பெண் உறுப்புடன் பிறந்த ஆண்.. கருப்பை எல்லாம் அப்படியே.. ஸ்டன் ஆன மருத்துவர்கள்! அது எப்படி
ஆணாக பிறந்த குழந்தைக்கு திடீரென இரு பாலரின் பிறப்புறுப்பு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆணாகப் பிறந்த குழந்தைக்கு.. ஆணுறுப்பும் பெண் உறுப்பும் இருந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நம்மை சுற்றிலும் பல வினோதமான நிகழ்வுகள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. இப்போது சமூக வலைத்தளங்கள் இருப்பதால் இதுபோல நடக்கும் வினோதமான சம்பவங்கள் உடனே டிரெண்டிங் ஆகிறது.
மருத்துவத் துறையில் இதுபோல பல சம்பவங்கள் கடந்த காலங்களில் நடந்துள்ளன. ஒரே நேரத்தில் பல குழந்தைகளைப் பெற்றெடுக்கும் தாய், வாலுடன் பிறந்த குழந்தை எனப் பல வினோத சம்பவங்களைச் சொல்லலாம்.

குழந்தை
அதையெல்லாம் விஞ்சும்படியான ஒரு சம்பவம் இப்போது நடந்துள்ளது. அதாவது கர்ப்பமாக இருந்த இளம்பெண் ஒருவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், அந்த ஆண் குழந்தைக்குப் பெண்களுக்கு மட்டுமே இருக்கும் கருப்பை மற்றும் ஃபலோபியன் குழாய்கள் இருந்துள்ளன. அதாவது அந்த குழந்தைக்கு ஆண் மற்றும் பெண் இருவரின் பிறப்புறுப்புகளும் இருந்துள்ளது. இந்த வினோத சம்பவம் ஏதோ ஒரு நாட்டில் நடந்தது இல்லை. நமது இந்தியாவில் தான் நடந்தது..

உத்தரப் பிரதேசம்
உத்தரப் பிரதேசத்தின் ஃபரிதாபாத்தில் தான் இப்படியொரு குழந்தை பிறந்துள்ளது. இருப்பினும், இதனால் அந்த நபருக்கு வேறு எந்தவொரு பிரச்சினையும் இல்லை. இதனால் அவர் வழக்கம் போலவே இத்தனை ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். அவருக்கு அப்போது சுமார் 30 வயதாகிறது. இருப்பினும், அவரால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியவில்லையாம். இதன் காரணமாக அவர் மருத்துவர்களைச் சென்று பார்த்துள்ளார். பல கட்ட மருத்துவ சோதனைக்குப் பின்னரே அவருக்கு இந்த பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

அரிய மரபணு நோய்
மருத்துவ பரிசோதனைகளில் அவருக்கு முல்லேரியன் டக்ட் சிண்ட்ரோம் (பிஎம்டிஎஸ்) என்ற ஒரு அரிய மரபணு நோய் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இது ஆண்களை மட்டும் பாதிக்கும் பாலியல் வளர்ச்சியின் சீர்குலைவு நோயாகும். மிக மிக அரிய நோயான இது, உலகெங்கும் இதுவரை 300க்கும் குறைவானோருக்கு மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் அவர் ஆணாகப் பிறந்திருந்தாலும் கூட, கர்ப்ப காலத்தில் உருவான கோனாடல் கட்டமைப்புகளின் குறைபாடு காரணமாக அவருக்கு ஆண் மற்றும் பெண் என்று இரு வேறு இனப்பெருக்க உறுப்புகளும் இருந்துள்ளன.

ரோபோ ஆப்ரேஷன்
பெண்களுக்கு மட்டுமே இருக்கும் ஃபலோபியன் குழாய்கள், கருப்பைகள் அவருக்கு இருந்துள்ளது. அவருக்கு 30 வயதாகும் நிலையில், இப்போது தான் ஆப்ரேஷன் செய்து பெண் பிறப்பு உறுப்புகளை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரபல மருத்துவமனையில் அவருக்கு இந்த சிக்கலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது இனப்பெருக்க அமைப்புக்குச் சேதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க ரோபோ உதவியுடன் கீஹோல் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

அபாயம்
பெண் அமைப்புகளுக்கு அருகே சிறுநீர் வெளியேறும் விகிதம் அதிகமாக இருந்ததால்.. சிறுநீர் குழாய்களுக்கு ஏற்படும் சேதத்தைக் குறைக்க மருத்துவர்கள் முயன்றனர். இது குறித்து டாக்டர் மானவ் சூர்யவன்ஷி கூறுகையில், "இது வயிற்றுக்குள் இருந்ததால்.. இதில் நான்கு மடங்கு அபாயம் அதிகம் இருந்தது. உடலில் இருந்து சிறுநீர் வெளியேறுவதைக் கட்டுப்படுத்தும் தசைகள் இவருக்கு முழுமையாக ஓய்வெடுக்காது. இதனால், சிறுநீர்ப்பை முழுவதுமாக காலியாகாது. இதனால் மீண்டும் மீண்டும் அவருக்குச் சிறுநீர் பாதை தொற்று, கற்கள் மற்றும் வெற்றிடத் தொந்தரவுகளை ஏற்பட்டு வந்தது" என்று அவர் தெரிவித்தார்.

வெற்றிகரமான ஆப்ரேஷன்
ரோபோடிக் அறுவை சிகிச்சை அணுகுமுறை மூலம், ஃபலோபியன் குழாய்கள், கருப்பை, குறைபாடுள்ள பிறப்புறுப்புகள் போன்ற அனைத்து அசாதாரண அமைப்புகளும் வெற்றிகரமாக அகற்றப்பட்டன என்று மருத்துவர்கள் கூறினார். ஆப்ரேஷன் வெற்றிகரமாக முடிந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு அவரை மருத்துவ கண்காணிப்பில் வைத்துள்ளனர். அதன் பின்னர், அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.. இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications