இந்தியாவில் ஒரேநாளில் 86,432 பேருக்கு கொரோனா; 40 லட்சத்தை தாண்டிய பாதிப்பு- 69 ஆயிரத்தை கடந்த பலி
டெல்லி: இந்தியாவில் ஒரேநாளில் 86,432 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 40 லட்சத்தை தாண்டியுள்ளது.
உலக நாடுகளில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26,795,701. இதில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 18,907,047; உலகம் முழுவதும் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 878,963.

மொத்த பாதிப்பு 40 லட்சத்தை தாண்டியது
கொரோனா மொத்த பாதிப்புகளில் உலக அளவில் இந்தியா 3-வது இடத்தில் இருந்து வருகிற்து. இதனிடையே கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 86,432 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 லட்சத்தை தாண்டியது. மொத்தம் 40,23,179 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழப்புகள் 69 ஆயிரத்தை தாண்டியது
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,089 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனா மரணங்கள் 69 ஆயிரத்தை தாண்டியது. இந்தியாவில் மொத்தம் 69,561 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 24 மணிநேரத்தில் 70072 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்தம் இதுவரை 31,07,223 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்துக்கு 5-வது இடம்
தற்போதைய நிலையில் இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8,46,395 பேர் மட்டுமே. மாநிலங்களைப் பொறுத்தவரையில் ஒருநாள் பாதிப்பில் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, உத்தரப்பிரதேச மாநிலங்கள் முதல் 4 இடங்களில் உள்ளன. தமிழகம் 5-வது இடத்தில் இருக்கிறது.
Recommended Video

தமிழகம் 3-வது இடம்
மொத்த கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் மகாராஷ்டிராவில் 2-வது இடத்தில் ஆந்திராவும் 3-வது இடத்தில் தமிழகமும் உள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 8,63,062 பேரும் ஆந்திராவில் 4,76,506 பேரும் தமிழகத்தில் 4,51,827 பேரும் கொரோனா பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். கொரோனா மரணங்களில் மகாராஷ்டிராவில் மட்டும் 25,964 பேர் இறந்துள்ளனர். இதற்கு அடுத்ததாக தமிழகத்தில் 7,687 பேரும் கர்நாடகாவில் 6,170 பேரும் கொரோனாவால் மரணித்துள்ளனர்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications