Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இம்ரான் கானை காப்பாற்றுங்க! நட்புக்காக பாக்., கபில்தேவ் - சுனில் கவாஸ்கர் உள்பட 14 கேப்டன்கள் கடிதம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் வரை எதிரொலித்துள்ளது. சமீபத்திய டி20 உலககோப்பை போட்டியில் கூட இந்தியா- பாகிஸ்தான் வீரர்கள் கைக்குலுக்கி கொள்ளவில்லை. இப்படியான சூழலில் தான் உலககோப்பை வென்ற பாகிஸ்தான் முன்னாள் கேப்டடுனும், மாஜி பிரதமருமான இம்ரான் கானுக்காக மனிதாபிமான அடிப்படையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் கபில்தேவ் உள்பட 14 கேப்டன்கள் பாகிஸ்தானுக்கு அவசர கடிதம் எழுதி உள்ளனர்.

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவு நன்றாக இல்லை. குறிப்பாக கடந்த ஆண்டு பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து நம் நாடு பாகிஸ்தான் மீது ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை வழியாக பதிலடி கொடுத்தது. இதையடுத்து இருநாடுகள் இடையேயான உறவு மோசமானது. இந்த பிரச்சனை கிரிக்கெட் வரை எதிரொலிக்கிறது.

imran-khan-eye-sight-row-14-captains-including-kapil-dev-sunil-gavaskar-writes-letter-to-pakistan

கடந்த ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் கைக்குலுக்கவில்லை. அதேபோல் நேற்று முன்தினம் கொழும்பில் நடந்த டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. அந்த போட்டியிலும் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களிடம் கைக்குலுக்கவில்லை.

கபில்தேவ் - சுனில் கவாஸ்கர்

இப்படியான சூழலில் தான் தற்போது பாகிஸ்தான் அரசுக்கு பல்வேறு அணிகளை சேர்ந்த கிரிக்கெட் கேப்டன்கள் கடிதம் எழுதியுள்ளனர். இந்த கடிதத்தில் நம் நாட்டுக்கு உலககோப்பை வென்று தந்த முன்னாள் கேப்டன் கபில்தேவ், சுனில் கவாஸ்கர் கையெழுத்திட்டுள்ளனர்.

ஸ்டீவ்வாக் டூ நாசர் ஹுசைன் வரை

மேலும் பிற அணிகளின் முன்னாள் கேப்டன்கள் மைக்கேல் அதெர்டன், ஆலன் பார்டர், மைக்கேல் பிரியர்லி, கிரேக் சேப்பல், இயான் சேப்பல், பெலின்டா கிளார்க், டேவிட் கோவர், கிம் ஹியூஸ், நாசர் ஹுசைன், கிளைவ் லாய்ட், கபில் தேவ், ஸ்டீபன் வாக் மற்றும் ஜான் ரைட் உள்ளிட்டவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

சிகிச்சை வழங்க வேண்டும்

அந்த கடிதத்தில் ‛‛பாகிஸ்தான் கிரிக்கெட்அணிக்கு 1992 உலகக் கோப்பையை வென்ற அணிக்கு தலைமை தாங்கியவர் இம்ரான் கான். இப்போது உடல்நலக் குறைபாடுகளுடன் சிறையில் இருக்கிறார். இவருக்கு உடனடியாகவும், கண்ணியமான முறையிலும் மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும்.

பாகிஸ்தானின் புகழ்பெற்ற முன்னாள் கேப்டனும், உலக கிரிக்கெட்டின் ஜாம்பவானுமான இம்ரான் கானுக்கு வழங்கப்படும் சிகிச்சை மற்றும் சிறையில் அவர் நடத்தப்படும் விதம் பற்றி நாங்கள் கவலை கொண்டுள்ளோம். அதனால் தான் இந்த கடிதத்தை எழுதுகிறோம்.

சிறந்த ஆல்ரவுண்டர்

1992 உலகக் கோப்பையை பாகிஸ்தானுக்கு வென்று கொடுத்தவர் இம்ரான் கான். அவரது தலைமை பண்பு, தன்னம்பிக்கை, விளையாட்டு யுக்தி பாராட்டுக்குரியது. எங்களில் பலர் அவருடன் களத்தில் எதிர்த்து விளையாடி இருக்கிறோம். அவரது திறமையை அனைவரும் போற்றுகிறோம். அவர் கிரிக்கெட் உலகின் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர்.

முன்னாள் பிரதமர்

ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பிரதமரான இம்ரான் கான், அரசியல் வேறுபாடுகளை தாண்டி மனிதாபிமான முறையில் நடத்தப்பட வேண்டும். தகுதி வாய்ந்த மருத்துவர்களிடம் இருந்து உடனடி மற்றும் தொடர் மருத்துவ சிகிச்சையையும், குடும்பத்தினருடனான சந்திப்புக்கு அனுமதி வழங்க வேண்டும். மேலும் இம்ரான் கான் சட்ட ரீதியான உதவிகளை பெறவும், இம்ரான் கானுக்கு பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்க வேண்டும் .

மனிதநேய அடிப்படையில்...

கிரிக்கெட் நீண்ட காலமாக நாடுகளுக்கு இடையேயான பாலமாக இருந்து வருகிறது. களத்தில் எங்கள் அனைவருக்கும் இருந்த உறவு, போட்டி முடிந்த பிறகும் மரியாதையாக தொடர்கிறது. சட்ட நடவடிக்கைக்களுக்கும் தலையிடாமல் பொதுவான மனிதநேயத்தின் அடிப்படையில் இந்தக் கோரிக்கை விடுக்கப்படுகிறது'' என கூறப்பட்டுள்ளது.

இம்ரான் கான் யார்?

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த 1992ம் ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பையை வென்றது. அப்போது இம்ரான் கான் தான் அணியின் கேப்டனாக இருந்தார். கிரிக்கெட் ஓய்வுக்கு பிறகு அவர் அரசியல் கட்சியை தொடங்கினார். கடந்த 2018 முதல் 2022ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவி வகித்தார். அப்போது அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இவர் மீது பல்வேறு முறைகேடு, ஊழல் புகார்கள் எழுந்தன.

வலது கண் பார்வை குறைபாடு

2023 ஆகஸ்ட் முதல்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பல்வேறு வழக்குகளில் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறையில் அவர் துன்புறுத்தப்படுவதாகவும், கொலை முயற்சி நடப்பதாகவும் குடும்பத்தினர், கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் இம்ரான் கானின் வலது கண்ணில் கண்பார்வை 85 சதவீதம் வரை குறைந்துள்ளது. ஆனால் அவருக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

வாசிம் அக்ரம் கவலை

இதுபற்றிய வழக்கை விசாரித்த அந்த நாட்டின் உச்சநீதிமன்றம் இம்ரான் கானுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட்டது. இதையடுத்து அடியாலா சிறையில் உள்ள இம்ரான் கானுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வரும் நிலையில் இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.

முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசீம் அக்ரம் கூட, இம்ரான் கானுக்குச் சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். மேலும் இம்ரான் கானின் உடல்நலக் குறைபாடு தனக்கு மிகுந்த வருத்தம் அளிப்பதாக கவலை தெரிவித்து இருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+