டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வேடிக்கை பார்க்க முடியாது.. வேக்சின் வாங்க ஒதுக்கிய ரூ.35000 கோடி என்ன ஆனது.. சுப்ரீம் கோர்ட் கேள்வ

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசு தனது வேக்சின் கொள்கையை மறுசீராய்வு செய்ய வேண்டும், மக்களின் அரசியலமைப்பு உரிமைகளுக்கு எதிரானதாக இந்த கொள்கை உள்ளது, நீதிமன்றம் இதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என்று உச்ச நீதிமன்றம் விமர்சித்துள்ளது.

மத்திய அரசின் வேக்சின் கொள்கை பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது. மாநிலங்களுக்கு சரியாக வேக்சின் வாங்கி கொடுக்காதது, சர்வதேச அளவில் வேக்சின் டெண்டர் நடத்தி வேக்சின் பெற்றுத்தர முயற்சிக்காதது என்று மத்திய அரசின் வேக்சின் கொள்கை கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல்... +2 பொதுத்தேர்வை ரத்து செய்த குஜராத் அரசுகொரோனா அச்சுறுத்தல்... +2 பொதுத்தேர்வை ரத்து செய்த குஜராத் அரசு

இந்த நிலையில் உச்ச நீதிமன்றமும் மத்திய அரசின் வேக்சின் கொள்கையை விமர்சனம் செய்தது. உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் எல்.என்.ராவ் மற்றும் எஸ்.ரவீந்திர பட் ஆகிய மூன்று பேர் கொண்ட பெஞ்ச் அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தாமாக முன் வந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

விசாரணை

விசாரணை

உச்ச நீதிமன்றம் இன்று தனது விசாரணையில் , மத்திய அரசின் வேக்சின் அனைவருக்கமானதாக இல்லை. மத்திய அரசின் தாராளமயமாக்கப்பட்ட வேக்சின் கொள்கை காரணமாக ஏற்கனவே உடல் குறைபாடு உள்ளவர்கள், நோய் உள்ளவர்கள், மற்ற குறைபாடு கொண்டவர்களுக்கு வேக்சின் பெறுவதில் முன்னுரிமை கிடைப்பது கிடையாது.

வேக்சின்

வேக்சின்

மத்திய அரசு தனது வேக்சின் கொள்கை குறித்த புதிய பிராமண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும். மத்திய அரசின் வேக்சின் பாலிசி குறித்த அனைத்து விவரங்களையும், கோப்புகளையும் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தங்களின் வேக்சின் கொள்கையை மத்திய அரசு மறுசீராய்வு செய்ய வேண்டும்.

தேவை

தேவை

சர்வதேச அளவில் வேக்சின் தேவை அதிகமாக இருக்கிறது. வேக்சினை பெறுவதற்கு சர்வதேச அளவில் கடும் போட்டி நிலவி வருகிறது. அப்படி இருக்கும் போது மத்திய அரசின் இந்த வேக்சின் கொள்கை மூலம் போதுமான மக்களுக்கு வேக்சின் போட முடியாது.

எல்லோருக்கும் வேக்சின்

எல்லோருக்கும் வேக்சின்

டிசம்பர் 31ம் தேதி வரை எல்லோருக்கும் வேக்சின் கிடைக்கும் வகையில் திட்டத்தை வகுத்து மத்திய அரசு அதை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள் மத்திய அரசின் நிர்வாக கொள்கைகளால் மீறப்பட்டுள்ளன. நீதிமன்றம் இதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது.

ஒன்றிய பட்ஜெட்

ஒன்றிய பட்ஜெட்

மத்திய அரசு ஒன்றிய பட்ஜெட்டில் 35 ஆயிரம் கோடி ரூபாய் வேக்சின் வாங்க ஒதுக்கியது. இது எப்படி செலவு செய்யப்பட்டது என்று விளக்கம் தேவை. வேக்சின் வாங்குவதற்கு இந்த தொகை இதுவரை எவ்வளவு பயன்படுத்தப்பட்டது என்ற விளக்கம் தேவை. இந்த நிதியை வைத்து ஏன் 18-44 வயது கொண்ட எல்லோருக்கும் வேக்சின் போட கூடாது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

English summary
How Rs 35,000 crores earmarked for procuring vaccines spent so far asks Supreme court to Center.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X