இந்தியாவில் ஒரே நாளில் 2.34 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று.. 893 பேர் உயிரிழப்பு
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2.34 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இந்தியாவில் ஒரே நாளில் 2,34,281 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினம் ஒரே நாளில் 2,35, 532 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்றைய தினம் குறைந்துள்ளது.

இதன் மூலம் கொரோனாவால் இந்தியாவில் இதுவரை 4,08,48,341 ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை 4,10, 92, 522 ஆக உயர்ந்துள்ளது. அது போல் கொரோனாவிலிருந்து ஒரே நாளில் 3,52,784 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோரின் எண்ணிக்கை 3,83,60,710 லிருந்து 3,87,13,494 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1884937 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 893 பேர் பலியாகிவிட்டனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,93,918 லிருந்து 4,94,091 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 62,22,682 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை இந்தியாவில் 165.70 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தினசரி பாசிட்டிவிட்டி ரேட்டானது 14.50 சதவீதமாகியுள்ளது. தமிழகத்தில் இதுவரை 9,35,88,972 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நாட்டில் தடுப்பூசி போட தகுதியானவர்களில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் இரு டோஸ்களையும் செலுத்திக் கொண்டனர். மகாராஷ்டிராவில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் எண்ணிக்கை 41 சதவீதமாக குறைந்துள்ளது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications