உண்மையை பேசினால் தேச துரோகிகளா.. அர்னாப்பும், கங்கனாவும் தேசியவாதிகளா? சஞ்சய் ராவத் சரமாரி கேள்வி
டெல்லி: உண்மையை பேசுபவர்கள் தேச துரோகிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள் என்று, ராஜ்யசபாவில், சிவ சேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் குற்றம் சாட்டினார்.
அர்ணாப் கோஸ்வாமியும், கங்கனா ரணாவத்தும்தான், தேசியவாதிகளா? என்றும் சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பினார்.

நேற்று, தர்மேந்திர பிரதான் (மத்திய அமைச்சர்), 'உண்மையை காது கொடுத்துக் கேளுங்கள்' என்றார். கடந்த ஆறு ஆண்டுகளாக, உண்மைகள் என்று ஜோடித்து சொல்லப்பட்ட பொய்களை நாங்கள் கேட்டு வருகிறோம். ஆனால், இன்று, யாராவது உண்மையை பேசினால், அவர் ஒரு துரோகி என்று முத்திரை குத்தப்படுகிறார்கள்.
ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் மற்றும் காங்கிரஸ் எம்.பி. சஷி தரூர் ஆகியோரை ஏன் தேச துரோகிகள் என்று முத்திரை குத்துகிறார்கள்.
தேசத் துரோகத்தைத் தவிர அனைத்து தண்டனை பிரிவுகளையும் சிஆர்பிசியிலிருந்து அரசு நீக்கியிருக்கிறது என்று நினைக்கிறேன்" என்று சஞ்சய் ராவத் கூறினார்.
விவசாய இயக்கத்தை அசிங்கப்படுத்த நமது அரசு சதி செய்வது நாட்டுக்கு சரியானதல்ல. ஜனவரி 26 சம்பவங்களால் நாம் அனைவரும் வெட்கப்படுகிறோம். ஆனால் இந்த சம்பவத்திற்கு காரணமான தீப் சித்து யார்? பல விவசாயிகள் ஜனவரி 26 முதல் காணவில்லை. என்கவுண்டரில் காவல்துறையினர் அவர்களைக் கொன்றார்களா?
யார் ஒரு தேசியவாதி? அர்னாப் கோஸ்வாமி? கங்கனா ரனாவத்? ஆகியோர்தானா. அர்னாப் கோஸ்வாமி அரசு ரகசியங்களை வெளியே போட்டு உடைத்துள்ளார். பாலகோட் தாக்குதல் குறித்து அவருக்கு முன்பே தெரியும். ஆனால் நீங்கள் அவருக்கு அடைக்கலம் தருகிறீர்கள்.
பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு உத்தர பிரதேச விவசாயிகள் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் சார்பாக போராடுகிறார்கள். அவர்கள் துரோகிகள் அல்ல. அவர்கள் காலிஸ்தானியர்கள் அல்ல. இவ்வாறு சஞ்சய் ராவத் பேசினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications