ரஷ்யாவை கைவிடும் இந்தியா? மிரட்டும் டிரம்பால் மொத்த உலகமும் அலறப்போகுதே.. கச்சா எண்ணெய் தரும் ஷாக்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உக்ரைன் மீது ரஷ்யாவின் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முயற்சித்து வருகிறார். ஆனால் டிரம்பால் அதனை சாத்தியமாக்க முடியவில்லை. இதனால் ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்கும் நடவடிக்கையில் டிரம்ப் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் 2 மிகப்பெரிய கச்சா எண்ணெய் நிறுவனங்கள் மீது பொருளாதார தடைகளை டிரம்ப் விதித்துள்ளார். இதனால் நம் நாட்டுக்கும் பிரச்சனைகள் வரலாம் என்பதால் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவது பற்றி அரசு மற்றும் தனியார் எண்ணெய் நிறுவனங்கள் பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர தொடங்கி உச்சம் தொட வாய்ப்புள்ளது.

உக்ரைன் மீது கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா போரை தொடங்கியது. இந்த போர் 4வது ஆண்டை நெருங்கி வருகிறது. போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ரஷ்யா - உக்ரைன் மாறிமாறி தாக்கி கொள்கின்றன.

india-likely-to-stop-russian-oil-purchases-to-avoid-sanction-from-western-countries-including-us

இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார். உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோருடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இருப்பினும் போர் நிறுத்தம் இன்னும் சாத்தியமாகவில்லை.

இந்த போருக்கு ரஷ்யா உடன்படவில்லை. இதனால் ரஷ்யாவை முடக்கும் வகையில் டிரம்ப் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் நம் நாட்டுக்கு 25 சதவீத வரியை விதித்தார். அதேபோல் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் சீனாவையும் குறிவைத்து வரி போட தயாராகி வருகிறார். இருப்பினும் நம் நாடும், சீனாவும் தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி பயன்படுத்தி வருகிறது.

இதன் அடுத்தக்கட்டமாக தான் ரஷ்யாவின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட் (Rosneft) மற்றும் லுகோயில் (Lukoil) ஆகிய இரண்டு நிறுவனங்கள் மீது டொனால்ட் டிரம்ப் பொருளாதார தடைகளை விதித்தார். இதுபற்றி டிரம்ப் கூறுகையில், ‛‛இது மிகப் பெரிய தடைகள். ரஷ்யாவின் இரு பெரிய எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராகத் தடையை விதித்துள்ளோம்.. அதேநேரம் இந்தத் தடைகளை நீண்ட காலம் அமல்படுத்தும் சூழல் ஏற்படாது என நம்புகிறோம். போர் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம். போரை முடிவுக்குக் கொண்டு வர இதுவே சரியான நேரம் என நான் நினைக்கிறேன்'' என்றார். மேலும் போர் நிறுத்தம் தொடர்பாக ஹங்கேரியில் விரைவில் டிரம்ப் - புதின் சந்திக்க இருந்த நிலையில் அதுவும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

அதாவது ரஷ்யா கச்சா எண்ணெய் விற்பனை மூலமாக தான் பணம் சம்பாதித்து போரை முன்னெடுப்பதாக டிரம்ப் நினைக்கிறார். இதனால் ரோஸ்நெஃப்ட், லுகோயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் மீது பொருளாதார தடைகளை விதிக்கும் டிரம்ப், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு கூடுதல் வரிகளை போட்டுள்ளார். இந்நிலையில் தான் அடுத்தக்கட்டமாக ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நிறுவனங்களை டிரம்ப் குறிவைக்கலாம் என்று கூறப்படுகிறது.

நம் நாட்டை எடுத்து கொண்டால் மத்திய அரசு மற்றும் முகேஷ் அம்பானியின் தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் சார்பில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கப்படுகிறது. இதனால் ரிலையன்ஸ் மற்றும் மத்திய அரசு சார்பில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை படிப்படியாக குறைக்கவோ அல்லது நிறுத்தவோ செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், ‛‛அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் எண்ணெய் நிறுவனங்களை குறிவைத்து பொருளாதார தடைகளை விதிக்கின்றன. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் அதிகம் வாங்கும் இந்தியாவின் முன்னணி தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இனி அதனை கணிசமான அளவுக்கு குறைக்க அல்லது முற்றிலுமாக நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல் மேற்கத்திய நாடுகளின் புதிய கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்பதற்காக அரசு பெட்ரோலிய நிறுவனங்களும் தங்களின் கொள்முதல் திட்டங்களை மறுபரிசீலனை செய்து வருகின்றன'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தப்போவதாக அதிகாரப்பூர்வமாக அரசு சார்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுதொடர்பாக டிரம்ப் கூறிய கருத்தையும் மத்திய அரசு மறுத்து தான் வருகிறது. இருப்பினும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ரஷ்யா மீதான அதிகரிக்கும் பொருளாதார தடையால் இந்தியா சிக்கலில் சிக்கி உள்ளது. நம் நாட்டின் கச்சா எண்ணெய் தேவையில் ரஷ்யா 38 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது. இப்படியான சூழலில் அந்த நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவது, குறைப்பது என்பது நம் நாட்டில் சிக்கலை ஏற்படுத்தும். கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை உருவாக்கி பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு வழி வகுக்கும்.

அதுமட்டுமின்றி ரஷ்யாவுக்கு மாற்றாக மாற்று மார்க்கெட்டை நம் நாடு தேட வேண்டியிருக்கும். இதனால் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென சர்வதேச அளவில் உயரும். இதுவும் பல நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமாகும். இதனால் தற்போது டிரம்பின் நடவடிக்கை கச்சா எண்ணெய் விஷயத்தில் மொத்த நாடுகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனென்றால் டிரம்ப் தற்போது ரஷ்யாவி்ன் பெரிய 2 கச்சா எண்ணெய் நிறுவனங்கள் மீது விதித்த பொருளாதார தடையால் 3 சதவீதம் வரை கச்சா எண்ணெய் விலைகள் உயர தொடங்கி உள்ளன. இந்தியாவும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தும்போது அதன் விலை இன்னும் உச்சம் தொடும் என வார்னிங் செய்துள்ளனர் நிபுணர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+