"இந்தியா" மட்டுமில்லை.. "பாரத்தையும்" கையில் எடுக்கும் எதிர்க்கட்சி கூட்டணி.. இன்று முக்கிய ஆலோசனை
டெல்லி: "இந்தியா" கூட்டணியின் பிரசார குழுக் கூட்டம் இப்போது காணொலி காட்சி வாயிலாகத் தொடங்கி நடந்து வருகிறது. இதில் பிரசாரம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் வர வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்தது. அதற்கு நிதிஷ்குமார் முக்கிய முன்னெடுப்பை எடுத்தார்.

அதன்படி முதலில் பாட்னாவில் பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றாகக் கூடின. இதில் எதிர் எதிர் துருவங்களாக இருந்த காங்கிரஸ், திரிணாமுல், ஆம் ஆத்மி ஆகியவை கூட ஒன்றாக இணைந்தன. பாட்னாவை தொடர்ந்து பெங்களூர், மும்பை ஆகிய இடங்களிலும் எதிர்க்கட்சிகள் கூட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
எதிர்க்கட்சிகள் கூட்டம்: இந்தக் கூட்டணிக்கு "இந்தியா" எனப் பெயரிடப்பட்டுள்ளது. அடுத்தாண்டு நடக்கும் லோக்சபா தேர்தலுக்கு இப்போது முதலே அவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதற்கிடையே "இந்தியா" கூட்டணியின் 21 உறுப்பினர்களைக் கொண்ட பிரச்சாரக் குழு இன்று தனது முதல் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. காணொலி வாயிலாக நடைபெறும் இந்தக் கூட்டத்தில் முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்பட இருக்கிறது.
தேர்தலுக்கு எதுபோன்ற பிரசாரத்தை நடத்துவது. எங்கெல்லாம் மெகா பேரணிகள் மற்றும் கூட்டத்தை நடத்துவது என்பது குறித்து இவர்கள் ஆலோசிக்க உள்ளனர். மேலும், பிரசாரத்தின் முன்வைக்க வேண்டிய முழக்கங்கள் குறித்தும் இன்று முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.
இந்தியா- பாரத்: இந்தியா பெயரை பாரத் என்று மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், அதை வைத்தும் "இந்தியா" கூட்டணிக் கட்சிகள் பிரசாரத்தை முன்னெடுத்தது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கிய நிலையில், அதைக் கண்டு மத்திய பாஜக அரசு பயந்துள்ளதாகவும் இதன் காரணமாகவே பெயர் மாற்றத்தை அவர்கள் கையில் எடுத்துள்ளதாக ராகுல் காந்தி உள்ளிட்ட "இந்தியா" கூட்டணி தலைவர்கள் சாடியிருந்தனர்.
இதற்கிடையே இந்தியா மற்றும் பாரத் என்று இரண்டு பெயர்களும் வரும் வகையில் தேர்தலுக்கான முழக்கத்தை எதிர்க்கட்சிகள் இன்று இறுதி செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது. "Judega Bharat, Jeetega India' அதாவது "இணையும் பாரத், வெல்லும் இந்தியா" என்ற முழக்கம் இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த மும்பை கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் இது குறித்தே ஆலோசித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முதல் பேரணி எங்கே: வரும் செப். 18ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நடைபெறும் நிலையில், அதன் பிறகு "இந்தியா" கூட்டணியின் முதல் பேரணி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ள மத்தியப் பிரதேசத்தில் தான் முதல் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆதரவு அதிகரிப்பதாகக் கூறப்படும் நிலையில், இந்தத் தேர்தலை அவர்கள் நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறார்கள்.
அங்குக் காங்கிரஸ் கட்சிக்கு "இந்தியா" கூட்டணியின் பேரணி மிகப் பெரிய பூஸ்டை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்தியப் பிரதேசத்தில் இப்போது சிவராஜ் சிங் சவுஹான் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் இருக்கிறது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் வென்ற போதிலும், சிந்தியா கலகம் செய்ததால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications