ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியல்.. மிக மோசமான நிலையில் இந்தியா.. பாகிஸ்தான், சீனா எங்கே?
டெல்லி: ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு உலக நாடுகளிடையே நடக்கும் ஊழல் தொடர்பான பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா வெறும் 39 மார்குகளை மட்டுமே பெற்றுள்ளது. மேலும், சர்வதேச அளவில் அதிக ஊழல் நடக்கும் நாடுகள் லிஸ்டில் 91வது இடத்தையும் பிடித்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் (Transparency International) என்ற அமைப்பு சர்வதேச அளவில் ஊழல் அதிகம் இருக்கும் நாடுகள் பட்டியலை வெளியிடும். அதன்படி இப்போது 2025ஆம் ஆண்டுக்கான ஊழல் பற்றிய புரிதல் குறியீட்டு ரிப்போர்ட் வெளியிடப்பட்டுள்ளது.

ஊழல் நாடுகள்
ஊழல் பற்றிய புரிதல், நிபுணர்கள் கருத்து, பொதுத் துறையில் உணரப்படும் ஊழல் ஆகியவற்றைக் கொண்டு இந்த லிஸ்ட் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 100 மார்க் என்பது ஊழலில்லாத நிர்வாகத்தைக் குறிக்கிறது. அது மெல்லக் குறைந்து 0 மார்க் என்றால் அதிக ஊழல் என்று அர்த்தம். இந்த லிஸ்டிலும் வழக்கம் போல ஐரோப்பிய நாடுகளே ஊழலற்ற நாடுகளாக உள்ளன.
ஊழலற்ற நாடுகள்
இந்த லிஸ்டில் 89 மார்க் உடன் டென்மார்க் முதலிடத்தைப் பிடித்துள்ளது. தொடர்ந்து 88 மற்றும் 84 மார்க் உடன் பின்லாந்து மற்றும் சிங்கப்பூர் நாடுகள் 2 மற்றும் 3ம் இடத்தில் இருக்கிறது. தொடர்ந்து நியூசிலாந்து மற்றும் நார்வே நாடுகள் 81 மார்க் உடன் 4ம் இடத்தில் இருக்கிறது. ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க், நெதர்லாந்து, ஜெர்மனி, ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் டாப் 10ல் இடம் பெற்றுள்ளது. அமெரிக்கா 29வது இடத்தில் இருந்தாலும், இங்கிலாந்து 20வது இடத்தைப் பிடித்தது.
அதேபோல தெற்கு சூடான் மற்றும் சோமாலியா ஆகிய இரண்டும் ஒன்பது மார்க் பெற்று கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. வெனிசுலா, ஏமன், லிபியா, எர்தியா, சூடான ஆகிய நாடுகளில் ஊழல் அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா எங்கே
182 நாடுகளைக் கொண்ட இந்த லிஸ்டில் இந்தியா 91ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவுக்கு இதில் 39 மார்க் கொடுத்துள்ளனர். சர்வதேச சராசரியைக் காட்டிலும் இந்தியாவில் ஊழல் அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் பொதுத் துறையில் ஊழல்கள் அதிகம் இருப்பதாகக் கவலை எழுப்பப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் ஊழல் ஒரு தனிப்பட்ட பிரச்சனையல்ல.. மாறாக நிர்வாகம், பொறுப்புடைமை, வெளிப்படைத்தன்மை என ஒட்டுமொத்த நிறுவனங்களிலும் பரவியுள்ள ஒரு கட்டமைப்புப் பிரச்சனையாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் நிலை மிகக் குறைந்த அளவே முன்னேறியுள்ளது. சீர்திருத்தங்கள், டிஜிட்டல்மயமாக்கல் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் கூட நிர்வாக சிக்கல்கள், அரசியல் தலையீடு, பலவீனமான கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் சட்டங்களை அமல்படுத்துவதில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் காரணமாக இந்தியாவில் பெரிய சீர்திருத்தம் நடக்கவில்லை. இவை ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்குப் பெரும் தடையாக அமைவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்டை நாடுகள்
இந்தியாவின் அண்டை நாடுகளைப் பொறுத்தவரை சீனா 43 மார்க் உடன் 76வது இடம் மற்றும் பாகிஸ்தான் 28 மார்க் உடன் 136வது இடத்தில் இருக்கிறது. மற்ற அண்டை நாடுகளான பூட்டான் 71 மார்க் உடன் 18வது இடம், 32 மார்க் உடன் 109வது இலங்கை 35 மார்க்குடன் 107வது இடம், வங்கதேசம் 24 மார்க் உடன் 150வது இடத்தில் உள்ளன.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications