Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Timeline: வரிகள், அடுத்து வந்த மிரட்டல்.. இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் கடந்து வந்த பாதை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் நேற்று இறுதியானது. இந்தியா அமெரிக்கா இரண்டும் நட்பு நாடுகள் தான் என்றாலும் இந்த பேச்சுவார்த்தை ஸ்மூத்தாக நடந்துவிடவில்லை. பல குழப்பங்கள் மோதல்களுக்கு பிறகே இந்த வர்த்தக ஒப்பந்தம் இறுதியாகியுள்ளது. இந்த டீல் கடந்து வந்த பாதை குறித்து நாம் பார்க்கலாம்!

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தகம் தொடர்பாகச் சுமார் ஓராண்டாகவே பிரச்சினை இருந்து வந்தது. இந்தச் சூழலில் தான் நேற்று திங்கள்கிழமை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இந்தியப் பொருட்கள் மீதான வரியை 18%ஆகக் குறைக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. இது இந்திய வர்த்தகர்களுக்கு மிகப் பெரியளவில் உதவும்.

India US trade deal Finalized Trade announces Tariffs Cut Exports Boost What is the timeline

வர்த்தக ஒப்பந்தம்

அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைப்பேசி உரையாடலைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு வெளியானது. ஆனால், இந்த ஒப்பந்தம் ஸ்மூத்தாக இறுதி செய்யப்பட்டது என சொல்லி விட முடியாது. பல மாதங்களாக இரு தரப்புக்கு இடையே பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, மோதல்களுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டது. இது இருதரப்பு வர்த்தக உறவுகளில் ஒரு புதிய அத்தியாயமாகப் பார்க்கப்படுகிறது. 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கிய வர்த்தக ஒப்பந்தம் இப்போது இறுதியாகியுள்ளது. இந்த வர்த்தக ஒப்பந்தம் கடந்த வந்த பாதையை நாம் பார்க்கலாம்!

கடந்து வந்த பாதை

2025 ஏப்ரல்: உலகின் பல்வேறு நாடுகள் மீதும் அமெரிக்க அதிபர் டிரம்ப் வரியை அறிவித்தார். அப்போது பல இந்திய இறக்குமதிப் பொருட்களுக்கு 25% 'பரஸ்பர வரிகளை' டிரம்ப் அறிவித்தார். இருப்பினும், திடீரெனச் சில நாட்களில் வரியை 90 நாட்கள் நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்தார்.

ஏப்ரல் 2025: அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் இந்தியப் பயணத்தில் ஒப்பந்த விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டது. ஜூலை 9ம் தேதிக்குள் ஒப்பந்தம் கையெழுத்தாகும் தகவல் வெளியானது.

2025 மே: மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், வர்த்தகப் பேச்சுவார்த்தையைத் தலைமை தாங்கும் ராஜேஷ் அகர்வால் ஆகியோர் அமெரிக்காவுக்குச் சென்று வர்த்தக ஒப்பந்தம் குறித்து இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையை நடத்தினர்.

தடைப்பட்ட பேச்சுவார்த்தை

2025 ஜூன்: ஜூன் 3ம் தேதி அமெரிக்க வர்த்தக அமைச்சர் லூட்னிக் விரைவில் ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்றார். டிரம்ப்பும் இது மிக பெரிய வர்த்தக ஒப்பந்தமாக இருக்கும் என்றார். ஆனால், விவசாய இறக்குமதி வரிகள் காரணமாகப் பேச்சுவார்த்தை தடைப்பட்டது. ஜூன் 20ம் தேதி அமெரிக்கா வர டிரம்ப் விடுத்த அழைப்பைப் பிரதமர் மோடி நிராகரித்தார்.

மிரட்டல்

2025 ஜூலை: அமெரிக்கா சென்ற இந்தியக் குழு எந்தவொரு முடிவும் இல்லாமல் திரும்பியது. ஜூலை 4ம் தேதி பியூஷ் கோயல் தேசிய நலன் முக்கியம் என்று வலியுறுத்தினார். பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முட்டுக்கட்டையை உடைக்க ஜூலை மாதம் ஐந்தாம் சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தது. இருப்பினும், மறுபுறம் டிரம்ப் அனைத்து இந்தியப் பொருட்களுக்கும் 25% வரி விதித்தார். ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்தவில்லை என்றால் கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

2025 ஆகஸ்ட்: பேச்சுவார்த்தை நடக்கும்போதே இந்தியாவுக்கான இறக்குமதி வரியை அமெரிக்கா 50%ஆக உயர்த்தியது. அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச வரி இதுவாகும். ரஷ்ய எண்ணெய்யை இறக்குமதி செய்யும் பிரிக்ஸ் நாடுகளுக்கும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன.

2025 ஆகஸ்ட் இறுதி: திடீர் வரி காரணமாக ஆகஸ்ட் 25-29 வரை டெல்லியில் நடக்கவிருந்த ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. பேச்சுவார்த்தை தொடர்பாகப் புதிய தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இழுபறி

2025 செப்டம்பர்: செப்டம்பரில், வர்த்தகத் தடைகளைத் தீர்ப்பதில் நம்பிக்கை தெரிவித்த டிரம்ப், மோடியுடன் பேசத் திட்டமிட்டதாகக் கூறினார். அமெரிக்கா மற்றும் இந்தியாவை நெருங்கிய நண்பர்கள் மற்றும் இயற்கையான பார்ட்னர்கள் எனப் பிரதமர் மோடி என்று குறிப்பிட்டார்.

2025 அக்டோபர்: ரஷ்ய எண்ணெய்யை வாங்குவதை இந்தியா நிறுத்திவிடும் என மோடி தனக்கு உறுதியளித்ததாக டிரம்ப் கூறினார். ஆனால் இதை மறுத்த இந்தியா வெளியுறவுத்துறை, தேசிய நலனைப் பொறுத்து நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்தது.

2025 நவம்பர்: நவம்பர் மாதத்தில், பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் எதுவும் எட்டப்படவில்லை. முட்டுக்கட்டை தொடர்ந்தன.

மெல்லச் சீரான உறவு

2025 டிசம்பர்: டிரம்ப்புடன் தொலைப்பேசியில் பேசியதைப் பிரதமர் மோடி உறுதிப்படுத்தினார். இரு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்ததாக தெரிவிக்கப்பட்டது.

2026 ஜனவரி: இரு நாடுகளும் மீண்டும் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தன. இரு தரப்பும் வர்த்தகப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், ஒப்பந்தத்திற்கு நெருங்கி வருவதாகவும் அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்தார்.

2026 பிப்ரவரி: வர்த்தக ஒப்பந்தத்தை டிரம்ப் அறிவித்தார். இந்திய இறக்குமதிகள் மீதான வரிகள் 50% இலிருந்து 18% ஆக உடனடியாகக் குறைக்கப்பட்டது. இது இந்திய வர்த்தகர்களுக்கு மிகப் பெரிய நிம்மதி தரும் செய்தியாக அமைந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+