இந்தியாவில் 8000 "X"தள கணக்குகளை முடக்க உத்தரவு.. மீறினால் அபராதம், ஜெயில் - பீஸ்ட் மோடில் அரசாங்கம்
டெல்லி: இந்தியாவில் எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் உள்ள 8000 எக்ஸ் தள கணக்குகளை முடக்க இந்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக எக்ஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு இணங்கவில்லை எனில் உள்ளூர் ஊழியர்களுக்கு கடும் அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், எக்ஸ் வலைத்தள நிறுவனத்துக்கு 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணக்குகளை மூடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, 8 ஆயிரம் கணக்குகளை முடக்கும் பணியை எக்ஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்த உத்தரவுக்கு இணங்க தவறினால் அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எக்ஸ் தரப்பில் கூறியுள்ளதாவது: இந்திய அரசாங்கத்தின் உத்தரவை ஏற்று இந்தியாவில் உள்ள 8000 எக்ஸ் வலைத்தள கணக்குகளை முடக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். ஆனாலும், இந்திய அரசாங்கத்தின் கோரிக்கைகள் மீது எங்களுக்கு உடன்பாடு இல்லை. இது எளிதான முடிவல்ல என்று தெரிவித்துள்ளது. மேலும், எந்த எக்ஸ் தள கணக்கில் இருந்து வந்த பதிவுகள் இந்தியாவின் சட்டங்களை மீறியுள்ளன என்று இந்திய அரசாங்கம் அடையாளம் காட்டவில்லை. கணக்குகளை முடக்குவதில் எங்களுக்கு எந்த ஆதாரமும், நியாமமும் இல்லை. ஆனாலும், அரசின் உத்தரவால் முடக்கப்படும் கணக்குகள் தொடர்பாக எக்ஸ் பயனர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மேற்கொண்டு சட்ட உதவியை நாடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் சம்பவத்தை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தான் யூடியூப் சேனல்கள், செய்தி தளங்களை இந்திய அரசாங்கம் ஏற்கனவே முடக்கியிருந்தது. இந்நிலையில், நடிகர்களான ஃபவாட் கான், ஆதிஃப் அஸ்லாம், வசீம் அக்ரம் போன்ற கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட முக்கிய நவர்கள் சமூக வலைதளங்களில் முடக்கப்பட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications