பாகிஸ்தானில் அடித்து நொறுக்கப்பட்ட சீன தயாரிப்பு ரேடார்கள்! இந்திய விமானப்படை கொடுத்த அப்டேட்
டெல்லி: இந்தியா-பாகிஸ்தான் சண்டையின்போது, பாகிஸ்தான் பயன்படுத்திய சீனாவின் HQ-9 ரேடார்கள் அடித்து நொறுக்கப்பட்டது என்று இந்திய விமானப்படை தெரிவித்திருக்கிறது.
தங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்று பாகிஸ்தான் கூறி வரும் நிலையில், இந்திய விமானப்படை கொடுத்து அப்டேட் உண்மையை வெளி கொண்டு வந்திருக்கிறது.

இந்திய விமானப்படை லாகூரில் உள்ள ஒரு ரேடார் தளத்தை தாக்கியது. இந்த விமானப்படை தளத்தை பாதுகாக்க பாகிஸ்தான் இந்த HQ-9 வான் பாதுகாப்பு அம்சத்தை பயன்படுத்தியிருந்தது. 100-200 கி.மீ சுற்றுவட்டாரத்தில் எந்த விமானம்/எவுகணைகள் வந்தாலும் அதை தாக்கி அழிக்கும் திறன் இந்த வான் பாதுகாப்பு அம்சத்திற்கு இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் இதனை இந்திய விமானப்படை அசால்ட்டாக அடித்து நொறுக்கியிருக்கிறது. இதனை விமானப்படையின் செயல்பாட்டு இயக்குநர் ஜெனரல் ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி கூறியிருக்கிறார்.
லாகூர் ரேடார் தளம் மட்டுமல்லாது கராச்சியில் உள்ள மாலிர் கன்டோன்மென்ட் மீதும் தாக்குதல் நடதப்பட்டிருப்பதை நேற்று மாலை நடந்த கூட்டத்தில் பாரதி விவரித்திருக்கிறார். மாலிர் கான்ட் என்பது கராச்சி நகரத்திலிருந்து சுமார் 35 கி.மீ தொலைவில் உள்ள ஒரு இராணுவத் தளமாகும். இந்த கன்டோன்மென்ட்டில் பாகிஸ்தான் தனது வான் ஏவுதளத்தை வைத்திருந்தது. இந்த இரண்டு தவிர, பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குஜ்ரன்வாலாவுக்கு அருகில் உள்ள மற்றொரு இடத்தையும் இந்திய விமானப்படை குறி வைத்ததாகவும் பாரதி கூறியிருக்கிறார்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் நிச்சயம் பதிலடி கொடுக்கும் என்று தெரியும். இருப்பினும் அந்நாட்டின் கடற்படையை ஒடுக்குவதற்கு நமது போர் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் கடற்படை விமானங்கள் கராச்சி துறைமுகத்திற்கு வெளியே தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது என்று வைஸ் அட்மிரல் ஏ.என். பிரமோத் கூறியுள்ளார்.
"தாக்குதல் நடத்த தேர்ந்தெடுக்கப்பட்ட நேரத்தில், இந்திய கடற்படை முழு தயாரிப்புடன் ரெடியாக இருந்தது. எனவேதான அவர்களால் திருப்பி நம்மை தாக்க முடியவில்லை" என்று கூறியுள்ளார்.
இந்திய விமானப்படை பாகிஸ்தானின் F-16 மற்றும் JF-17 ரக விமானங்களை சுட்டு வீழ்த்தியிருக்கிறது. மட்டுமல்லாது பாகிஸ்தான் விமானப்படை தளத்தில் சுமார் 20%ஐ தாக்கி அழித்திருக்கிறது.
கடந்த ஏப்.22ம் தேதி ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதிலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் எனும் ராணுவ நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் இந்திய ராணுவம் தாக்குதலை நடத்தியது. இதை தனக்கு எதிரான தாக்குதலாக கருதி பாகிஸ்தான் வரிந்துக்கட்டி வந்தது. அனால் இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் அது வாலை சுருட்டிக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications