டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா இரண்டாம் அலை.. எப்படி வெல்லப் போகிறது இந்தியா?

Google Oneindia Tamil News

டெல்லி : இந்தியா கொரோனா 2வது அலையை எப்படி வெல்லப் போகிறது என்ற மலைப்பு மக்கள் மனதில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வருகிறது. தற்போது நாள் ஒன்றிற்கு 4 லட்சம் பேர் என்ற வீதத்தில் தொற்று பாதிப்பும், 3000 க்கும் என்ற வீதத்தில் இறப்பு விகிதமும் இருந்து வருகிறது. இதற்கிடையில் மே 3 வது வாரத்தில் ஒரு நாளைக்கு 40 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என கான்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

பிப்ரவரி மாதம் வரை தினசரி பாதிப்பு எண்ணிக்கை 500 என்ற அளவிலும், உயிரிழப்போர் எண்ணிக்கை இரட்டை இலக்க எண்ணிக்கையிலேயே இருந்தது. ஆனால் மார்ச், ஏப்ரல் மாதங்களில் இந்த அளவிற்கு கொரோனா பரவல் வேகமெடுக்க என்ன காரணம்? அரசுகள் அதிக தளர்வுகளை அறிவித்தது, மக்கள் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை பின்பற்றாதது, தேர்தல் சமயத்தில் அதிக பேர் கூடுவதை தடுக்காமல் விட்டது என இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது.

ஆனால் கொரோனா முதல் அலை ஏற்பட்ட போது இருந்த நிலை, தற்போது இரண்டாவது அலையின் நிலையை ஆழ்ந்து சிந்தித்தால் இதன் பின்னணியில் உள்ள முரண்பாடுகள், குழப்பங்கள் பற்றிய அடுக்கடுக்காக பல கேள்விகள் நம் மனதில் எழும். அதைப் பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்க போகிறோம்.

அரசின் செயலின்மையை மறைக்க முஸ்லீம்கள் மீது பழி.. பெங்களூர் பாஜக எம்எபி தேஜஸ்விக்கு காங்கிரஸ் கண்டனம்அரசின் செயலின்மையை மறைக்க முஸ்லீம்கள் மீது பழி.. பெங்களூர் பாஜக எம்எபி தேஜஸ்விக்கு காங்கிரஸ் கண்டனம்

 உலக நாடுகளின் நிலை

உலக நாடுகளின் நிலை

கடந்த ஆண்டு இதே சமயம், கிட்டதட்ட உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவால் பாதிக்கப்பட்டன. அப்போது ஒரு சில நாடுகளுக்கு செல்ல இந்தியா தடை விதித்தது. ஆனால் இன்று மற்ற நாடுகள் இந்தியா செல்ல தடை விதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா போன்ற நாடுகளில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2000 க்கும் கீழும், உயிரிழப்பு 1000 க்குள்ளும் உள்ளது. இதே நிலை தான் உலகின் மற்ற நாடுகளிலும்.

 இந்தியாவில் இரண்டாம் அலை

இந்தியாவில் இரண்டாம் அலை

இன்னும் சரியாக சொல்ல வேண்டுமானால் இந்தியா தவிர வேறு எந்த நாட்டிலும் கொரோனா இரண்டாம் அலை ஏற்படவில்லை. இந்திய துணை கண்டத்தில் பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், பூடான் போன்ற நாடுகளிலோ, வேறு எந்த ஆசிய நாட்டிலோ இரண்டாம் அலை ஏற்படவில்லை. 2 மாதங்களுக்கு முன்பு வரை இந்த நாடுகளும் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவை தான். ஆனால் இரண்டாம் அலை ஏற்படவில்லை.

 அடுக்கடுக்காக எழும் கேள்விகள்

அடுக்கடுக்காக எழும் கேள்விகள்

அப்படியானால் இந்த நாட்டில் இருப்பவர்கள் இந்தியர்களை விட சிறப்பான வாழ்க்கை முறையை வாழ்கிறார்களா? அல்லது பெருந்தொற்று ஏற்படாமல் இருக்க எப்போதும் மாஸ்க் அணிந்து கொண்டே இருக்கிறார்களா? தட்பவெப்பநிலை, தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பு மருந்துகள் கையாளப்பட்டு விட்டு, கொரோனா ஒழிக்கப்பட்டு விட்டதா?

 ஐசிஎம்ஆர் விளக்கம்

ஐசிஎம்ஆர் விளக்கம்

கொரோனா முதல் அலையின் போது, இந்த வைரஸ் தொற்றால் இந்தியாவில் கோடிக்கணக்கானவர்கள் பாதிக்கப்படுவார்கள் என இந்திய மருத்துவ ஆய்வு கழகம் கூறியது. ஆனால் அந்த அளவிற்கு நோய் பரவவில்லை. இதற்கு இந்தியர்களின் உணவு முறையால் அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து விட்டதால் இந்தியர்கள், குறிப்பாக தென்னிந்தியர்கள் அதிக அளவில் பாதிக்கப்படவில்லை என விளக்கம் சொல்லப்பட்டது.

 இரண்டாம் அலை வந்தது எப்படி

இரண்டாம் அலை வந்தது எப்படி

அப்படி இந்தியர்கள் உடலில் பாரம்பரிய உணவு முறை, பாரம்பரிய மருத்துவ முறையால் நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையாக உருவானது என்றால் இரண்டாம் அலை உருவானதும், இந்த அளவிற்கு தீவிரமானதும் எப்படி? கொரோனா பரவ துவங்கியது முதல் இன்று வரை உலக நாடுகளின் நிலையுடன் இந்தியாவின் நிலையை ஒப்பிடும் போது இந்த கேள்வி அனைவரின் மனதிலும் எழுகிறது.

 வாரி வழங்கிய இந்தியா

வாரி வழங்கிய இந்தியா

கடந்த ஆண்டு, கொரோனா தடுப்பு மருந்துகள் இந்தியாவில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு, இந்தியாவில் பயன்பாட்டை துவங்கியதுடன் உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன. பல நாடுகளுக்கு இந்தியா, நட்பு அடிப்படையில் இலவசமாக மருந்துகளை அனுப்பியது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் பாரம்பரிய மருத்துவ முறைகள், உணவுகள் ஆகியவற்றை பல நாடுகளும் பின்பற்ற துவங்கின. இந்தியா, கொரோனாவை கையாண்ட விதத்தை உலக நாடுகள் வியந்து பாராட்டின.

 தலைகீழான நிலை

தலைகீழான நிலை

ஆனால் இன்று, கொரோனா இரண்டாம் அலையில் இருந்து விடுபட மருந்து, ஆக்சிஜன் என பலவற்றிற்கும் மற்ற நாடுகளிடம் இந்தியா கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்தனைக்கு தற்போது தடுப்பு மருந்துகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தும். இந்தியாவில் தடுப்பு மருந்திற்காக மக்கள் நாள் கணக்கில் வரிசையில் காத்துக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலை என்பதே பாரம்பரிய மருத்துவத்திற்கு அதிராக மருத்துவ மாஃபியாக்கள் செய்யும் சதி என சமூக வலைதளங்களில் சில கருத்து உலா வருகிறது.

 சீனாவிடம் தடுப்பு மருந்து

சீனாவிடம் தடுப்பு மருந்து

இது ஒருபுறம் இருந்தாலும், கொரோனா வைரஸ் உற்பத்தியானது சீனாவின் வூகான் நகரம் தான் என கூறப்பட்டது. ஆனால் தற்போது சீனாவிடம் இருந்து 2 தடுப்பு மருந்துகளை பெற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக செய்தி வந்துள்ளது. கொரோனா பரவலுக்கு முன்பு வரை தொழில்துறை, தொழில்நுட்பம் என பலவற்றிலும் சீனாவிற்கு மாற்றாக இந்தியா என்ற நிலை உலக அரங்கில் உருவாகி இருந்தது.

 ஸ்தம்பித்து போன இந்தியா

ஸ்தம்பித்து போன இந்தியா

ஆனால் தற்போது உருவெடுத்திருக்கும் கொரோனா இரண்டாம் அலை இந்திய பொருளாதாரம், வெளியுறவுக் கொள்கை என அனைத்தையும் மிகக் கடுமையாக பாதித்துள்ளது. அதிலும் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு சர்வதேச நாடுகள் உடனான இந்தியாவின் உறவை ஸ்தம்பிக்க வைத்தது. நாட்டை ஆள்பவர்கள் முதல் கடைக்கோடி சாதாரண குடிமகன் வரை கொரோனா பற்றி சிந்தனை, இதிலிருந்து தங்களை எப்படி காப்பாற்றிக் கொள்வது என்பதில் மட்டும் தான் கவனம் உள்ளது. மற்ற எதை பற்றியும் சிந்திக்க முடியாத நெருக்கடி நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

 இந்தியாவிற்கு எதிரான பயோ வாரா

இந்தியாவிற்கு எதிரான பயோ வாரா

உலக அரங்கில் பலமான ஆளுமையாக மாற வேண்டும் என்ற இந்தியாவின் வளர்ச்சி திட்டமும் முடங்கி உள்ளது. பெருந்தொற்று துவங்குவதற்கு முன் அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக போர் மூளும் நிலை இருந்தது. தற்போது அது என்ன ஆனது? இரு நாடுகம் இடையேயான பிரச்சனை தீர்க்கப்பட்டு விட்டதா ? உலக நாடுகளுடன் இந்தியாவின் நிலையை ஒப்பிடுகையில் இது திட்டமிட்டே இந்தியாவிற்கு எதிராக நடத்தப்படுகின்ற பயோ வாரா என்ற கேள்வியும், சந்தேகமும் அனைவருக்குள்ளும் எழுகிறது.

English summary
Is corona second wave has bio war against india ?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X