மோடி-புதின் பேச்சு.. முற்றிலும் பொய்.. இந்தியாவை கொந்தளிக்க வைத்த நேட்டோ தலைவரின் கருத்து
டெல்லி: அமெரிக்கா 50 சதவீதம் சுங்கவரி விதித்தன் காரணமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு போன் போட்டு, உக்ரைன் போர்த் திட்டம் குறித்து விளக்கம் கேட்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று நேட்டோவின் பொதுச் செயலாளர் மார்க் ரூட் கூறியிருந்தார். ஆனால் இந்த கருத்தை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. மார்க் ரூட் கருத்து முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும் பிரதமரின் உரையாடல்கள் தவறாக சித்தரிப்பதை ஏற்க முடியாது என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா உக்ரைன் இடையே நீடிக்கும் போரை முடிவுக்கு கொண்டு பல்வேறு ராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு ஏமாற்றமே கிடைத்தது. ரஷ்யாவிற்கு தொடர்ந்து பணம் வருவதால் தானே போரை நடத்த முடிகிறது.. பணம் வரும் வழிகளை அடைப்போம் என்று நினைத்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யாவின் பொருளாதாரத்திற்கு முக்கிய ஆதாரமாக உள்ள எண்ணெய் ஏற்றுமதியில் கை வைக்க நினைத்தார்.

கிராமங்களில் ஊர் நாட்டாமை எப்படி, ஊரில் யாராவது தப்பு செய்தால், ஒதுக்கி வைப்பார்களோ, அதுபோல் ரஷ்யாவை ஒதுக்கி வைத்தார். ரஷ்யா உடன் கூட்டு சேர்ந்தால் அவர்களை ஒதுக்கி வைத்து கடுயைமாக வரிவிதிப்பேன் என்று மிரட்டி வந்தார். ஒரு கட்டத்தில் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கியதை கூறி, இந்தியாவிற்கு 50 சதவீதம் வரி விதித்தார்.
இந்தியாவிற்கு வரி
பரஸ்பரம் 25 சதவீதம் வரியும், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதற்காக 25 சதவீதம் வரியும் விதித்தார். இந்தியா எண்ணெய் வாங்குவதால் தான், ரஷ்யா உக்ரைன் போர் நிற்கவில்லை என்று குற்றம்சாட்டினார். டிரம்பின் இந்த நடவடிக்கையால் இந்தியாவில் ஏற்றுமதி கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை..
டிரம்ப் ஐரோப்பாவிற்கு வரி விதிக்க முடிவு
இதனிடையே கடந்த புதன்கிழமை ஐ.நா. சபையில் பேசிய டிரம்ப், நேட்டோ நாடுகள் மாஸ்கோவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்குவது பாசாங்குத்தனம் என்று கடுமையாக குற்றம் சாட்டினார். அப்படி வாங்குவதும், உக்ரைன் மீதான போருக்கு நிதியளிக்கிறது என்று கோபமாக கூறினார். மேலும் ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவரவில்லை என்றால், அமெரிக்கா மிகக் கடுமையான வரிகளை விதிக்கும் என்றும் எச்சரித்தார். அப்படி வரி விதித்தால், அது போரை மிக விரைவாக முடிவுக்குக் கொண்டுவரும், ஆனால் ஐரோப்பியர்கள் அவற்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கடுமையாக பேசினார்.
நேட்டோ தலைவர் பேட்டி
டிரம்ப் இப்படி பேசிய சில நாளிலேயே அமெரிக்காவின் சிஎன்என் தொலைக்காட்சிக்கு நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட் அளித்த பேட்டியில், ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியா மீது விதித்துள்ள சுங்கவரிகள், ரஷ்யா மீது "பெரிய தாக்கத்தை" ஏற்படுத்தியுள்ளது என்றார்.
நரேந்திர மோடி புதினுடன் பேச்சு
அவர் மேலும் கூறுகையில், "இந்த சுங்கவரி, ரஷ்யாவை உடனடியாகப் பாதிக்கிறது. ஏனென்றால், இந்தியா இப்போது ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் பேசியிருக்கிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் புதினிடம், 'நான் உங்களுக்கு ஆதரவளிக்கிறேன், ஆனால் உக்ரைன் போர் குறித்த உங்கள் உத்தியை எனக்கு விளக்க முடியுமா? ஏனெனில் எங்கள் நாடு, இப்போது அமெரிக்காவால் விதிக்கப்பட்ட இந்த 50% சுங்கவரிகளால் பாதிக்கப்பட்டுள்ளது' என்று கேட்டிருக்கிறார்" என்று மார்க் ரூட் கூறியிருந்தார்.
இந்தியா மறுப்பு
நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட் இந்தக் கூற்றை இந்தியா "முற்றிலும் ஆதாரமற்றது" என்று கூறி நிராகரித்துள்ளது. வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டின் கருத்து முற்றிலும் உண்மைக்கு புறம்பானது மற்றும் எந்தவிதமான ஆதாரமும் இல்லாத கருத்து. நேட்டோ போன்ற ஒரு முக்கியமான நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் பொது வெளியில் அதிக பொறுப்பையும் துல்லியத்தையும் கடைப்பிடிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். பிரதமரின் உரையாடல்களை தவறாக சித்தரிப்பதை ஏற்க முடியாது" என்று கூறியுள்ளது.
மோடி-புதின் உரையாடல் என்ன
பிரதமர் மோடியும் அதிபர் புதினும் கடைசியாக செப்டம்பர் 17 அன்று (பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாள்) பேசினர். அப்போது மோடி, உக்ரைன் மோதலை "அமைதியான முறையில் தீர்க்க இந்தியா முழு ஆதரவு" அளிப்பதாக மீண்டும் வலியுறுத்தியிருந்தார். ஏனெனில் ஏற்கனவே பிரதமர் மோடி ரஷ்ய அதிபருடன் முன்பு பேசிய போதும், போரை அமைதியான முறையில் இந்தியா முழு ஆதரவு அளிக்கும் என்றே கூறியிருந்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications