டெல்லியில் திமுக அலுவலகம் திறப்பு:‛A Dravidian Journey’ புத்தகத்தை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
டெல்லி: டெல்லியில் கட்டப்பட்டுள்ள அண்ணா-கலைஞர் அறிவாலயத்தை திமுக தலைவரும் தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அதன்பிறகு அவர் ‛A Dravidian Journey' எனும் புத்தகத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் பெற்று கொண்டார்.
நாடாளுமன்றத்தில் இருஅவைகளிலும் 7 எம்பிக்கள் கொண்ட கட்சிக்கு டெல்லியில் அலுவலகம் அமைக்க மத்திய அரசு முடிவெடுத்தது. இதன் அடிப்படையில் எம்பிக்கள் எண்ணிக்கைக்கு நிலம் வழங்கப்பட்டு வருகிறது.
2013ஆம் ஆண்டில் திமுகவுக்கு, டெல்லியில் உள்ள தீன்தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் பாஜக அலுவலகம் அருகில் நிலம் வழங்கப்பட்டது. பின்னர், இங்கு திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயம் கட்டும் பணிகள் தொடங்கின.

இந்த பணி முழுவதுமாக முடிவடைந்துள்ளன. பிரமாண்டமாக அண்ணா-கலைஞர் அறிவாலயம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. தமிழக முதல்வர் முகஸ்டாலின் அலுவலகத்தை திறந்து கட்சி கொடியை ஏற்றி வைத்தார். இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதையடுத்து ஏஎஸ் பன்னீர் செல்வம் எழுதிய ‛Karunanithi A Life ' எனும் புத்தகத்தை இந்து என் ராம் வெளியிட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பெற்று கொண்டார்.
இதையடுத்து ஜெயரஞ்சன் எழுதிய ‛A Dravidian Journey' எனும் புத்தகத்தை முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் பெற்று கொண்டார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்!












Click it and Unblock the Notifications