நான் தப்பு பண்ணலாம்.. ஆனால், கெட்ட எண்ணத்தில் செய்ய மாட்டேன் -பிரதமர் மோடி NDA கூட்டத்தில் ஓபன் டாக்
டெல்லி: டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தான் தவறு செய்திருந்தாலும் தவறான எண்ணத்தில் அதை செய்தது இல்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து இருக்கிறார்.
2024 மக்களவைத் தேர்தல் தொடர்பாக இன்று ஒரே நாளில் காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூட்டணியின் பெயர் இந்தியா என்று பெயரிடப்பட்டு உள்ளது. அதாவது Indian National Developmental Inclusive Alliance என்று பெயரிடப்பட்டு உள்ளது.

எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அதே நாளான இன்று டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெறும் என்று பாஜக அறிவித்தது. அதை தொடர்ந்து இன்று 39 கட்சிகள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. இதில் 2024 நாடாளுமன்ற தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நேர்மறையாவ வளர்ச்சியை பார்க்கிறது. எதிர்மறை அரசியல் செய்யும் கூட்டணி வீழ்த்தப்படும். உள்நாட்டு பிரச்சனைகளில் வெளிநாட்டு சக்திகளை நாம் தொடர்புகொண்டது கிடையாது.
கட்டாயத்தின் பேரில் இந்த என்.டி.ஏ. கூட்டணி உருவாகவில்லை. மாறாக மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்பதற்காக உருவான கூட்டணி இது. அவரவர் செய்த பணிகளுக்கான புகழும், பாராட்டும் சமமாக பகிர்ந்தளிக்கப்படுகிறது. என்.டி.ஏ.வை பொறுத்தவரை நாட்டுக்கும், முன்னேற்றத்துக்கும், மக்களுக்கு அதிகாரமளிப்பதே முதன்மை நோக்கம்.
நிலையான அரசாங்கம் அமைந்து உள்ளதால் இந்தியாவை உலக நாடுகள் உற்று நோக்குகின்றன. பாதுகாப்புத் துறை தொடங்கி சுரங்கத்துறை வரை அனைத்து துறைகளிலும் பெண்களை தலைமையாக கொண்டு வளர்ச்சியடைவதறான வழிகளை என்.டி.ஏ. திறந்துவிட்டு உள்ளது.
யுபிஏ ஆட்சிகாலத்தில் ஏழைகளின் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. அதை என்.டி.ஏ. அரசு தடுத்து நிறுத்தி உள்ளது. அரசியல் ரீதியாக எதிரணியில் உள்ளவர்களுக்கும் பத்ம விருதுகளை வழங்கி என்.டி.ஏ. கவுரவித்தது. 90 களில் கூட்டணிகளின் மூலமாக காங்கிரஸ் நாட்டை நிலையற்றதாக்கி வந்தது. ஆட்சியமை அமைத்து கவிழ்த்து வந்தது.
என்.டி.ஏ. நாட்டு மக்களை ஒன்று திரட்டுகிறது. எதிர்க்கட்சிகளை நாட்டு மக்களை பிளவுபடுத்துகிறார்கள். 2024 மக்களவைத் தேர்தலில் என்.டி.ஏ.வின் வாக்கு சதவீதம் 50% ஐ தாண்டும். இந்தியா மீதுள்ள நம்பிக்கையால் மற்ற நாடுகள் நம்முடன் ஒப்பந்தம் செய்துகொள்கின்றன. நான் தவறுகளை செய்வேன். ஆனால், கெட்ட எண்ணத்தில் செய்தது இல்லை." என்றார்.












Click it and Unblock the Notifications