அந்த 14 நாட்கள்.. 99 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு புது அறிவிப்பு.. மத்திய அரசு அதிரடி
இந்தியா 99 நாடுகளுக்கு, 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு தந்துள்ளது
டெல்லி: அமெரிக்கா, ஜெர்மனி உட்பட 99 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கட்டாய தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51.21 லட்சத்தை தாண்டி வருகிறது.. 5,121,001 பேர் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்துவிட்டனர்..
வைரஸ் தொற்றுக்கு 254,497,703 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 231,247,050 பேர் குணமடைந்துள்ளனர். இப்போதைக்கு 77,589 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் இப்போதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை
கொரோனாவைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. சில நாடுகளில் தொற்று கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், மறுபடியும் தலைதூக்கிவிட்டது.. சீனா, ஜெர்மன், போன்ற நாடுகளில் வைரஸ் அதிகமாக பரவி வருகிறது.. எனினும் அனைத்து நாடுகளுமே தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசிகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

வெளிநாட்டு பயணிகள்
இதனிடையே பல்வேறு நாடுகள் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை லேசாக தளர்த்தி வருகின்றன.. அந்த வகையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே வெளிநாட்டு பயணிகள் இந்தியாவுக்குள் நுழைய மத்திய அரசு தடை விதித்தது... அத்துடன், நாட்டின் எல்லைகளையும் அடைத்துவிட்டது.. அதற்கு பிறகுதான் தொற்று மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தது.. அதற்கு பிறகு ஏகப்பட்ட கண்டிஷன்களை விதித்துதான், மற்ற நாட்டினரை இந்தியாவுக்குள் அனுமதிக்கும் நிலைமை வந்தது.

கட்டுப்பாடு
அதில் ஒன்றுதான், இந்தியா வருபவர்கள் கட்டாய தனிமைப்படுத்தலை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது... அதாவது யார் எந்த நாட்டில் இருந்து வந்தாலும் 14 நாட்கள் கட்டாயமாக தனிமையில் இருக்க வேண்டும்.. தனிமையை பின்பற்றினால் மட்டுமே நாட்டிற்குள் அனுமதி என்று கட்டுப்பாடு இருந்தது.. தற்போது, வைரஸ் கட்டுக்குள் வந்துள்ளதையடுத்து இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.

அமெரிக்கா
குறிப்பாக, அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ், பிரேசில் உள்பட 99 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் 14 நாட்கள் கட்டாயத்தனிமைப்படுத்தலை பின்பற்ற வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை கடந்த 13-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது... அதேசமயம், இந்த 99 நாடுகளில் இருந்து வரும் பயணிகள் 14 நாட்கள் தங்கள் உடல்நிலையை தங்களை தாங்களே கண்காணித்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பு
இந்த 99 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் கொரோனா டெஸ்ட் செய்திருக்க வேண்டும், 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது... இப்படி ஒரு தளர்வை அறிவித்ததையடுத்து, இந்தியாவுக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications