எல்லையில் இந்தியா கொடுத்த பதிலடி.. தாக்குப்பிடிக்க முடியாமல் ஓட்டம் பிடித்த பாகிஸ்தான் வீரர்கள்
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளால் அச்சம் அடைந்துள்ள பாகிஸ்தான், கடந்த சில நாட்களாக எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில், குறிப்பாக இரவு நேரங்களில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. இதற்கு இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்த நிலையில், இதனை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் ரேஞ்சர்கள் தங்கள் நிலைகளில் இருந்து கொடிகளை அகற்றிவிட்டு ஓட்டம் எடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜம்மு காஷ்மீரில் உள்ள சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரியாக விளங்கிய பஹல்காமில் கடந்த 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் வெறியாட்டம் நடத்தினர். சுற்றுலாப் பயணிகளை துப்பாக்கியால் சுட்டத்தில் 26 பேர் பலியாகினர். பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதல் நாட்டையே உலுக்கியது. சமீப காலங்களில் காஷ்மீரில் நடந்த மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

அச்சத்தில் பாகிஸ்தான் தலைவர்கள்
இந்த தாக்குதலால் கடும் கோபம் அடைந்த மத்திய அரசு, பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியது. இதன்படி, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. மேலும், பாகிஸ்தானியர்களின் விசா ரத்து செய்யப்பட்டு, அவர்கள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவின் அதிரடி நடவடிக்கைகளால் பாகிஸ்தான் அலற தொடங்கியுள்ளது.
எப்பொது வேண்டுமானாலும் இந்தியா நம் மீது போர் தொடுக்கலாம் என பாகிஸ்தான் அமைச்சர்கள் அச்சத்தில் உளறி வருகிறார்கள். நேற்று கூட இஸ்லாமாபாத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அத்தாஉல்லா தரார், பாகிஸ்தான் மீது அடுத்த 24 - 36 மணி நேரத்திற்குள் ராணுவ தாக்குதல் நடத்தலாம் என்று நம்பத் தகுந்த உளவுத் தகவல்கள் எங்களுக்கு கிடைத்திருக்கின்றன.
அத்துமீறி துப்பாக்கிச்சூடு
உறுதியான ஆதாரங்கள் இல்லாத, வெறுமென கட்டுக்கதைகளை ஆதாரமாக கொண்டு இந்த தாக்குதலை இந்திய ராணுவம் திட்டமிட்டிருக்கிறது. இந்தியா ஒரே நேரத்தில் மூன்று விஷயங்களை செய்கிறது. ஒன்று அதுவே விசாரணை நடத்துகிறது. அந்த விசாரணையில் எங்கள் நாட்டை குற்றவாளிகளாக காட்டுகிறது "என அச்சத்தை வெளிப்படுத்தினார். அதேபோல, இந்தியா சிந்து நதியை நிறுத்தினால் சிந்து நதியில் இந்தியர்களின் ரத்தம் ஒடும் எனவும் முன்னாள் அமைச்சர் பிலாவல் பூட்டோ ஆணவத்துடன் பேசினார்.
இப்படி கடந்த சில நாட்களாகவே பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் இந்தியாவின் மீதான அச்சத்தில் கண்டபடி பேசி வருவது அதிகரித்துள்ளது. இது ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் இந்த அத்துமீறல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
எல்லையை விட்டு ஓட்டம்
பாகிஸ்தானின் இந்த அத்துமீறலுக்கு, இந்தியா வட்டியும் முதலுமாக தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்தியாவின் பதிலடியை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் எல்லையில் நிலைகளை விட்டு விட்டு கொடியை அகற்றிவிட்டு அப்படியே ஓட்டம் பிடித்து இருக்கிறார்கள். நவ்ஷேரா, சுந்தர்பேனி, அக்னூர், பராமுல்லா மற்றும் குப்வாரா ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்திய நிலையில் இதற்கு இந்தியா தக்க பதிலடியை கொடுத்து இருக்கிறது.
இந்த பதிலடியை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் ரேஞ்சர்கள் தங்கள் நிலைகளில் இருந்து கொடிகளை அகற்றிவிட்டு ஓட்டம் எடுத்ததாக தகவல்கள் கூறுகின்றன. கடந்த நில நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவது எல்லைப்பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
போர் ஒப்பந்தத்தை மீறினால்
இது தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "பாகிஸ்தானின் அத்துமீறிய துப்பாக்கிச் சூட்டிற்கு இந்தியா மிக கவனமாகவும் வலுவாகவும் பதிலடி கொடுத்து வருகிறது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டால் பதிலடி கிடைக்காமல் இருக்காது என்ற தெளிவான மெசேஜ் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது" என்றார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications