இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து 2,46,674 பேர் டிஸ்சார்ஜ் - மீளும் நம்பிக்கை
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 14,35,589 ஆக குறைந்துள்ளது.
டெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 2,46,674 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கொரோனா பாதிப்பில் இருந்து நாடு முழுவதும் மீண்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது மக்களிடையே நம்பிக்கையை அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தினசரி பாதிப்பு சரிந்து வந்தது. இந்தநிலையில் தொடர்ந்து 2வது நாளாக குறைந்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,49,394 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்றைய தொற்று எண்ணிக்கையை விட இது 13 சதவிகிதம் குறைந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவும் விகிதம் 9.27 சதவிகிதமாக உள்ளது. இதன்மூலம், இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,19,52,712 பேராக ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,46,674 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன் மூலம் இந்தியாவில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,97,70,414ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் நேற்று 1,008 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் இன்று 1,072 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை நாட்டில் கொரோனா தொற்றால் இறந்தோர் எண்ணிக்கை 5,00,055 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 14,35,589 ஆக குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்.
கொரோனாவை தடுக்கும் ஒரே வழி தடுப்பூசி மட்டுமே என்பதால் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நேற்று வரை இந்தியாவில் ஒரே நாளில் 55,58,760 பேர் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 168.47 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications