இந்தியாவில் முன்பே கால் வைத்த ஓமிக்ரான் BF.7, BF.12 கொரோனா.. இதுவரை 4 பேர் பாதிப்பு.. நிலவரம் என்ன?
டெல்லி: ஓமிக்ரான் BF.7 மற்றும் BF.12 வகை கொரோனா இந்தியாவிலும் பரவி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இந்த வகை கொரோனா காரணமாக இதுவரை 4 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சீனாவில் ஓமிக்ரான் BF.7 மற்றும் BF.12 வகை கொரோனா காட்டுத்தீ போல பரவி வருகிறது. சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4666 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சீனாவில் இந்த ஓமிக்ரான் BF.7 மற்றும் BF.12 வகை கொரோனா புதிய அலையை ஏற்படுத்தி உள்ளது. டெல்டா அலை, தொடக்கத்தில் வந்த ஓமிக்ரான் அலை இரண்டில் இருந்தும் தப்பித்த சீனா இந்த முறை ஓமிக்ரான் BF.7 மற்றும் BF.12 வகை கொரோனா வகை கொரோனாவில் சிக்கி உள்ளது.

கேஸ்கள்
ஓமிக்ரான் BF.7 மற்றும் BF.12 வகை கொரோனா காரணமாக சீனாவில் தினசரி கேஸ்கள் 4 ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்து உள்ளது. இதனால் மருத்துவமனைகள் நிரம்பி வருகின்றன. அங்கு இதுவரை மரணங்கள் பெரிதாக இல்லை. முக்கியமாக வயதானவர்கள் அதிக அளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சீனாவில் இதுவரை கொரோனா காரணமாக 5,242 பேர் பலியாகி உள்ளனர். அங்கு கொரோனா கட்டுப்பாடுகளை அகற்றிய பின்தான் கேஸ்கள் அதிகரித்து உள்ளன. ஹாங்காங் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வின்படி, சீனாவின் அடுத்த ஏப்ரல் மாதத்திற்குள் 5 லட்சம் பேர் கொரோனா காரணமாக மரணம் அடையலாம் என்று கூறப்பட்டு உள்ளது. இல்லையென்றால் 15 லட்சம் பேர் வருட இறுதிக்குள் பலியாவார்கள் என்றும் ஆராய்ச்சி அறிக்கை தெரிவித்து உள்ளது.

இந்தியா நிலைமை
ஓமிக்ரான் BF.7 மற்றும் BF.12 வகை கொரோனா இந்தியாவிலும் பரவி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இந்த வகை கொரோனா காரணமாக இதுவரை 4 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவில் குஜராத், ஒடிசாவில் மொத்தம் 4 கேஸ்கள் இந்த பிரிவில் பதிவாகி உள்ளன. ஆனால் இதில் அசுவாசப்பட வேண்டிய விஷயம் என்றால் கடந்த செப்டம்பர், நவம்பரில் இந்த வகை கொரோனா இந்தியாவில் கண்டறியப்பட்டது. BF.7 மற்றும் BF.12 கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேரும் ஏற்கனவே குணமடைந்துவிட்டனர்.

எப்போது
அதாவது இந்த வகை கொரோனா கொண்டவர்கள் ஏற்கனவே இந்தியாவில் இருந்தாலும் அவர்களால் பெரிதாக கொரோனா பரவல் ஏற்படவில்லை. இதையடுத்து இந்தியாவில் தற்போது வரை தீவிர கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் வரவில்லை. முன்னதாக ஓமிக்ரான் BF.7 மற்றும் BF.12 வகை கொரோனா காரணமாக குஜராத், ஒடிசாவில் பாதிக்கப்பட்ட 4 பேரும் வீட்டிலேயே குணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் முதல் கேஸ் ஜூலை மாதம் இந்தியாவில் பதிவானதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து தற்போது இந்தியாவில் கொரோனா ஜீனோம் சோதனைகளை அதிகரிக்க மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. மாநில அரசுகள் கொரோனா கேஸ்களில் ஜீனோம் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று அரசு பரிந்துரை செய்துள்ளது.

அதிகரிப்பு
அதன்படி ஒரு நாட்டில் உருமாறிய கொரோனா வைரஸ் வகைகள் பரவுகிறதா என்பதை ஜீனோம் ஆராய்ச்சி மூலம் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். ஜீனோம் ஆராய்ச்சி மூலம் மட்டுமே கொரோனாவின் வகை என்னவென்று கண்டுபிடித்து, அதை பகுப்பாய்வு செய்ய முடியும். கொரோனா நோயாளிகளின் உடலில் எடுக்கப்பட்ட மாதிரிகளை இந்தியாவின் ஜீனோம் ஆராய்ச்சி அமைப்பான INSACOG ஆராய்ச்சி செய்து வருகிறது. ஒரு கொரோனா நோயாளியின் ஜீனோமை ஆய்வு செய்து, அந்த ஜீனோம் புதியதா அல்லது பழையதா என்பதை வைத்து அந்த கொரோனா குறித்து நாம் அறிந்து கொள்ள முடியும். இதனால் அனைத்து பாசிட்டிவ் சாம்பிள்களையும் சோதனை செய்ய மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.

இந்தியா கேஸ்கள்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 129 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளன. இவற்றில் எத்தனை கேஸ்கள் ஓமிக்ரான் BF.7 மற்றும் BF.12 வகை கொரோனா என்ற விவரம் வெளியாகவில்லை. இந்தியாவில் ஆக்டிவ் கேஸ்கள் எண்னிக்கை 3408 என்ற அளவில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் மட்டுமே பலியாகி உள்ளார். இந்தியாவில் இதுவரை அதிகாரபூர்வமாக 5,30,677 பேர் பலியாகி உள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications