இந்தியாவில் கொரோனாவால் ஒரே நாளில் 1,32,364 பேர் பாதிப்பு - 2713 பேர் மரணம்

நாடு முழுவதும் ஒரே நாளில் 1,32,364 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,85,74,350 பேராக அதிகரித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடு முழுவதும் ஒரே நாளில் 1,32,364 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,85,74,350 பேராக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 2,07,071 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2,65,97,655 பேராக அதிகரித்துள்ளது.

India new COVID19 cases 1,32,364 and 2713 deaths

கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவது நம்பிக்கையை அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் தற்போது 16,35,993 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் 2713 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 3,40,702 பேராக அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் 2ஆம் தேதி வரைக்கும் நாடு முழுவதும் 22,41,09,448 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ஜூன் 3ஆம் தேதி வரைக்கும் நாடு முழுவதும் இதுவரைக்கும் 35,74,33,846 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தகவல் வெளியிட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 20,75,428 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+