கனடா பிரதமர் நிகழ்ச்சியில் “காலிஸ்தான்” ஆதரவு கோஷம்.. டென்ஷன் ஆன இந்தியா.. தூதரை அழைத்து கண்டனம்!
டெல்லி: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ காலிஸ்தான் ஆதரவு கருத்துகளை தெரிவித்திருந்த நிலையில், டெல்லியில் உள்ள கனடா தூதரை அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
கனாடா தலைநகர் டொரண்டோவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சீக்கியர்களின் கல்சா தின நிகழ்வில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் ஏராளமான சீக்கியர்கள் பங்கேற்றனர். சீக்கிய சமூகத்தினர் மத்தியில் உரையாற்ற கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மேடைக்கு வந்தார்.

அப்போது கூட்டத்தில் சிலர், "காலிஸ்தான் ஜிந்தாபாத்" என காலிஸ்தான் ஆதரவு கோஷங்களை எழுப்பினர். இருப்பினும், ஜஸ்டின் ட்ரூடோ அவற்றை கண்டுகொள்ளாமல் தனது பேச்சைத் தொடர்ந்தார். ஜஸ்டின் ட்ரூடோ பேசி முடித்த பிறகும் சிலர் காலிஸ்தான் ஆதரவு கோஷங்களை எழுப்பினர்.
கனடா நாட்டில் உள்ள சீக்கியர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாக்க தனது அரசு எப்போதும் துணை நிற்கும் என்று உறுதியளித்த ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவில் வசிக்கும் சீக்கியர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இந்தியாவுக்குச் சென்று பார்க்கும் வகையில் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே விமானப் போக்குவரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்ற நிகழ்வில் காலிஸ்தான் ஆதரவு கோஷங்கள் எழுப்பபட்ட சம்பவ்ம் நம் நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கனடாவுக்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
சீக்கியர்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற முழக்கத்துடன் காலிஸ்தான் இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கம் முந்தைய காலங்களில் பயங்கரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது. இந்த இயக்கம் ஒடுக்கப்பட்ட போதிலும், வெளி நாடுகளில் வசிக்கும் பல சீக்கியர்கள் தொடர்ச்சியாக தனி காலிஸ்தான் கோரிக்கையை எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் தான் கனடாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காலிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு, இந்திய வெளியுறவுத் துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள கனடா தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்துள்ளது இந்தியா.
இந்திய வெளியுறவு அமைச்சகம் கனடாவில் நடந்த சம்பவத்துக்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளதோடு, கனடாவில் பிரிவினைவாதம், தீவிரவாதம் மற்றும் வன்முறை ஆகியவற்றிற்கு அளிக்கப்பட்டுள்ள அரசியல் வெளியை இது மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டுகிறது எனச் சாடியுள்ளது.
இத்தகைய வெளிப்பாடுகள் இந்தியா - கனடா உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், கனடாவில் வன்முறை சூழலை ஊக்குவிப்பது, நாட்டில் வசிக்கும் குடிமக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications