காரில் இருந்தபடியே தடுப்பூசி.. கொரோனா அச்சம் இனியும் வேண்டாம்.. அசத்தும் டெல்லி கெஜ்ரிவால் அரசு
டெல்லி: இந்தியாவிலேயே முதல்முறையாகத் தலைநகர் டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்த டிரைவ் இன் தடுப்பூசி மையத்தில், முதல் நாளே 70 பேர் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டனர்.
இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவலின் 2ஆம் அலை இன்னும் முடியவில்லை. நாட்டில் கொரோனா உயிரிழப்புகள் அதிகபட்சமாக 4000 வரை சென்றது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 2.11 லட்சம் பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல 3847 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

தடுப்பூசி பணிகள்
வைரஸ் பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் எனப் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் மாநில அரசுகள் தடுப்பூசி பணிகளை வேகமாக மேற்கொள்ள முடியாமல் உள்ளன. மேலும், தடுப்பூசி மையங்களில் உள்ள கூட்டம் காரணமாக எங்கு கொரோனா பரவுமோ என்ற அச்சத்திலும் ஒரு சிலர் தடுப்பூசி செலுத்தத் தயக்கம் காட்டி வருகின்றனர்.

டிரைவ் இன் தடுப்பூசி மையம்
இந்நிலையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் நேற்று டிரைவ் இன் தடுப்பூசி மையத்தைத் தொடங்கி வைத்தார். இங்குத் தடுப்பூசி செலுத்த விரும்புபவர்கள் 8800015999 என்ற எண்ணிற்கு அழைத்து முன்பதிவு செய்ய வேண்டும். பின்னர், ஒதுக்கப்படும் நேரத்தில் நேரடியாகத் தடுப்பூசி மையங்களில் சென்று காரில் இருந்தவாறே தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ளலாம். காரில் இருந்து இறங்கக் கூட தேவையில்லை என்பதால் கொரோனா வந்துவிடுமோ என்று அச்சம் கொள்ளத் தேவையில்லை.

காரில் இருந்து இறங்க தேவையில்லை
காரில் இருந்தபடி தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் ஒருவர், அதன் பின் அங்கு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பார்கிங் மையத்தில் சென்று 30 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். அப்போதும்கூட அவர்களில் காரில் இருந்து இறங்கத் தேவையில்லை. இந்த நேரத்தில் அவர்கள் உடலில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுகிறதா என்பது குறித்துக் கண்காணிக்கப்படும். நேற்று முதல் நாளில் மட்டும் 70 பேர் இந்த டிரைவ் இன் மையத்தில் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

வெளிநாடுகள்
வரும் காலங்களில், இதுபோன்ற டிரைவ் இன் தடுப்பூசி மையங்கள் அதிகப்படுத்தப்படும் என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் இதுபோன்ற டிரைவ் இன் தடுப்பூசி மையங்கள் தான் அதிகம் உள்ளது. இதன் மூலம் மக்கள் மிக எளிதாகத் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்ள முடியும். பொதுமக்கள் கார்களில் இருந்துகூட இறங்கத் தேவையில்லை என்பதால் கொரோனா பரவல் பற்றிய அச்சமின்றி அதிகளவில் தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ள வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications