டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஏடிஎம்களில் 2 முறை பணம் எடுக்க 12 மணி நேரம் கேப்.. வரப்போகிறது புது திட்டம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    ஏ.டி.எம் மையத்தில் இருந்து மின்சாரம் திருட்டு..!

    டெல்லி: 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஏடிஎம்களில் பணம் எடுத்தால் ஒடிபி அவசியம் என்ற திட்டத்தை கொண்டு வங்கிகள் பரிலீசித்து வருகின்றன. ஏற்கனவே கனரா வங்கி இந்த திட்டத்தை தொடங்கிவிட்டது.

    இனி ஏடிஎம்களில் பணம் எடுக்க கட்டாயம் உங்கள் மொபைல் போன் தேவைப்படும். உங்கள் செல்போன் எண்ணிற்கு அனுப்பபடும் ஒடிபி இருந்தால் மட்டுமே பணம் எடுக்க முடியும் என்ற நிலை வர வாய்ப்பு உள்ளது.

    அதிகரித்து வரும் ஏடிஎம் கார்டு மோசடிகளை தடுக்க வங்கிகள் புதிய திட்டங்களை முன்னெடுக்க உள்ளன.

    இ.யூ. முஸ்லிம் லீக் புதுச்சேரி மாநில தலைவர் அஹமது ஜவாஹிர் காலமானார்.. காதர் மொகிதீன் இரங்கல்இ.யூ. முஸ்லிம் லீக் புதுச்சேரி மாநில தலைவர் அஹமது ஜவாஹிர் காலமானார்.. காதர் மொகிதீன் இரங்கல்

    ஒடிபி இருந்தால் பணம்

    ஒடிபி இருந்தால் பணம்

    ஏற்கனவே கனரா வங்கி ரூ.10 ஆயிரத்துக்கு மேல் ஏடிஎம்களில் பணம் எடுத்தால் ஒடிபி அவசியம் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தை அனைத்து வங்கிகளும் செயல்பாட்டுக்கு கொண்டுவருவது பற்றி பரிலீசித்து வருகின்றன.

    மொபைல் ஆப் ஊக்கம்

    மொபைல் ஆப் ஊக்கம்

    கடந்த சில நாள்களுக்கு முன்பு பாரத ஸ்டேட் வங்கி சேர்மன் ரஜ்னீஸ் குமார்,அண்மையில் பேசும் போது, நீண்ட காலமாக நடக்கும் ஏடிஎம்களை அடிப்படையாக கொண்ட பணப்பரிவர்த்தனைகளை முடிவுக்கு கொண்டு வந்து, மொபைல் ஆப் மூலம் பண பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க ஆலோசித்து வருகிறோம் என கூறியிருந்தார்.

    வங்கி பிரதிநிதிகள் ஆலோசனை

    வங்கி பிரதிநிதிகள் ஆலோசனை

    இந்நிலையில் வங்கி ஏடிஎம்களில் நடக்கும் மோசடிகளை தடுப்பது குறித்த வங்கிகளின் பிரதிநிதிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஏடிஎம்களில் நள்ளிரவில் குறிப்பிட்ட நேரத்திற்கு பணம் எடுப்பதற்கு தடை விதிக்கலாமா என்று பரிசீலிக்கப்பட்டது.

    பணம் எடுக்க இடைவெளி

    பணம் எடுக்க இடைவெளி

    மேலும் ஒரு முறை பணம் எடுத்தால் அடுத்த முறை பணம் எடுக்க குறைந்தபட்சம் 6 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரம் வரை காத்திருக்க கட்டுப்பாடு விதிக்கலாமா என்றும் ஆலோசிக்கப்பட்டது. இதேபோல் ஏடிஎம்களில் பணம் எடுத்தால் ஒடிபி அவசியம் என்ற திட்டத்தை கொண்டுவருவது குறித்தும் பரிலீசிக்கப்பட்டது.

    English summary
    banks will send you an OTP (One Time Password) for each transactions you make via ATMs. Soon, OTP authentication for ATM cash withdrawals above Rs 10,000
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X