பாகிஸ்தானை கதறவிட்ட S 400.. ரஷ்யாவுக்கு திடீரென இந்தியா வைத்த ‛டிமாண்ட்’.. இனி தொடவே முடியாது
டெல்லி: பாகிஸ்தானுடனான மோதலின்போது ஏவுகணை, ட்ரோன் தாக்குதலில் இருந்து நம் நாட்டை பாதுகாத்த எஸ் 400 ஏவுகணை தடுப்பு சிஸ்டமை (S 400 Missile Defence Systems)ரஷ்யாவிடம் இருந்து கூடுதலாக வாங்க நம் நாடு முடிவு செய்துள்ளது. இது நம் நாட்டின் பாதுகாப்பை இன்னும் பலப்படுத்தும் நிலையில் இந்தஎஸ் 400 ஏவுகணை தடுப்பு சிஸ்டம் என்பது என்ன? அது ஏன் முக்கியம் என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின்போது பாகிஸ்தான் உள்ளே நம் நாட்டின் ஏவுகணைகள் சீறிப்பாய்ந்து சரமாரியாக தாக்குதல் நடத்தியது. கடந்த 7 ம் தேதி 9 பயங்கரவாத முகாம்கள், கடந்த 10ம் தேதி காலை 3 விமானப்படை தளங்களை நம் நாடு அழித்தது.

அதேபோல் கடந்த 7 ம் தேதி முதல் பாகிஸ்தானும் நம் நாட்டை குறிவைத்து ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் போர் விமானங்களை அனுப்பியது. இவை அனைத்தும் வானில் இடைமறித்து தாக்கி அழிக்கப்பட்டது. இதனால் நம் நாட்டை தாக்கி சேதத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்த பாகிஸ்தானின் எண்ணத்தில் மண் விழுந்தது.
மேலும் நம் நாட்டிடம் அடி வாங்க முடியாமல் கதறிய பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்கு வந்தது. பாகிஸ்தானில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்ட அதிகாரி, நம் நாட்டின் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார். போரை நிறுத்த வேண்டும் என்று கெஞ்சினார். இதையடுத்து மோதல் நிறுத்தப்பட்டது. தற்போது இருநட்டின் எல்லையில் அமைதி திரும்பி உள்ளது.
இருப்பினும் பாகிஸ்தானை நம்ப முடியாது. பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பயங்கரவாதிகள் எப்போதும் வாக்குறுதிகளை காப்பாற்றுவது இல்லை. இதனால் போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும் கூட அதனை மீறி நம்மை தாக்க முயற்சிக்கலாம். இதற்கு உதாரணம் என்னவென்றால் கடந்த 10ம் தேதி போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகும் கூட பாகிஸ்தான் ட்ரோன்கள் ஜம்மு காஷ்மீரின் பல இடங்களில் தாக்க வந்தது தான். இந்த செயல் என்பது பாகிஸ்தான் மீதான நம்பிக்கையை குறைக்கிறது.
இதனால் தான் தற்போதும் நம் நாட்டின் எல்லையில் படை வீரர்கள் உஷாராக இருக்கின்றனர். தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே தான் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது எஸ் 400 ஏவுகணை பாதுகாப்பு சிஸ்டமை கூடுதலாக வாங்க நம் நாடு முடிவு செய்துள்ளது. இந்த எஸ் 400 ஏவுகணை தடுப்பு சிஸ்டம் என்பது ரஷ்யாவின் தயாரிப்பாகும்.
இது ‛சுதர்ஷன சக்ரா' என்று நம் நாட்டில் அழைக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் நம் நாட்டை நோக்கி ஏவிய ஏவுகணை, ட்ரோன்களை இந்த எஸ் 400 ஏவுகணை தடுப்பு சிஸ்டம் தான் இடைமறித்து தாக்கி அழித்தது.
