மளமளவென சரியும் பாகிஸ்தான் பொருளாதாரம்.. சர்வதேச அளவில் இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை
டெல்லி: தீவிரவாத செயல்களை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட கடன்களை பரிசீலிக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐஎம்எஃப்) இந்தியா வலியுறுத்தியுள்ளது.
ஆசியாவை பொறுத்தவரை இந்தியா மிக முக்கியமான நாடு. குறிப்பாக ஐஎம்எஃப் திட்டங்களை அமல்படுத்துவதில் இந்தியா சிறப்பாக பங்காற்றுகிறது. எனவே இந்தியாவின் கோரிக்கைக்கு ஐஎம்எஃப் நிச்சயம் செவி சாய்க்கும். பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்படும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்திய அதிகாரிகள் இதுபற்றி ராய்ட்டர்ஸ் செய்தி ஊடகத்திடம் தெரிவித்ததாக அது கூறியிருக்கிறது. கடந்த ஆண்டு ஐஎம்எஃப்-லிருந்து சுமார் 7 பில்லியன் டாலர் அளவுக்கான கடன் ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் இணைந்திருக்கிறது. முதல்கட்டமாக இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 1.7 பில்லியன் பெற்றிருக்கிறது. மீதமுள்ள தொகையை பெற வேண்டும். அந்நாட்டில் நிலவும் பொருளாதார சரிவு, விலைவாசி உயர்வு இவற்றையெல்லாம் சமாளிக்க இந்த கடனை ஐஎம்எஃப் வழங்கியிருக்கிறது.
மீதமுள்ள 5.3 பில்லியன் தொகை என்பது பாகிஸ்தானுக்கு மிக அவசியமானதாக இருக்கிறது. இதைத்தான் இந்தியா கொடுக்க கூடாது என்று ஐஎம்எஃப் இடம் வலியுறுத்தியுள்ளது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஏற்கெனவே வறுமை, பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இப்படியான சிக்கலில் இருக்கும் பாகிஸ்தானுக்கு ஐஎம்எஃப் கடன் கிடைக்காமல் போனால் அது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.
ஆனால் இப்படியாவது இனி வரும் காலங்களில் தீவிரவாத செயல்களிலிருந்தும், அதை ஆதரிக்கும் நடவடிக்கையிலிருந்தும் பாகிஸ்தான் விலகி இருக்க வேண்டும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஆனால் ஐஎம்எஃப் வழியாக நாம் செக் வைத்தாலும், சீனா உதவியுடன் அந்நாடு மீண்டுவிடும். ஏனெனில் கடந்த காலங்களில் சீனா மிகப்பெரிய அளவில் பாகிஸ்தானுக்கு உதவி வருகிறது. பாகிஸ்தானில் பல்வேறு திட்டங்களுக்கும் சீனா முதலீடு செய்திருக்கிறது. பாக் நிதியமைச்சகத்தின் ஆலோசகர் குர்ராம் ஷெஹ்சாத் கூறுகையில், "நாங்கள் இதுவரை சுமார் 70 கூட்டங்களை நடத்தியிருக்கிறோம். பொருளாதாரம் மீண்டு வருகிறது. இங்கு முதலீடு செய்ய பல நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன" என்று கூறியுள்ளார்.
கடந்த 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் சுற்றுலா பயணிகள், அப்பாவி பொதுமக்கள். இந்த நாசகர வேலையில் ஈடுபட்டதில் 3 பேர் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 2 பேர் பாகிஸ்தானியர்கள் என்று இந்தியா கூறியிருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் அதை மறுத்துள்ளது. கடந்த காலங்களிலும் இப்படி பாகிஸ்தான் மறுத்திருக்கிறது. ஆனால் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பது பின்னர் ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகியிருக்கிறது.
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் இரு நாடுகளுக்கு இடையேயும் பிரச்சனை உச்ச கட்டத்தை எட்டியிருக்கிறது. பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக தனது வான் பரப்பை மூடியிருக்கிறது. இதனால் அந்நாடு பெருவாரியான வான்வழி வருமானத்தை இழந்திருக்கிறது. மறுபுறம் ராணுவ நடவடிக்கைகளுக்கான ஒத்திகையை தீவிரப்படுத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications