"மிதக்கும்" தலைநகர்.. கொட்டி தீர்த்த கனமழை.. ஆலங்கட்டி மழையால் நனைந்த டெல்லி.. ஒருவர் பலி
டெல்லியில் பெய்த கனமழைக்கு ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்
டெல்லி: தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது... அப்போது திடீரென பெய்த ஆலங்கட்டி மழையில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.
தலைநகர் டெல்லி உட்பட வட மாநிலங்களில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வெயில் கொளுத்தி வருகிறது.. இதனால், அம்மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திடீரென தலைநகரில் கடந்த வாரம் லேசான மழை பெய்தது.. ஆனால், மறுபடியும் வெயில், புழுக்கத்தில் பொதுமக்கள் சிக்கி கொண்டனர்..

ஆலங்கட்டி மழை
பிறகு நேற்று மாலை பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது... பலத்த காற்றால் சாலையில் சென்ற வாகனங்கள் திக்குமுக்காடின... ஐஸ் கட்டிகள் வாகனங்களின் கண்ணாடியிலும், சாலையிலும் நாலாபுறமும் விழுந்து சிதறின... இப்படி ஒரு ஆலங்கட்டி மழையை கொஞ்சமும் எதிர்பார்க்காத மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். பல இடங்களில் ஓடி ஓடிச் சென்று அவைகளை சேகரித்தனர்... பலர் அதை செல்போனில் வீடியோ எடுத்து கொண்டனர்.

கனமழை
வானிலை படுமோசமானதையடுத்து, பல விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.. இதனால் கார் மற்றும் பஸ் போன்ற வாகனங்கள் பெருத்த சேதம் அடைந்தன... கனமழையால் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.. சில இடங்களில் சாலையோரத்தில் இருந்த மரங்கள் பலத்த காற்றால் வேரோடு பெயர்ந்து விழுந்தன... இதில், ஒரு கார் மீது மரம் தொப்பென்று விழுந்துவிட்டது..

பரிதாப பலி
இதில், சிக்கிய குழந்தை உட்பட 3 பேர் கொண்ட குடும்பம் மீட்கப்பட்டதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.. அதேபோல, கபுதார் மார்க்கெட் பகுதியில் பெய்த ஆலங்கட்டி மழையால் 65 வயது முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.. வடக்கு டெல்லியின் பல பகுதிகளிலும் காற்று சுழட்டி சுழட்டி அடித்தது.. இதில், 40 மின் கம்பங்கள் சேதம் அடைந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது...

ஜூம்மா மசூதி
மேலும் பலத்த காற்று காரணமாக டெல்லி ஜூம்மா மசூதியில் மாட பகுதி உடைந்து விழுந்தது. இதில் 3 பேர் காயம் அடைந்ததாக டெல்லி இமாம் சையது அகமது புகாரி தெரிவித்துள்ளார். இதனிடையே, டெல்லிக்கு அருகிலுள்ள ஹரியானாவின் குருகிராம் நகரிலும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது... இத்தனை நாட்களும் கடுமையான வெயிலை அனுபவித்து வந்த டெல்லிவாசிகள், நேற்று மழை பெய்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.
-
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம்












Click it and Unblock the Notifications