இதனால் எஸ் 400 ஏவுகணை தடுப்பு சிஸ்டமை ரஷ்யாவிடம் இருந்து கூடுதலாக வாங்க நம் நாடு முடிவு செய்துள்ளது. ரஷ்யாவுக்கும், நமக்கும் இடையே நல்ல உறவு, நட்பு உள்ளது. அதேபோல் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையே நட்பும் நன்றாக உள்ளது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக நம் நாட்டுக்கு தேவையான ராணுவ தளவாடங்கள் ரஷ்யாவிடம் இருந்து அதிகமாக இறக்குமதி செய்யப்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால் நம் நாட்டின் பாதுகாப்பு துறையில் இருக்கும் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஆயுதங்கள் என கிட்டத்தட்ட 60 சதவீதம் ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகும். இதனால் எஸ் 400 ஏவுகணை பாதுகாப்பு சிஸ்டமை கூடுதலாக தர வேண்டும் என்று நம் நாட்டின் சார்பில் ரஷ்யாவிடம் கேட்கப்பட்டுள்ளது.
இந்த எஸ் 400 ஏவுகணை தடுப்பு சிஸ்டம் (S 400 Air Defence System) என்பது ஏவுகணை, ட்ரோன் தடுப்புக்காக நவீன வசதியுடன் தயாரிக்கப்படுகிறது. இதனை நம் நாட்டின் ‛சுதர்சனா சக்ரா ' என்று அழைக்கப்படுகிறது. இது ஏவுகணைகளை 600 கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் வரும்போதே கண்டுபிடித்து விடும். அதன்பிறகு அந்த ஏவுகணை பாதையை கண்காணித்து 400 கிலோமீட்டர் தொலைவுக்குள் வரும்போது இடைமறித்து அழிக்கும் வல்லமை கொண்டது.
இந்த எஸ் 400 ஏவுகணை தடுப்பு சிஸ்டம் என்பது 4 வகையான ஏவுகணைகளை ஏவி வானில் வரும் டார்க்கெட்டுகளை அழிக்கும். இந்த சிஸ்டம் என்பது போர் விமானங்கள், ட்ரோன்கள் குரூஸ் வகை ஏவுகணைகள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் வல்லமை கொண்டது. இது advanced Phased Array Radar உள்ளது. இது ஒரே நேரத்தில் 100 இலக்குகளை கண்காணிக்கும் திறன் கொண்டது. பாகிஸ்தான் உடனான மோதலின்போது அந்த நாட்டின் போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை தாக்கி அழித்தது. பாதையை மாற்றி செயலிழக்க செய்து அசத்தியது.
கடந்த 2018 ம் ஆண்டில் நம் நாட்டுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே 5.43 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் மொத்தம் 5 எஸ் 500 ஏவுகணை தடுப்பு சிஸ்டம் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. முதல் எஸ் 400 ஏவுகணை தடுப்பு சிஸ்டம் கடந்த 2021ம் ஆண்டு கிடைத்தது. அது பஞ்சாப்பில் நிறுவப்பட்டது. பஞ்சாப் என்பது பாகிஸ்தன் எல்லையில் உள்ள நிலையில் வான்வெளி பாதுகாப்பு கருதி இது அங்கு நிறுவப்பட்டது. மேலும் நேற்று பிரதமர் மோடி பஞ்சபா் மாநிலம் ஆதம்பூர் விமானப்படை தளத்துக்கு சென்றார். அங்கு அவர் ராணுவ வீரர்கள் மற்றும் விமானப்படை வீரர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
பாகிஸ்தானுக்கு எதிரான மோதலில் உங்களின் பணியை இந்தியா ஒருபோதும் மறக்காது என்று கூறினார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் போட்டோக்களை வெளியிட்டார். அதில் ரபேல் மற்றும் எஸ் 400 ஏவுகணை தடுப்பு சிஸ்டம் ஆகியவையும் தெரிந்தன. இதன் பின்னணி என்னவென்றால் பாகிஸ்தானை பதம் பார்த்த நம் படைகளுக்கு இவை 2ம் முக்கியமாக இருந்ததை என்பதை தான் பிரதமர் மோடி சொல்லாமல் சொல்லி இருந்தார்.
அதன்படி ஏற்கனவே பிரான்சிடம் இருந்து கூடுதலாக ரபேல் போர் விமானங்கள் வாங்க மத்திய அரசு முடிவு செய்து நடவடிக்கைகளை தொடங்கி உள்ள நிலையில் இப்போது ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ஏவுகணை தடுப்பு சிஸ்டமை வாங்க இந்தியா முயற்சி எடுத்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications