மணிப்பூர்: மைத்தேயி, குக்கி பெண்களுக்கு ராஜ்யசபா எம்பி பதவி- ஜனாதிபதிக்கு ஐடியா தந்த "இந்தியா" அணி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மணிப்பூரில் இனவன்முறைகளால் பாதிக்கப்பட்ட மைத்தேயி மற்றும் குக்கி இனப் பெண்களில் 2 பேரை ராஜ்யசபா நியமன எம்.பி.க்களாக ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமிக்க வேண்டும் என 26 எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணி எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.

மணிப்பூரில் 3 மாதங்களாக வன்முறைகள் நீடித்து வருகின்றன. மணிப்பூரில் மைத்தேயி மற்றும் குக்கி இன மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் தர வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் நாடாளுமன்றம் 10-வது நாளாக முடங்கி உள்ளது.

I.N.D.I.A demands to nominate 2 Manipuri women to Rajya Sabha

முன்னதாக எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணி எம்பிக்கள் குழு மணிப்பூர் சென்று நிலைமைகளை ஆய்வு செய்தது. இதனைத் தொடர்ந்து இன்று டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை "இந்தியா" கூட்டணி எம்.பிக்கள் குழு சந்தித்தது.

இச்சந்திப்பின் போது ஜனாதிபதியிடம் தரப்பட்ட கோரிக்கை மனுவின் சாரம்சம்: மணிப்பூர் விவகாரத்தில் ஜனாதிபதி உடனே எவ்வித தாமதமும் இல்லாமல் தலையிட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் தங்களது கடமையை செய்ய வலியுறுத்த வேண்டும். பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் இது குறித்து பேசுவதற்கு ஜனாதிபதி அழுத்தம் தர வேண்டும். மேலும் மைத்தேயி, குக்கி என மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்கள் 2 பேரை ராஜ்யசபா எம்.பி.க்களாக நியமனம் செய்ய வேண்டும்.

இந்த சந்திப்புக்குப் பின் செய்தியாளர்கள்டம் தலைவர்கள் கூறியதாவது:

காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே: "இந்தியா" கூட்டணியின் 31 பேர் இன்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்தோம். மணிப்பூர் சென்று நிலைமைகளை ஆய்வு செய்த 21 எம்.பிக்களும் ஜனாதிபதி திரவுபதி முர்விடம் அம்மாநில நிலவரத்ஹ்டை விவரித்தனர். இது தொடர்பாக மனு ஒன்றையும் ஜனாதிபதியிடம் கொடுத்தோம். குறிப்பாக மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்தும் அதில் தெரிவித்திருந்தோம். எங்களது பிரதான கோரிக்கையே பிரதமர் மோடி மணிப்பூர் மாநிலத்துக்கு சென்று பார்வையிட்டு அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்பதுதான். அதனையும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம். ஹரியானாவில் தற்போது நடைபெற்று வரும் வன்முறைகள் தொடர்பாகவும் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்றோம்.

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி (காங்கிரஸ்): ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் மணிப்பூரில் எங்கள் கூட்டணி எம்.பி.க்கள் குறித்து ஆய்வு செய்த விவரங்களை விவரித்தது. மணிப்பூரில் ஒவ்வொரு நாளும் நிலைமை மோசமாகி வருவதையும் சுட்டிக்காட்டினோம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+