ஹிஜாப் அணிந்து வருவதை பார்த்தால் சக மாணாக்கர்களுக்கு பன்முகத் தன்மை பற்றி புரியுமே- உச்சநீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: "முஸ்லிம் மாணவிகளை கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய அனுமதிப்பது, மற்ற பிள்ளைகளும் நம் நாட்டின் பன்முகத் தன்மையை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தும்" என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், "படிப்பை முடித்துவிட்டு கல்வி நிலையங்களில் இருந்து வெளியே செல்லும் மாணவர்கள், நாட்டின் பன்முகத்தன்மையை எதிர்கொள்ள எவ்விதம் அவர்களை தயார்படுத்துவீர்கள்?" என்றும் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

ஹிஜாபுக்கு தடை விதித்து கர்நாடகா உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை விசாரித்து வரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்தக் கருத்தை தெரிவித்துள்ளனர்.

 ஹிஜாப் சர்ச்சையும் - மேல்முறையீடும்

ஹிஜாப் சர்ச்சையும் - மேல்முறையீடும்

கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் பி.யு. கல்லூரியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து சென்ற முஸ்லிம் மாணவிகளுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த மாணவிகள் கல்லூரிக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, ஹிஜாப் விவகாரம் மற்ற கல்லூரிகளுக்கும் பரவியது. இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து, கல்வி நிலையங்களில் ஹிஜாப் உள்ளிட்ட மத அடையாளங்களுடன் செல்ல கர்நாடகா அரசு தடை விதித்தது. கர்நாடக அரசின் இந்த உத்தரவை அம்மாநில உயர் நீதிமன்றமும் அங்கீகரித்து உத்தரவிட்டது. கர்நாடகா அரசின் உத்தரவுக்கு எதிராக முஸ்லிம் மாணவிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

 'ஹிஜாப் தனிப்பட்ட உரிமை கிடையாது'

'ஹிஜாப் தனிப்பட்ட உரிமை கிடையாது'

இந்நிலையில், ஹிஜாப் வழக்கு தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடகா அரசின் அட்வகேட் ஜெனரல் நவாத்கி, "எந்த உடையை வேண்டுமானாலும் ஒருவர் அணியலாம் என்பது அடிப்படை உரிமை ஆகாது. சட்டப்படி, அனைத்து அடிப்படை உரிமைகளுக்கும் ஒரு கட்டுப்பாடு இருக்கிறது. அதேபோல, ஹிஜாப் அணிவது தனிப்பட்ட உரிமை என்ற வாதத்தையும் எச்சரிக்கையாகவே அணுக வேண்டும். இந்த வாதத்தை சுலபமாக ஏற்றுக்கொள்ளக் கூடாது" என வாதிட்டார்.

 'குரான் கூறுவதெல்லாம் அத்தியாவசியமா?'

'குரான் கூறுவதெல்லாம் அத்தியாவசியமா?'

மேலும் அவர் வாதிடுகையில், "குரானில் கூறப்பட்டுள்ள அனைத்தையும் அத்தியாவசிய மதப் பழக்கங்களாக கருதக்கூடாது. அது நடைமுறையில் சாத்தியமும் கிடையாது. கல்வி நிலையங்களில் ஒழுக்கத்தையும், விதிமுறைகளையும் கடைப்பிடிப்பது அவசியம். இந்த காரணத்துக்காகவே, மத ரீதியான அடையாளங்களை மாணவர்கள் அணிந்து வரக்கூடாது என கர்நாடகா அரசு உத்தரவிட்டது. இதில் ஒருசில விஷயங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம்" என்றார்.

 'ஹிஜாப்பை மதிக்கிறோம்'

'ஹிஜாப்பை மதிக்கிறோம்'

அதேபோல, கர்நாடகா அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் கே.எம்.நாடராஜ் கூறுகையில், "கர்நாடகா அரசு எந்த மதச் சடங்குகளையும் தடுக்கவும் இல்லை; எந்த மதச் சடங்குகளையும் ஊக்குவிக்கவும் இல்லை. ஹிஜாபை அணிய வேண்டாம் என கர்நாடகா அரசு கூறவில்லை. இன்னும் சொல்லப்போனால், ஹிஜாபை கர்நாடகா அரசு மிகவும் மதிக்கிறது. அதே சமயத்தில், கல்வி நிலையங்களில் மத அடையாளங்கள் வேண்டாம் என்றுதான் கூறுகிறது" எனக் கூறினார். கர்நாடகா அரசு வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்ட பின்னர் நீதிபதிகள் தங்கள் கருத்தை பதிவு செய்தனர். அவர்கள் கூறியதாவது:

 அடுக்கடுக்கான கேள்விகள்

அடுக்கடுக்கான கேள்விகள்

நீங்கள் முன்வைத்த வாதங்களை பரீசிலித்தோம். ஆனால் எங்களிடம் ஒரே ஒரு கேள்விதான் இருக்கிறது. எந்த அடிப்படையில் நீங்கள் (கர்நாடகா அரசு) ஹிஜாபுக்கு கட்டுப்பாடு விதித்தீர்கள்? சமூகத்தில் நிலவும் ஒரு பழக்கத்தை தடை செய்ய சட்டம்-ஒழுங்கு, சுகாதாரம், ஒழுக்கம் ஆகிய மூன்று விஷயங்களை பரிசீலிக்கலாம். இந்த மூன்றில் எந்த விஷயத்துக்காக ஹிஜாபுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது?

 பன்முகத்தன்மையை கற்றுக்கொள்ள..

பன்முகத்தன்மையை கற்றுக்கொள்ள..

இந்தியா ஜாதி, மதம், கலாச்சாரம் என அனைத்திலும் பன்முகத்தன்மை கொண்ட நாடு. நமது மாணவர்கள் இந்த அனைத்து கலாச்சாரங்களில் இருந்தும், மதங்களில் இருந்தும் வருகிறார்கள். அவர்களுக்கு கல்வி நிலையங்களில்தான் பன்முகத்தன்மை குறித்த புரிதல் ஏற்பட வேண்டும். இதுதான் அவர்களுக்கு முதல் படிப்பினையாக இருக்கும். முஸ்லிம் மாணவிகளை கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய அனுமதிப்பது, மற்ற பிள்ளைகளும் நம் நாட்டின் பன்முகத் தன்மையை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தி தரும்.

 எப்படி எதிர்கொள்வார்கள்?

எப்படி எதிர்கொள்வார்கள்?

கல்வி நிலையங்களிலேயே இந்த பன்முகத் தன்மைக்கு தடைவிதித்து விட்டால், அவர்கள் எங்கு அதை கற்றுக்கொள்வார்கள்? அவர்கள் நாளை நம் நாட்டின் பன்முகத்தன்மையை எதிர்கொள்ள வேண்டாமா? படிப்பை முடித்துவிட்டு கல்வி நிலையங்களில் இருந்து வெளியே செல்லும் மாணவர்கள், நாட்டின் பன்முகத்தன்மையை எதிர்கொள்ள நீங்கள் எவ்விதம் அவர்களை தயார்படுத்துவீர்கள்? இவ்வாறு அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதிகள் கேட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+