதில் 'பாரத்' என மாற்ற உள்ளதாக தகவல் பரவி வருகிறது. வரும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் பாரத் என்ற பெயர் மாற்ற தீர்மானம் கொண்டுவர மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 How much will be the Cost for Renaming India To Bharat

பெயர் மாறும் இந்தியா?: அதனை உறுதிப்படுத்தும் விதமாக தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான்- இந்தியா மாநாடு மற்றும் 18வது கிழக்கு ஆசிய மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை இந்தோனேசியா செல்ல உள்ள நிலையில், பிரதமர் மோடியின் பயணம் தொடர்பான நிகழ்ச்சி நிரல் அறிவிப்பிலும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அதாவது Prime Minister of Bharat என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து 'இந்தியா' என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கியுள்ளனர். இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி (இந்தியா) 26+ கட்சிகளைக் கொண்டுள்ளது.'இந்தியா' என்ற பெயரை கூட்டணிக்கு வைத்துள்ளதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், 'இந்தியா' என கூட்டணிக்கு பெயர் வைக்க தடையில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

பாஜக அரசு தீவிரம்: இந்நிலையில் தான் தற்போது இந்தியா என்ற நாட்டின் பெயரை 'பாரத்' என மாற்ற பாஜக அரசு தீவிரமாக முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. இந்தியா என்ற வார்த்தைக்கு மாற்றாக 'பாரத்' என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்பது ஆர்எஸ்எஸ்ஸின் தொடர் கோரிக்கையாக இருந்து வரும் நிலையில், அதனை இப்போது பாஜக அரசு அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறது. இது எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை கூட்டப்பட உள்ள நிலையில், இந்த சிறப்பு அமர்வில் கேள்வி நேரம், பூஜ்ஜிய நேரம் மற்றும் தனிப்பட்ட உறுப்பினர்களின் அலுவல் ஆகியவை தவிர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், 'பாரத்' பெயர் மாற்றம், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' ஆகிய மசோதாக்கள் வர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

பெயர் மாற்றம்: சமீப காலங்களில், குறிப்பாக பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவில் பல நகரங்கள் மற்றும் ஊர்களின் பெயர் மாற்றப்பட்டாலும், 140 கோடி மக்கள் வசிக்கும் ஒரு நாட்டின் பெயரையே மாற்றுவது சாதாரண காரியம் இல்லை. இந்தியா எனக் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து இடங்களிலும், அம்சங்களிலும், திட்டங்களிலும் 'பாரத்' என மாற்றுவதற்கு அதிக செலவு பிடிக்கும்.

ஒரு நாடு அல்லது மாகாணத்தின் பெயரை மாற்றுவது மேலோட்டமான செயலாகத் தோன்றினாலும், இது ஹைப்பர்லோக்கல் அளவில், மாவட்டம், மாநிலம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் மாற்றங்களை உள்ளடக்கியது. உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக உள்ள இந்தியாவில், எண்ணற்ற கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் இனங்கள் அதன் இயற்பியல் எல்லைகளுக்குள் வசிக்கும் இந்தியா போன்ற ஒரு நாட்டில், நாட்டின் பெயர் மாற்றம் என்பது சிக்கல்கள் நிறைந்தது.

பல சிக்கல்கள்: உதாரணத்திற்கு, 'இந்தியா' பாரத் என மாறினால், 'ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா' என்பதும் பெயர் மாற்றப்படும். அப்படி மாறினால், இந்தியாவில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள், நாணயங்களிலும் பெயர் மாற்றம் அவசியமாகும். இந்தியா என்ற பெயரில் உள்ள ஏராளமான திட்டங்களின் பெயர்களும், அறிவிப்புகளும், விளம்பரங்களும் மாற்றப்பட வேண்டும். இதுபோன்ற எண்ணற்ற நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.

 How much will be the Cost for Renaming India To Bharat

இந்த ஆண்டின் தொடக்கத்தில், மகாராஷ்டிராவில் உள்ள அவுரங்காபாத் நகரம் சத்ரபதி சம்பாஜி நகர் என மாற்றப்பட்டது. அதேபோல, மகாராஷ்டிராவில் உள்ள ஒஸ்மானாபாத் தாராஷிவ் என மறுபெயரிடப்பட்டது. 2016 ஆம் ஆண்டில், ஹரியானா மாநில அரசு குர்கான் நகரத்திற்கு குருகிராம் என்று பெயர் மாற்றியது. இதேபோல், உத்தர பிரதேசத்தில் உள்ள அலகாபாத் நகரம் 2018 இல் பிரயாக்ராஜ் என்று பெயர் மாற்றப்பட்டது.

பெயர் மாற்ற செலவு: அரசாங்க மதிப்பீட்டின்படி, அலகாபாத்தின் பெயரை மாற்றியதால் உ.பி மாநில அரசுக்கு ரூ. 300 கோடிக்கு மேல் செலவாகும் என்று, அரசின் நிதித் துறையின் ஆதாரங்களை மேற்கோள் காட்டி இந்தியா டுடே முன்பு செய்தி வெளியிட்டது. வரைபடங்கள், சாலை வழிகாட்டி அமைப்பு, நெடுஞ்சாலை அடையாளங்கள், அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ சாதனங்கள் போன்றவற்றை மாற்ற வேண்டியது போன்ற நடவடிக்கைகளுக்காக அதிக தொகை செலவிட வேண்டியிருக்கும்.

நாட்டின் பெயரை மாற்றுவது உலகில் புதிதல்ல. நிர்வாகத் திறனை மேம்படுத்துதல், காலனித்துவச் சின்னங்களை அகற்றுதல் போன்ற பல்வேறு காரணங்களுக்காக நாடுகளின் பெயர்கள் மாறியுள்ளன. இந்தியாவின் பக்கத்து நாடான இலங்கை 1972 இல் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால், 'இலங்கை' முந்தைய பெயரான 'சிலோன்' என்பதை அனைத்து அரசாங்க பயன்பாட்டிலிருந்தும் நீக்குவதற்கு நான்கு தசாப்தங்களுக்கு மேல் ஆனது.

டேரன் ஒலிவியர் ஃபார்முலா: 2018ஆம் ஆண்டில், ஸ்வாசிலாந்தின் மன்னர் காலனித்துவ அர்த்தங்களிலிருந்து விடுபடுவதற்கான வெளிப்படையான முயற்சியில் நாட்டின் பெயரை எஸ்வாதினி என்று மாற்றினார். அப்போது, ​​தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞர் டேரன் ஒலிவியர், ஒரு நாட்டின் பெயரை மாற்றுவதற்கான செலவைக் கணக்கிடும் முறையைக் கொண்டு வந்தார்.

டேரன் ஒலிவியர், ஆப்பிரிக்க நாடான எஸ்வாதினியின் மறுபெயரிடுதலை ஒரு பெரிய நிறுவனத்தில் மறுபெயரிடும் பயிற்சியுடன் ஒப்பிட்டு, அதற்லான செலவை மதிப்பிட்டார். ஒலிவியரின் கூற்றுப்படி, ஒரு பெரிய நிறுவனத்தின் சராசரி மார்க்கெட்டிங் செலவு அதன் மொத்த வருவாயில் 6 சதவீதம் ஆகும். மறுபெயரிடுதல் பயிற்சிகள், நிறுவனத்தின் ஒட்டுமொத்த மார்க்கெட்டிங் பட்ஜெட்டில் 10 சதவீதம் வரை செலவாகும். அவரது மதிப்பீடுகளின்படி ஸ்வாசிலாந்தை எஸ்வாதினி என மறுபெயரிடுவதற்கான செலவு 60 மில்லியன் டாலராக இருந்தது.

ரூ.14,304 கோடி செலவாகும்: டேரன் ஒலிவியரின் இதே மாடலை இந்தியா - பாரத் பெயர் மாற்ற விவகாரத்திற்கு பயன்படுத்தினால், 'பாரத்' பெயர் மாற்றத்திற்காக மிகப்பெரிய தொகையைச் செலவிட வேண்டியிருப்பது தெரியவருகிறது. 2023 ஆம் ஆண்டு முடிவடைந்த நிதியாண்டில், வரி மற்றும் வரி அல்லாத வருவாய் உட்பட இந்தியாவின் வருவாய் வரவுகள் ரூ.23.84 லட்சம் கோடியாக இருந்தது.

இந்தியாவின் வருவாயுடன் டேரன் ஒலிவியர் மதிப்பிட்ட பெயர் மாற்ற செலவு ஃபார்முலாவைப் பயன்படுத்தினால், இந்தியாவை பாரத் என்று பெயர் மாற்ற 14,304 கோடி ரூபாய் செலவாகக்கூடும். அதாவது, இந்த தொகை 80 கோடி இந்தியர்களுக்கு உணவளிக்கும் உணவுப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக ஒவ்வொரு மாதமும் மத்திய அரசு செலவிடும் தொகைக்கு நிகரானதாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+