ஓ இதுதான் மேட்டரா.! சந்திரயான் 2க்கும் சந்திரயான் 3க்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா.. அடடே ஆச்சரியம்
டெல்லி: சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு, இஸ்ரோ இப்போது அடுத்ததாகச் சந்திரயான் 3 விண்கலத்தை ஏவ உள்ளது. இதற்கு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் சந்திரயான் 2 மற்றும் சந்திரயான் 3 திட்டத்திற்கு இருக்கும் வேறுபாட்டைப் பார்க்கலாம்.
இஸ்ரோ நிறுவனம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சந்திரயான்-3 விண்கலத்தை வரும் ஜூலை 14ஆம் தேதி விண்ணில் ஏவ இருக்கிறது.
இஸ்ரோவின் வலிமையான ஜிஎஸ்எல்வி-எம்கே3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. சந்திரயான்-3இல் இருக்கும் ரோவரை நிலவில் தரையிறக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாக இருக்கிறது.

சந்திரயான் 3: இது சந்திரயான் திட்டத்தில் 3ஆவது ராக்கெட் ஆகும். கடந்த 2019இல் ஏவப்பட்ட சந்திரயான்-2 பெரும்பகுதி வெற்றியடைந்தாலும், அது நிலவில் தரையிறங்கும் போது கடைசி நேரத்தில் சிக்கல் ஏற்பட்டு அது மட்டும் தோல்வியில் முடிந்தது. இதற்கிடையே நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது சந்திரயான் திட்டத்தில் 3ஆவது விண்கலத்தை இஸ்ரோ நிலவுக்கு அனுப்புகிறது.
சந்திரயான் 2 மற்றும் 3 என இரண்டிற்கும் mission architecture ஒன்று தான் என்ற போதிலும் இரண்டிற்கும் இடையே சில முக்கிய வேறுபாடுகள் இருக்கவே செய்கிறது. சந்திரயான் -2 திட்டத்தில் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் மற்றும் ஆர்பிட்டர் இங்கிருந்து அனுப்பப்பட்டது. அதேநேரம் சந்திரயான் -3 திட்டத்தில் ஒரு லேண்டர் மற்றும் ரோவர் மட்டுமே விண்ணில் ஏவப்படும்.
என்ன காரணம்: சந்திரயான்-2இல் அனுப்பப்பட்ட ஆர்பிட்டார் இன்னும் பக்காவாக வானில் வட்டமிட்டு வருகிறது. இதனால் அந்த ஆர்பிட்டாரையே சந்திரயான்-3க்கும் பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். இதன் காரணமாகவே சந்திரயான் 3 திட்டத்தில் ஆர்பிட்டாரை அவர்கள் அனுப்பவில்லை. சந்திரயான் -2 லேண்டர் நிலவில் தரையிறங்குவது தோல்வியில் முடிந்த நிலையில், அதில் இருந்து தவறுகளைச் சரி செய்யும் வகையில் சந்திரயான் -3 திட்டத்தில் வேறு சில மாற்றங்களையும் அவர்கள் செய்துள்ளனர்.
இந்த முறை லேட்டணரில் அபாயத்தைக் கண்டறிவது & தவிர்க்கத் தனியாக கேமராக்கள் இருக்கிறது. இது ஆர்பிட்டருடன் ஒருங்கிணைந்து செயல்படும். நிலத்தில் இருக்கும் ஆய்வாளர்கள் இதன் மூலம் மிஷனை கட்டுப்படுத்தலாம், சந்திரயான்-2இல் இதில் ஒரு கேமரா மட்டுமே இருந்த நிலையில், சந்திரயான்-3இல் இதற்காக இரு அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
அதேபோல சந்திரயான்-2 ஆர்பிட்டரில் ஒன்பது அதிநவீன கருவிகள் இருந்தன. அவை இன்னுமே நிலவைச் சுற்றிச் செயல்பட்டு வருகிறது. இந்த ஆர்பிட்டராயே சந்திரயான்-3க்கு பயன்படுத்த முடிவு செய்துள்ளதால், இத்திட்டத்திற்கு எனத் தனியாக ஆர்பிட்டார் எதுவும் அனுப்பப்படவில்லை.
புதிய கருவிகள்: சந்திரயான்-3 மிஷன் லேண்டரில் கூடுதலாக லேசர் ரெட்ரோரெஃப்ளெக்டர் அரே என்ற கருவியும் அனுப்பப்படுகிறது, இது சந்திரன் அமைப்பின் இயக்கவியலைப் புரிந்துகொள்ள உதவும் கருவியாகும். மற்ற மூன்று பேலோடுகளும் சந்திரயான் 2 லேண்டரில் இருந்த அதே கருவிகளாகும்.
இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் கூறுகையில், "சந்திரயான் 2 தோல்வியில் முடிந்தது உண்மை தான். ஆனால் இதில் இருக்கும் ஆர்பிட்டார் இன்னும் சரியாகவே இருக்கிறது. நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டார் தகவல்களைச் சேகரித்து அனுப்பி வருகிறது. அதை வைத்த அடுத்த திட்டத்திற்கு ரெடியாகியுள்ளோம். மேலும், சந்திரயான் 2இல் எங்கே தவறு ஏற்பட்டது என்பதைக் கண்டறியும் அதையும் செய்து இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications