முத்தலாக் தடை சட்டம்.. இஸ்லாமிய பெண்களின் விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது.. மோடி பெருமிதம்!
முத்தலாக் தடை சட்டம் கொண்டு வரப்பட்டதன் மூலம் பெண்கள் விடுதலை அடைந்துள்ளனர் என்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி: முத்தலாக் தடை சட்டம் கொண்டு வரப்பட்டதன் மூலம் பெண்கள் விடுதலை அடைந்துள்ளனர் என்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய நாட்டின் 73வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றினார்.
பிரதமர் மோடிக்கு முப்படை வீரர்கள் மரியாதை அளித்தனர்.தேசிய கொடியை ஏற்றிய பிரதமர் மோடி மக்கள் மத்தியில் உறையியற்றினார்.

என்ன பேசினார்
பிரதமர் மோடி தனது உரையில், 2014 தேர்தலுக்கு பின் மக்கள் எதிர்பார்த்ததை விட அதிக மாற்றத்தை கொண்டு வந்து இருக்கிறோம். நாடு வேகமாக வளர்ந்து வருகிறது நாட்டில் பெண்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறார்கள். முத்தலாக் தடை சட்டம் மூலம் இஸ்லாமிய பெண்கள் விடுதலை அடைந்துள்ளனர். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

நீர் மேலாண்மை
நீர் மேலாண்மைக்காக நலத்திட்டங்கள் நிறைய கொண்டு வரப்பட்டுள்ளது. விவசாயிகள் நாட்டில் மகிழ்ச்சியாக உள்ளனர். கடந்த ஐந்து வருடங்களில் மருத்துவ துறை பெரிதாக வளர்ந்துள்ளது. குழந்தைகளுக்கு எதிரான அநீதிகள் தடுக்கப்பட்டு உள்ளது.

சிறுபான்மையினர்
சிறுபான்மையினரை முன்னேற்ற நிறைய திட்டம் இருக்கிறது. ஆதிவாசிகளை முன்னேற்ற திட்டமிட்டுள்ளோம். வரும் நாட்களில் செயல்படுத்துவோம். எங்களுடைய பணிகள் நாட்டில் நிறைய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. மக்கள் எங்களை முழுதாக நம்புகிறார்கள். இந்தியா மாற முடியும் என்று நம்புகிறார்கள்.

தேர்தல் மோதல்
நாம் யோசிக்க தொடங்கிவிட்டோம். 130 கோடி மக்களும் சேர்ந்து செயல்பட தொடங்கிவிட்டோம். தேர்தலில் எந்த கட்சியும் யாருடனும் மோதவில்லை. மக்கள் தங்கள் கனவுகளுக்காக தீமைகளை எதிர்த்து போராடி வருகிறார்கள்.
மக்களிடம் சுயமரியாதையும், இந்தியர் என்ற உணர்வும் அதிகமாம் ஆகியுள்ளது, என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications