Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரத்த ஆறு ஓடும் என எச்சரித்த பாக். அரசியல் தலைவர்! கண் சிவந்த சசி தரூர்! கடும் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் ரத்த ஆறு ஓடும் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் எச்சரித்திருந்தார். இவரது கருத்துக்குக்கு கண்டனம் தெரிவித்துள்ள சசிதரூர், "அப்படி மட்டும் நடந்தால் பாகிஸ்தானுக்குதான் பாதிப்பு அதிகம் ஏற்படும்" என்று கூறியுள்ளார்.

தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக இந்தியா சில உறுதியான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது பாகிஸ்தானை உசுப்பேற்றியிருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

Shashi Tharoor Bilawal Bhutto Pakistan war

பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி, இந்தியா எடுத்த நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். குறிப்பாக சிந்து நதிநீரை இந்தியா நிறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அவர், இதனால் இந்தியாவில் இனி ரத்தம் வடியும் என்று தடித்த வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தார். ஏற்கெனவே இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ள நிலையில், இவர் பேசியிருப்பது இந்த பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் இருந்திருக்கிறது.

இவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், "இது வெறுப்பு பேச்சு. இந்தியர்களை கொலை செய்தால் அதன் விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும். பாகிஸ்தான் எதிர் விளைவுகளை அதிக அளவில் அனுபவிக்க வேண்டி வரும். நாம் யாரையும் காயப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நம் மீது தாக்குதல் நடக்கும்போது, பதிலடி மிக கடுமையாக இருக்கும். பாகிஸ்தானின் நடவடிக்கையை பாருங்கள். கடந்த 25 ஆண்டுகளில் ஒரே மாதிரியான முறையைதான் அந்நாடு பின்பற்றி வருகிறது.

பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆயுதம் கொடுக்கப்பட்டு அவர்கள் இந்திய எல்லைக்குள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். தாக்குதல் நடந்த பின்னர், இந்த தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று அந்நாடு கழன்றுக்கொள்கிறது. இருப்பினும் விசாரணை அமைப்புகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் விசாரணையில் பாகிஸ்தானுக்கும் இந்த தாக்குதல்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 2016ம் ஆண்டு உரி தாக்குதலுக்குப் பிறகு இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக்-ஐ நடத்தியது. 2019ம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாலக்கோட் விமான தாக்குதல் நடந்தது. இப்போது இதைவிட பெரிய தாக்குதலை பாகிஸ்தான் மீது இந்தியா நடத்த வாய்ப்பு இருக்கிறது. ஏற்கெனவே சில நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டிருக்கிறது.

டிப்ளமாட்டிக் நடவடிக்கைகள்
பொருளாதார தடைகள்
மறைமுக ராணுவ நடவடிக்கை

உள்ளிட்டவற்றை மேற்கொண்டிருக்கிறது. இருப்பினும் வெளிப்படையான ராணுவ தாக்குதல்களை தவிர்க்க முடியாது" என்று சசிதரூர் கூறியிருக்கிறார்.

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வந்திருக்கும் பாகிஸ்தானியர்களுக்கான விசாக்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. எனவே இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதே நேரம், இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தான் ராணுவ ஆலோசகர்களும் வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. இது டிப்ளமாட்டிக் நடவடிக்கையாகும்.

அதேபோல பாகிஸ்தானுடனான வர்த்தக கதவுகள் அனைத்தையும் இந்தியா மூடியிருக்கிறது. இது பொருளாதார நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. எல்லை பகுதியில் அதிக அளவில் வீரர்களை குவித்தல், தாக்குதலுக்கு வாய்ப்புள்ள இடங்களை அடையாளம் காணுதல் என இந்திய ராணுவம் பல மறைமுக நடவடிக்கையில் இறங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+