‛எமர்ஜென்சி'.. அரசின் அலர்ட் மெசேஜை ஆண்ட்ராய்டு - ஐபோனில் பெறுவது எப்படி? இதை முதல்ல ‛ஆன்' பண்ணுங்க
டெல்லி: நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான மோதல் முடிவுக்கு வந்துள்ளது. இருப்பினும் கடந்த 4 நாட்கள் பெரும் பிரச்சனையாக அமைந்து விட்டது. பாகிஸ்தானில் இருந்து ட்ரோன், ஏவுகணை வந்தபோதெல்லாம் ‛எமர்ஜென்சி'க்கான சைரன் ஒலி எழுப்பி மக்களை அரசு அலர்ட் செய்தது. இந்நிலையில் தான் அரசு தரும் எமர்ஜென்சி அலர்ட் மெசேஜ்களை ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்கள் வழியாக எப்படி பெறுவது? அரசின் எமர்ஜென்சி மெசேஜ்களை எப்படி உடனடியாக பெறுவது? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
கடந்த புதன்கிழமை முதல் நேற்று வரை கடும் மோதல் ஏற்பட்டு வந்தது. போராக வெடிக்கும் அச்சம் ஏற்பட்டது. இதையடுத்து நம் நாடு கொடுத்த பதிலடி தாக்குதலில் பயந்துபோன பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்தது. இதையடுத்து போர் நிறுத்தத்துக்கு நம் நாடு ஒப்புதல் கொடுத்தது.

இதனால் இன்று காலை முதல் நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான எல்லையில் அமைதி திரும்பி உள்ளது. கடந்த 4 நாட்களாக ஏவுகணை, ட்ரோன்கள் பறந்து வந்த ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர்.
இருப்பினும் கூட இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றம் இன்னும் முழுவதுமாக தணியவில்லை. இந்நிலையில் தான் அரசு அனுப்பும் எமர்ஜென்சி மெசேஜ்களை ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் உள்ளிட்ட செல்போனிலேயே பெறலாம். அதற்கு நாம் சில செட்டிங்கை மட்டும் ஆன் செய்ய வேண்டும்.
அதாவது ஆண்ட்ராய்டு செல்போன் வைத்திருப்பவர்கள் என்றால் செல்போனில் Settings செயலியை ஓபன் செய்ய வேண்டும். அதன் உள்ளே Safety and Emergency அல்லது Emergency Alerts என்பதை கிளிக் செய்ய வேண்டும். 3வதாக Wireless Emergency Alerts என்பதை கிளிக் செய்து அதில் உள்ள அனைத்து அலர்ட்டுகளையும் ஆன் செய்தால் போதும். மத்திய, மாநில அரசுகளின் அனைத்து எமர்ஜென்சி மெசேஜ்களும் ஆண்ட்ராய்டு செல்போனுக்கு வந்துவிடும்.
அதேவேளையில் ஆண்ட்ராய்டு செல்போன்கள் பல நிறுவனங்களின் பெயர்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் சில செல்போன்களில் மேற்கூறிய ஆப்ஷன்கள் கொஞ்சம் மாறுதலாக இருக்கும். அதன்படி Wireless Emergency Alerts என்ற ஆப்ஷன் அட்வான்ஸ்ட் செட்டிங்ஸ், மோர் செட்டிங்ஸ் அல்லது செல் பிராட்காஸ்ட் என்பதற்குள் இருக்கலாம்.
அதேபோல் ஐபோன் வைத்திருப்பவர்கள் என்றால் Settings உள்ளே சென்று Notifications என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன்பிறகு Government Alerts என்பதை கிளிக் செய்து Test Alerts என்பதை ஆன் செய்தால் போதும். அவசர காலங்களில் அரசு அனுப்பும் மெசேஜ்களை ஐபோனில் பெற முடியும்.
நம் நாட்டை பொறுத்தவரை கடந்த 4 நாட்களாக பாகிஸ்தான் ட்ரோன், ஏவுகணைகளை ஏவியது. இந்த தாக்குதல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. இருப்பினும் எதிரிகளின் தாக்குதல் முயற்சிக்கு முன்பாகவே எல்லையோர மக்களுக்கு சைரன் ஒலி வழங்கப்பட்டது. இதை கேட்டதும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று உயிர் தப்பினர்.
தற்போது நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான மோதல் நின்றாலும் கூட பதற்றம் என்பது தொடர்ந்து வருகிறது. இதற்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஆதரிப்பது தான். இதனால் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் இந்த எமர்ஜென்சி செட்டிங்கை ஆன் செய்து வைத்து கொள்வது நல்லது.












Click it and Unblock the Notifications