அமெரிக்காவுக்கு ஷாக் கொடுத்த இந்தியா.. அதிகாலையில் நடந்த சம்பவம்! இந்த வருஷம் டிரம்புக்கு தலைவலிதான்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அண்டை நாடுகளுக்கு வரி விதித்து டிரம்ப் பயம் காட்டி வரும் நிலையில், இன்று அதிகாலை ரஷ்யா நாடாளுமன்ற தலைவர் இந்தியாவுக்கு வந்து சேர்ந்திருப்பது டிரம்ப்புக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

உலக பொருளாதாரத்தில் அமெரிக்காவை அசைக்க முடியாத இடத்தில் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்று டிரம்ப் தீவிரமாக முயன்று வருகிறார். ஆனால் இந்த முயற்சியில் சீனாவும், ரஷ்யாவும் மண்ணை வாரி கொட்டியுள்ளன. குறிப்பாக பிரிக்ஸ் அமைப்பு மூலம் ரஷ்யா மேற்கொள்ளும் முயற்சிகள், டிரம்ப்பை பதற வைத்திருக்கிறது.

us russia brics

டாலரும் உலக பொருளாதாரமும்:

அமெரிக்க டாலர் இல்லாமல் உலக பொருளாதாரமே இல்லை என்கிற சூழல் உருவாக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக இந்தியாவுக்கு பெட்ரோல் வேண்டும் எனில் சவுதி அரேபியாவிடம் வாங்குகிறோம். ஆனால் நம்மூர் ரூபாயை கொடுத்து இதை வாங்க முடியாது. மாறாக அமெரிக்க டாலரை கொடுத்தால்தான் பெட்ரோல் கிடைக்கும். ஆஸ்திரேலியாவிலிருந்து நாம் நிலக்கரிகளை வாங்குகிறோம். இதற்கும் டாலர்தான் கொடுக்க வேண்டும்.

இந்தியாவுக்கு டாலர் வேண்டும் எனில் அதை காசு கொடுத்துதான் வாங்க வேண்டும். ஒவ்வாரு நாட்டுக்கும் இதுதான் நிலைமை. ஒருவேளை டாலர் கையிருப்பு இல்லை எனில் அந்த நாட்டின் மொத்த பொருளாதாரமும் முடங்கிவிடும். எவ்வளவு டாலர் கையிருப்பு இருக்கிறது என்பதைதான் அந்நிய செலாவனி என்று கூறுவார்கள்.


டாலருக்கு மாற்று:

யோசித்து பாருங்களேன்.. அமெரிக்கா எனும் நாடு, பச்சை கலரில் உள்ள டாலரை வெறுமென அச்சடிப்பதன் மூலமாக மட்டுமே இவ்வளவு பெரிய வல்லரசாக உயர்ந்திருக்கிறது. இதை இப்படியே விட்டால் விரைவில் மாற்ற நாடுகளின் பொருளாதாரம் அழிந்து போய்விடும். எனவே டாலருக்கு மாற்றாக வேற கரன்சியை கண்டுபிடிக்க வேண்டும். இதை ரஷ்யா செய்தது. பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கு என பிரத்யேகமாக 'பிரிக்ஸ்' கரன்சி உருவாக்கப்படும் என்று ரஷ்யா கூறியிருந்தது. இதற்கான பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன.


பதறிய அமெரிக்கா:

இந்த நடவடிக்கை அமெரிக்காவுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிக்ஸ் கரன்சி வந்துவிட்டால் டாலரின் மதிப்பு சரிய தொடங்கிவிடும். யாரும் டாலரை சீண்ட கூட மாட்டார்கள். எனவே உஷாரான டிரம்ப், எங்கள் டாலருக்கு பதிலாக வேறு கரன்சியை பயன்படுத்தினால் அவர்களால் அமெரிக்காவில் வியாபாரம் செய்ய முடியாது. அந்த நாடுகளின் எந்த பொருளும் அமெரிக்காவில் விற்காது என்று எச்சரித்துள்ளார்.


இந்தியா கொடுத்த ஷாக்:

பிரிக்ஸ் கரன்சி பக்கம் இந்தியா போகாது என்று, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சில நாட்களுக்கு முன்னர் சொல்லிவிட்டார். ஆனால், இந்தியாவும்-ரஷ்யாவும் பழைய பங்காளிகள். இவரும் எப்போது கூட்டு சேர்வார்கள் என்று சொல்ல முடியாது. அந்த வகையில் இன்று அதிகாலை ரஷ்ய நாடாளுமன்ற தலைவர் வியாசஸ்லாவ் வோலோடின் டெல்லிக்கு வந்து சேர்ந்திருக்கிறார்.

இது டிரம்ப் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது. இவர் இந்தியாவுடனான ரஷ்யாவின் பொருளாதார உறவுகள் குறித்தும், வர்த்தகம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் கலந்துரையாட இருக்கிறார். இந்த உரையாடலில் பிரிக்ஸ் கரன்சி குறித்தும் பேசப்பட வாய்ப்பு இருக்கிறது. மட்டுமல்லாது இந்த ஆண்டில் ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வர இருக்கிறார்.

இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது, பிரிக்ஸ் கரன்சிக்கு இந்தியாவை சம்மதிக்க வைக்க ரஷ்யா முயற்சிகளை மேற்கொள்கிறதோ என்கிற கேள்வி டிரம்ப் மனதில் எழுந்திருக்கிறது.

நேற்று வரை மெக்சிகோவுக்கும், கனடாவுக்கும், சீனாவுக்கும் வரியை விதித்த டிரம்ப் இந்தியா பக்கம் அமைதி காத்தார். ஆனால் இன்று நடக்கும் நிகழ்வுகள் நிச்சயம் டிரம்ப்பை சூடேற்றும் என்று சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+