பெயரை மாற்றினால் வீடு சொந்தமாகிவிடுமா? சீனா சொல்வதால் எதுவும் மாறாது.. ஜெய்சங்கர் கொடுத்த விளக்கம்
டெல்லி: உங்கள் வீட்டின் பெயரை நான் மற்றினால் வீடு என்னுடையது ஆகிவிடுமா?அருணாசல பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீனா பெயரை மாற்றுவது உரிமை கொண்டாடுவது ஆகாது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
ஆசியாவில் சர்வ வல்லமை பொருந்திய நாடாக வலம் வர துடிக்கும் சீனாவின் கனவுக்கு முட்டுக்கட்டை போடும் நாடாக இந்தியாவே உள்ளது. இதனால், இந்தியா மீது கடும் எரிச்சலில் உள்ள சீனா, அவ்வப்போது எலையில் வாலாட்டி வருகிறது.

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான அருணாசல பிரதேசத்தை தங்களுக்கு சொந்தமானது என அடாவடி காட்டும் சீனா அவ்வப்போது அத்துமீறலிலும் ஈடுபட்டு வருகிறது. இதற்கு இந்தியாவும் தக்க பதிலடி கொடுக்க தவறுவது இல்லை. இந்த நிலையில், அருணாசல பிரதேசத்தின் 30 இடங்களுக்கு பெயரை மாற்றி சீனா அடாவடி காட்டியுள்ளது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அருணாசல பிரதேச எல்லைக் கட்டுப்பாடு அருகே ராணுவம் கண்காணிப்பில் உள்ளது. அருணாசல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒரு அங்கம் தான். உங்கள் வீட்டின் பெயரை நான் மற்றினால் வீடு என்னுடையது ஆகிவிடுமா?
அருணாசல பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீனா பெயரை மாற்றுவது உரிமை கொண்டாடுவது ஆகாது." என்றார். எப்போதும் இந்தியாவுடன் எல்லையில் அத்துமீறல் போக்கினை கையாண்டு வரும் சீனா, அத்துமீறல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருக்கிறது. கல்வான் பகுதியில் ஏற்பட்ட மோதல் இந்தியா சீனா இடையே பிளவை ஏற்படுத்தியது.
இதேபோல் இந்தியாவுக்குச் சொந்தமான பல பகுதிகளைச் சீனா தனக்குச் சொந்தமானது என்கிறது. எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் சீனா இந்தியாவின் சில பகுதிகளை தங்களுக்கு சொந்தம் என்று கூறி வருகிறது. அந்த வகையில் தான் தற்போது இந்தியா சீன எல்லையில் உள்ள அருணாசல பிரதேச மாநிலத்தின் 30 இடங்களுக்குச் சீன பெயர் மாற்றம் செய்துள்ளது.
இது குறித்த அறிவிப்பு சீன உள்விவகார துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டு இருப்பதாக அந்நாட்டின் சவுத் சீனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. அருணாச்சலப் பிரதேசம் பகுதியில் உள்ள பல கிராமங்களுக்கு புதிய பெயர்கள் என்று சீனா ஒரு லிஸ்டை அறிவித்துள்ளது. இந்தியாவுக்குச் சொந்தமான அருணாச்சல பிரதேசத்தை தனக்குச் சொந்தம் எனச் சொல்லும் சீனா, அப்பகுதியை ஜாங்னன் என்று அழைக்கிறது.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications