Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விபத்துகளுக்கு 10 ஆண்டு ஜெயில்.. கதிகலங்கும் டிரைவர்கள்! புதிய சட்டம் சொல்வதென்ன? வெடித்த போராட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: விபத்தை ஏற்படுத்தும் டிரைவர்களுக்கு சிறை தண்டனையை கடுமையாக்கும் வகையில் புதிய சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிராக வட இந்தியாவில் ஓட்டுநர்கள் போராட்டம் வெடித்துள்ளது. புதிய சட்டம் என்ன சொல்கிறது என்பது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

நாடாளுமன்றத்தில் குளிர் கால கூட்டத்தொடரில், இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சக்ஷ்யா, பாரதிய நகரிக் சுரக்ஷா 3 ஆகிய புதிய சட்டங்களை சில திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாக்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.

 Increase in jail sentences for causing accidents Truck drivers protest against new law

10 ஆண்டுகள் ஜெயில்: இதன் மூலம் மூன்று மசோதாக்களும் சட்டமாகியுள்ளன. காலனித்துவ கால சட்டங்களுக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட இந்த சட்டங்களில் பல்வேறு குற்ற செயல்களுக்கான தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சாலை விபத்துக்களை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடும் டிரைவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாக ஐபிசி 304 ஏ (அலட்சியமாக மரணம் ஏற்படுத்துதல்) படி அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரை மட்டுமே சிறை தண்டனை விதிக்க முடியும். ஆனால் தற்போது 10 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்க சட்ட திருத்தம் செய்திருப்பதற்கு டிரைவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக வட இந்தியாவில் ஓட்டுநர்கள் போராட்டத்தில் குதித்துள்ளார்கள்.

பனிமூட்டங்களால் விபத்து ஏற்பட்டாலும்: ஹரியானாவில் இன்று தனியார் பஸ் ஓட்டுநர்கள் பேருந்துகளை இயக்க மறுத்து போராட்டம் செய்தனர். இது தொடர்பாக ஓட்டுநர்கள் கூறுகையில், "எந்த ஒரு ஓட்டுநரும் வேண்டும் என்றே விபத்தை ஏற்படுத்துவது கிடையாது. விபத்தின் போது காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் கும்பல்கள் தாக்குதல் நடத்துவார்கள் என்ற அச்சம் காரணமாகவே நிகழ்விடத்தை விட்டு டிரைவர்கள் ஓடுகிறார்கள்.

தற்போது கொண்டு வந்துள்ள புதிய சட்டங்களின் படி ஓட்டுநர் தங்கள் வேலையை செய்ய அச்சப்படுவார்கள். புதியவர்களும் இந்த தொழிலுக்கு வர தயங்குவார்கள். எனவே இந்த கருப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும். பனிமூட்டங்களால் விபத்து ஏற்பட்டால் கூட ஓட்டுநர்கள் 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஓட்டுநர்கள் மீது தவறே இல்லாவிட்டாலும் கூட இந்த தண்டனை விதிக்கப்படும் அபாயம் உள்ளது” என்றனர்.

தவறு யார் மீது இருந்தாலும்: மேற்கு வங்காளத்தில் நேற்று இந்த சட்டத்திற்கு எதிராக டிரக் டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய நெடுஞ்சாலை -2 வில் சாலை மறியலில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பை டிரைவர்கள் தெரிவித்தனர். ஓட்டுநர்களின் இந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலைகளில் விபத்து ஏற்படும் பட்சத்தில் அப்பகுதிகளை சேர்ந்தவர்கள் தவறு யார் மீது இருந்தாலும் உடனடியாக பெரிய வாகனங்களின் ஓட்டுநர்களை தாக்குகிறார்கள் என்றும்

இதன் காரணமாகவே உயிருக்கு அஞ்சி அதிகாரிகளிடம் கூட தகவல் தெரிவிக்காமல் நிகழ்விடத்தை விட்டு ஓட வேண்டிய சூழல் இருப்பதாக லாரி ஓட்டுநர்கள் முன்வைக்கும் வாதமாக உள்ளது. அதுபோக சட்டப்படி சென்றால் அதில் உள்ள நீண்ட நடைமுறைகளும் ஒரு காரணமாக இருப்பதாக ஓட்டுநர்கள் சொல்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+