இந்தியாவை இனி தொடுங்க பார்க்கலாம்.. ரஷ்யாவில் இருந்து வரும் பாதுகாப்பு அரக்கன்! செம மேட்டர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாகிஸ்தான் அணுஆயுதம் கொண்டு நம்மை தொடர்ந்து மிரட்டி வருகிறது. இந்நிலையில் தான் நம் நாட்டுக்கு பாதுகாப்பு அரக்கனை வழங்க ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது. சீனாவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் சந்தித்து பேசிய நிலையில் நம் நாட்டுக்கு கூடுதலாக எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு அமைப்பு வர உள்ளது. இந்த அமைப்பு எதிரிகளின் ஏவுகணைகளை இடைமறித்து வானிலேயே அழிக்கும் திறன் கொண்டது. சமீபத்தில் பாகிஸ்தான் உடனான ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது அந்த நாட்டின் ஏவுகணைகளை தாக்கி அழித்து வெற்றி கண்ட இந்த எஸ் 400 தற்போது கூடுதலாக நம் நாட்டுக்கு வருகிறது.

நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மே மாதம் 7 ம் தேதி முதல் மே 10ம் தேதி வரை போர் நடந்தது. ‛ஆபரேஷன் சிந்தூர்' மூலமாக நம் நாடு பாகிஸ்தானை பந்தாடியது. நம் நாட்டில் இருந்து சீறிப்பாய்ந்த ஏவுகணைகள் பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் முகாம்கள், விமானப்படை தளம், ராணுவ தளங்களை துல்லியமாக தாக்கி அழித்தது.

india-may-get-more-s-400s-from-russia-and-delivery-likely-to-begin-next-year

நம் நாட்டின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க முடியாமல் பாகிஸ்தான் திணறியது. இதனால் பயந்த பாகிஸ்தான் நம் நாட்டிடம் மண்டியிட்டது. பாகிஸ்தான் ராணுவம் நம் நாட்டின் ராணுவத்தை தொடர்பு கொண்டு சரணடைவதாக கூறியது. மேற்கொண்டு தாக்குதல் நடத்த வேண்டாம் என்று கெஞ்சியது. இதையடுத்து போர் முடிவுக்கு வந்தது.

சுதர்ஷன சுக்ரா

முன்னதாக ‛ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானும் நம்மை தாக்க முயன்றது. பாகிஸ்தானும், நம் நாட்டை குறிவைத்து ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் போர் விமானங்களை அனுப்பியது. இவை அனைத்தும் வானில் இடைமறித்து தாக்கி அழிக்கப்பட்டது. இதனால் நம் நாட்டுக்கு பாதிப்பு வரவில்லை.

பாகிஸ்தானின் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழித்ததில் எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு அமைப்பு முக்கிய பங்காற்றியது. இந்த எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு அமைப்பு ரஷ்யாவின் தயாரிப்பாகும். நம் நாட்டில் இது ‛சுதர்ஷன சக்ரா' என்று அழைக்கப்பட்டு வருகிறது.

2 எஸ் 400 ‛பெண்டிங்’

கடந்த 2018 ம் ஆண்டில் நம் நாட்டுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே 5.43 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் மொத்தம் 5 எஸ் 500 ஏவுகணை தடுப்பு சிஸ்டம் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. முதல் எஸ் 400 ஏவுகணை தடுப்பு சிஸ்டம் கடந்த 2021ம் ஆண்டு கிடைத்தது. தற்போது வரை எஸ் 300 ஏவுகணை சிஸ்டம் 3 எண்ணம் நமக்கு கிடைத்துள்ளது.

அதில் ஒன்று பஞ்சாப்பின் ஆதம்பூரிலும், இன்னொன்று கிழக்கு செக்டாரிலும், மற்றொன்று மேற்கு செக்டாரிலும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானால் நம்மை தாக்கவே முடியவில்லை. இருப்பினும் 2018 ஒப்பந்தத்தின்படி இன்னும் 2 எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு அமைப்பு நமக்கு கிடைக்கவில்லை.

அடுத்த ஆண்டு முதல் டெலிவரி

இந்நிலையில் தான் சீனாவில் பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது எஸ் - 400 வான்வெளி பாதுகாப்பு அமைப்பு பற்றி இருவரும் பேசி உள்ளனர். அதன்படி கடந்த 2018 ல் இந்தியா - ரஷ்யா இடையே போடப்பட்ட ஒப்பந்த்ததின் அடிப்படையில் ரஷ்யா நமக்கு இன்னும் 2 எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு அமைப்பை தர வேண்டி உள்ளது.

இந்த எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்பு அடுத்த ஆண்டு முதல் ரஷ்யா வழங்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு ஒரு எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு அமைப்பும், அதன்பிறகு 2027 ல் இன்னொரு எஸ் - 400 வான்வெளி பாதுகாப்பும் நம் நாட்டுக்கு கிடைக்கும்.

உறுதி செய்த ரஷ்யா

இந்த 2 எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு அமைப்பு தவிர கூடுதலாகவும் நம் நாடு, ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 வான்வெளி அமைப்பை வாங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை ரஷ்ய ராணுவத்தின் டெக்னிக்கல் கோ ஆபரேஷன் பிரிவுக்கான பெடரல் சேவையில் தலைவர் டிமிட்ரி சுகாயேவ் (Dmitry Shugayev) உறுதி செய்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛இந்தியா ஏற்கனவே எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தி வருகிறது. தற்போது இந்தியாவும், ரஷ்யாவும் தங்களின் ஒத்துழைப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான அர்த்தம் என்னவென்றால் புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு அமைப்பை இந்தியாவுக்கு டெலிவரி செய்வது தான். தற்போது பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+