சின்ன தாக்குதல் கூட இல்லை.. நேபாளம், சீன பிரச்சனையை நேர்த்தியாக எதிர்கொண்ட இந்தியா.. மாஸ்டர் பிளான்!
டெல்லி: நேபாளம் வரைபட பிரச்சனை, சீனாவின் எல்லை பிரச்சனை என்று பல முக்கிய பிரச்சனைகளை இந்தியா மிக நேர்த்தியாக கையாண்டு வருகிறது. சிறப்பான ராஜதந்திர நடவடிக்கை மூலம் இந்தியா அனைத்து பணிகளையும் செய்து வருகிறது.
Recommended Video
இந்த வருட தொடக்கத்தில் இருந்தே உலகம் முழுக்க கொரோனா பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. ஒரு பக்கம் கொரோனா பிரச்சனை இருந்தால் இன்னொரு பக்கம் இந்தியாவிற்கு எல்லையில் பல்வேறு பிரச்சனைகள் வந்து உள்ளது.
ஒரு பக்கம் இந்தியாவை நேபாளம் கடுமையாக எதிர்த்து வருகிறது. இன்னொரு பக்கம் சீனா லடாக் எல்லையில் சண்டை போடுகிறது. இதெல்லாம் போக சீனாவுடன் சண்டை போட வைக்கும் வகையும் அமெரிக்காவும் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கிறது.

நேபாளம் பிரச்சனை
இந்தியாவிற்கும் நேபாளத்திற்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இந்தியா நேபாளம் அருகே போட்ட சாலை காரணமாக தற்போது இந்தியாவுடன் நேபாளம் மோத தொடங்கி உள்ளது. நேபாளம் எல்லையில் லிபு லேக் பகுதியில் இந்தியா அமைத்த சாலைக்கு எதிராக நேபாளம் குரல் கொடுத்து வருகிறது. லிபு லேக் பகுதியை நேபாளம் தனக்கு சொந்தமான பகுதி என்று கடந்த சில மாதங்களாக கூறி வருகிறது.

சண்டைக்கு போகவில்லை
லிபு லேக், லம்பியாதூரா, கலபாணி ஆகிய பகுதிகள் நேபாளுக்கு சொந்தமானது என்று கூறி நேபாளம் வரைபடம் கூட வெளியிட்டு இருக்கிறது. இதற்கான வரைபட சட்ட திருத்தம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்னும் நிறைவேறவில்லை. இந்தியாவின் பகுதியை தங்கள் நாட்டின் பகுதியாக நேபாளம் காட்டுகிறது. ஆனால் இந்தியா இதை ராணுவ ரீதியாக எதிர்கொள்ளவில்லை. இந்தியா நினைத்து இருந்தால் நேபாளத்தை தாக்கி இருக்க முடியும்.

ஆனால் அமைதி
ஆனால் இப்போதும் இந்தியா அமைதியாக இந்த பிரச்னையை எதிர்கொண்டு வருகிறது. படையை குவிக்காமல். எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தி பதற்றத்தை அதிகரிக்காமல் இந்தியா ராஜாங்க ரீதியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நேபாளத்திற்கு இஸ்ரேல் உள்ள சில உலக நாடுகள் மூலமும் இந்தியா அழுத்தம் கொடுத்து வருகிறது. இதனால் அங்கு அந்நாட்டு அரசுக்கு எதிராகவே மற்ற கட்சிகள் குரல் கொடுக்க தொடங்கி உள்ளது.

கடும் நெருக்கம்
இந்தியாவிற்கு எதிராக நேபாளம் செயல்படுவதை அந்நாட்டு கட்சிகள் விரும்பவில்லை. இதனால் அங்கு உள்நாட்டில் அரசுக்கு எதிராக அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதுதான் வரைபட சட்ட திருத்தம் அங்கு நிறைவேறாமல் போக காரணம். இந்தியா இந்த வரைபட பிரச்சனையை மிக நேர்த்தியாக பதற்றம் இன்றி எதிர்கொண்டு வருகிறது. நேபாளத்துடன் விரைவில் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

சீனா பிரச்சனை
இன்னொரு பக்கம் சீனாவுடன் இருக்கும் பிரச்சனையை இந்தியா ஏறத்தாழ முடிவிற்கு கொண்டு வந்துவிட்டது என்றும் கூறலாம். லடாக்கில் எல்லையில் சீனா தொடர்ந்து அத்துமீறி வந்தது. அங்கு படைகளையும், நவீன ஆயுதங்களையும் குவித்து வந்தது. இதனால் இந்தியாவும் பதிலடிக்கு எல்லையில் படைகளை குவித்து வந்தது. இது போராக வெடிக்கும் என்று எல்லோரும் பதறிய நிலையில் இந்தியா பேச்சுவார்த்தை மூலமும் அமைதிக்கான வழியை உருவாக்கி உள்ளது.

சீனா அமைதி
நேற்று இரண்டு நாட்டு ராணுவ அதிகாரிகள் இடையே சீனாவின் ஷுசுல் மோல்டோ பகுதியில் பேச்சுவார்த்தை நடந்தது. நேற்றைய மீட்டிங் நல்ல வகையில் முடிந்து இருக்கிறது என்று இரண்டு நாட்டு ராணுவ தரப்பு கூறியுள்ளது. நீண்ட கால அமைதி இதனால் சாத்தியமாகும் என்கிறார்கள். டோக்லாம் பிரச்சனை போலவே இதையும் இந்தியா போர் இல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் சுமக்கமாக தீர்த்து உள்ளது என்கிறார்கள்.

துப்பாக்கி குண்டு இல்லை
இந்த இரண்டு பிரச்சனையையும் இந்தியா சின்ன குண்டு கூட வீசாமல் எதிர்கொண்டு இருக்கிறது. இதனால் எல்லையில் எந்த துப்பாக்கி சூடும் நடக்கவில்லை. சிறிய சிறிய கைகலப்பு தவிர இந்தியா பெரிய மோதல் எதையும் செய்யவில்லை. மிக நேர்த்தியான முறையில் திட்டமிட்டு இந்தியா பெரிய பிரச்சனையையே சமாளித்து உள்ளது. மத்திய அரசின் வெளியுறவு கொள்கை இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

அமெரிக்கா அழுத்தம்
இன்னொரு பக்கம் அமெரிக்கா இந்தியாவிற்கு அழுத்தம் கொடுத்து வந்தது. சீன பிரச்சனையில் எப்படியாவது மூக்கை நுழைக்கலாம் என்று முயன்றது. சீனாவை இந்தியா மூலம் காலி செய்ய பார்த்தது. ஆனால் இந்தியா இதற்கு பலிகடா ஆகவில்லை. அமெரிக்காவை எதிர்க்காமல் அதே சமயம் அமெரிக்காவை இரண்டு நாட்டு பிரச்சனையில் அனுமதிக்காமல் விலக்கி வைத்தது. அமெரிக்காவிடம் நாசுக்காக தனது ராஜதந்திரத்தை இந்தியா வெளிப்படுத்தி உள்ளது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications