இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு 415 ஆக உயர்வு- மத்திய சுகாதாரத் துறை
டெல்லி: இந்தியாவில் ஓமிக்ரானால் 415 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அவர்களில் 115 பேர் மீண்டுவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் மகாராஷ்டிராவில் மிக அதிகமாக 108 பேர் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

டெல்லியில் 79 பேருக்கும், குஜராத்தில் 43 பேருக்கும் தெலுங்கானாவில் 38 பேருக்கும் கேரளாவில் 37 பேருக்கும் தமிழகத்தில் 34 பேருக்கும், கர்நாடகாவில் 37 பேருக்கும் ஓமிக்ரான் பாதிக்கப்பட்டுள்ளது.
ஹரியானா, ஆந்திராவில் தலா 4 பேருக்கும் மேற்கு வங்கம், ஜம்முவில் தலா 3 பேருக்கும் உத்தரப்பிரதேசத்தில் இருவருக்கும் லடாக், சண்டீகர், உத்தரகண்டில் தலா ஒருவருக்கும் ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஓமிக்ரான் பாதிப்பு இல்லை.
இந்தியாவில் கொரோனாவால் ஒரே நாளில் 7,189 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.47 கோடியாகும். இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 387 பேர் பலியாகிவிட்டனர். இதுவரை கொரோனாவுக்கு 4.79 லட்சம் பேர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவால் 77,032 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் இதுவரை 141.01 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒரே நாளில் 66 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்தியாவில் ஒரே நாளில் 7,286 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்கள். இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 3.42 கோடியாகும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஓமிக்ரான் பரவலால் மகாராஷ்டிராவில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை 5 க்கும் மேற்பட்டோர் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அது போல் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை கருத்தில் கொண்டு டெல்லி, ஹரியானாவிலும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும் தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications