ஒரே நாடு - ஒரே ரேஷன் அட்டை.. பொது விநியோகத்திற்கு வைக்கப்படும் அதிரடி செக்.. இன்று முக்கிய முடிவு!
ஒரே நாடு - ஒரே ரேஷன் அட்டை தொடர்பாக இன்று மிக முக்கியமான ஆலோசனை கூட்டம் ஒன்று டெல்லியில் நடக்க உள்ளது.
Recommended Video
டெல்லி: ஒரே நாடு - ஒரே ரேஷன் அட்டை தொடர்பாக இன்று மிக முக்கியமான ஆலோசனை கூட்டம் ஒன்று டெல்லியில் நடக்க உள்ளது.
உலக வர்த்தக நிறுவனம், இந்தியாவில் வழங்கப்படும் பொது விநியோக திட்டத்தை பல வருடங்களாக கண்டித்து வருகிறது. பொது விநியோக திட்டத்தை இந்தியா உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறது.
இதற்கு மத்திய அரசும் இசைந்து வருகிறது என்றுதான் கூறவேண்டும். உணவு பாதுகாப்பு மசோதா கூட இதன் அடிப்படையில்தான் கொண்டு வரப்பட்டது.

என்ன மசோதா
உணவு பாதுகாப்பு மசோதாவின் மூலம் ரேஷன் கடைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது ரேஷனில் உணவுப் பொருட்கள் வழங்கும் முறையையே மாற்ற மத்திய அரசு முடிவு எடுத்து இருக்கிறது. நாடு முழுக்க எல்லோருக்கும் ஒரே மாதிரியான ரேஷன் கார்டுகளை வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

எல்லோரும் வாங்கலாம்
அதன்படி இந்தியாவில் எந்த மாநிலத்தில் இருக்கும் நபர்களும் வேறு எந்த மாநிலத்திலும் ரேஷன் வாங்க முடியும். உத்தர பிரதேசத்தில் கோதுமை கிடைக்கவில்லை என்றால், அவர் தமிழகத்தில் வந்து அரிசி வாங்க முடியும். இதுதான் தற்போது பெரிய எதிர்ப்புகளை சந்தித்து இருக்கிறது.

என்ன பாதிப்பு
இதனால் தமிழகம் பெரிய அளவில் பாதிக்கப்படும். தமிழகத்தில்தான் ரேஷன் பொருட்கள் சிறப்பாக வழங்கப்பட்டு வருகிறது. இங்கு முழுக்க முழுக்க அரசி இலவசமாக வழங்கப்படுகிறது. அதேபோல் பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது.

ஏன் எதிர்ப்பு
தமிழகம் கஷ்டப்பட்டு இப்போதுதான் பொருளாதார ரீதியாக முன்னேறி உள்ளது. அந்த பொருளாதார வளத்தை கொள்ளையடிக்கும் வகையில்தான் இந்த திட்டம் கொண்டு வரப்படுகிறது. தமிழகத்தின் சிறப்பான பொது விநியோக திட்டத்தை பாழ்படுத்த மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டு வருகிறது என்று கூறி உள்ளனர். இதனால் மக்கள் ரேஷனில் பொருள் வாங்க முடியாத நிலை ஏற்படும், என்கிறார்கள்.

இன்று
ஒரே நாடு - ஒரே ரேஷன் அட்டை தொடர்பாக இன்று மிக முக்கியமான ஆலோசனை கூட்டம் ஒன்று டெல்லியில் நடக்க உள்ளது. இதில் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொள்கிறார். இன்று நடக்கும் கூட்டத்திற்கு பின் மிக முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications