அணு ஆயுதங்களை சுமந்து செல்லும்.. அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி.. ஏன் முக்கியம்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: புதிய தலைமுறை தொழில்நுட்பம் கொண்ட அதி நவீன மேம்பட்ட வசதிகளுடன் கூடிய அக்னி பிரைம் ஏவுகணை சோதனை புதன்கிழமை நடைபெற்றது. இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில், ஏவுகணை குறித்த விவரங்களை பார்க்கலாம்.

இந்தியா தனது ராணுவ பலத்தை அதிகரிக்கும் வகையில் அதி நவீன ஆயுதங்களை அவ்வப்போது மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில், நமது நாட்டின் பாதுகாப்புக்காக அக்னி ரக ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு வருகிறன. இதுவரையில் 1 முதல் 5 வரையிலான ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு உள்ளன.

india-successfully-launch-of-the-new-generation-nuclear-capable-ballistic-missile-agni-prime

கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் அக்னி 5 ஏவுகணை சோதனை நடைபெற்றது. திவ்யாஸ்திரம் என்ற திட்டத்தின் கீழ் எம் ஐஆர்வி தொழில்நுட்பத்தில் உள்நாட்டிலேயே இந்த ஏவுகணை தயாரிக்கப்பட்டது. மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இந்த ஏவுகணையை 10 ஆண்டு முயற்சிக்கு பிறகு தயாரித்தது. இந்த ஏவுகணை சோதனை கடந்த வாரம் வெற்றிகரமாக நடைபெற்றது.

2,000 கி.மீது தூரம் சென்று: இந்நிலையில், அணு ஆயுதங்களை சுமந்து சென்று, ஆயிரம் முதல் இரண்டாயிரம் கி.மீ வரை துாரம் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கக்கூடிய, அக்னி ப்ரைம் என்ற அதிநவீன புதிய தலைமுறை ஏவுகணையை புதன்கிழமை இரவு வெற்றிரகமாக பரிசோதித்து பார்க்கப்பட்டுள்ளது.

ஒடிசா கடற்கரையில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து புதன்கிழமை இரவு 7:00 மணிக்கு இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் எஸ்எப்சி எனப்படும், 'ஸ்ட்ராடெஜிக் போர்சஸ் கமாண்ட்' இணைந்து இந்த சோதனையை நடத்தியது. இந்த சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்நாத் சிங் பாராட்டு: பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்ட 'சென்சார்'கள் மூலம் பெறப்பட்ட தரவுகளில் இருந்து ஏவுகணையின் செயல்திறன் உறுதி செய்யப்பட்டது. ராணுவ தலைமை தளபதி அனில் சவுஹான் மற்றும் ராணுவ மூத்த அதிகாரிகள் இதை பார்வையிட்டனர். இந்த ஏவுகணையின் உருவாக்கம் மற்றும் சோதனையின் போது உடன் இருந்த அனைவருக்கும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

முக்கிய தகவல்கள்: புதிய தலைமுறை தொழில் நுட்பம் கொண்ட இந்த நவீன அக்னி பிரைம் ஏவுகணை பற்றிய அறிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்கள் வருமாறு:

அக்னி பிரைம் அல்லது அக்னி- பி' என்று அழைக்கப்படும் இந்த ஏவுகணை மிகவும் அதிநவீன ஏவுகணையாகும். அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வல்லமை கொண்டது. இந்த ஏவுகணை இரண்டு நிலைகளை கொண்டது. 1000 முதல் 2000 கி.மீட்டர் வரை தூரம் பறந்து இலக்குகளை துல்லியாமாக தாக்கும் திறன் கொண்டது. அக்னி பிரைம் ஏவுகணை, இதற்கு முந்தைய அக்னி ஏவுகணைகளை விட எடை குறைவானது.

ரயிலில் எடுத்து செல்ல முடியும்: அக்னி 3 ஏவுகணையை விட 50 சதவீதம் எடை குறைவானதாக இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. அக்னி பிரைம் ஏவுகணையில் புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய உந்துவிசை மற்றும் வழிகாட்டியை கொண்டது. இந்த ஏவுகணை இரண்டு பாகங்களாக உள்ளதால் எளிதில் இதை சாலை மற்றும் ரயில் மூலம் எடுத்து செல்ல முடியும்.

நீண்ட காலத்திற்கு பாதுகாப்பாக ஸ்டோர் செய்து வைத்திருக்க முடியும். மிககுறைந்த நேரத்திலேயே இந்த ஏவுகணையை ஏவுவதற்கான நிலைக்கு கொண்டு வர முடியும். அக்னி பிரைம் ஏவுகணையின் முதல் சோதனை 2021ல் நடத்தப்பட்டது. 6 மாதங்களுக்கு பிறகு இரண்டாவது சோதனையும் கடந்த மாதம் ஜூன் மாதம் முதல் முறையாக இரவு நேரத்தில் சோதனை செய்தும் பார்க்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+