Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹெச்1 பி விசா: விளைவு மோசமாக இருக்கும்.. அமெரிக்கா சரி செய்யவேண்டும் - இந்திய வெளியுறவு அமைச்சகம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமெரிக்காவின் H-1B விசா கட்டண உயர்வு நடவடிக்கை சம்பந்தப்பட்ட குடும்பங்களிடையே விளைவுகளை ஏற்படுத்தும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது. இதன் தாக்கங்களை ஆய்வு செய்து வருவதாகவும், இந்த இடையூறுகளை அமெரிக்கா உரிய முறையில் சரி செய்யும் என்று நம்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஹெச்1பி விசாவுக்கான கட்டணத்தை 1 லட்சம் டாலராக, இந்திய மதிப்பில் ரூ.88 லட்சமாக உயர்த்தி அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால், வேலைக்காக அமெரிக்கா செல்லும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

India Warns of Impact from US H-1B Visa Fee Hike Cites Family Disruptions

ஹெச்1பி விசா

எச்1பி அமெரிக்க விசாக்களின் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளதால் நிறுவனங்கள் புதிதாக விசாக்களுக்கு விண்ணப்பிப்பதும் அல்லது ஏற்கனவே உள்ள விசாக்களைப் புதுப்பிப்பதும் கூட கடினமாக இருக்கும். ஹெச்1பி விசா கட்டண உயர்வு, இந்திய ஐடி நிறுவனங்களுக்கு சவால்களை உருவாக்கும் என்றும், இதன் விளைவாக பல ஊழியர்கள் தங்களது சொந்த நாடுகளுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் கூட ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

அமெரிக்கா வழங்கும் எச்1பி விசாக்களில் ஐந்தில் ஒரு பங்கை இந்தியாவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் கைப்பற்றுகின்றன. 2020 முதல் 2023ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்ட எச்1பி விசாக்களில் 71 சதவீதம் அளவுக்கு இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், டிரம்பின் இந்த முடிவால் இந்திய ஐடி ஊழியர்கள் பெரும் பாதிப்பை சந்திக்க உள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவின் முடிவு குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சகம் கவலை

இது குறித்து, வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்காவின் எச்-1பி விசா திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள கட்டுப்பாட்டு நெறிமுறைகளைத் தொடர்ந்து, இதனால் முழுமையாக ஏற்படும் தாக்கம் குறித்து ஆராய்ந்து வருகிறோம். இந்தியா மற்றும் அமெரிக்காவில் உள்ள துறைகளுக்கு இதில் பங்குள்ள நிலையில், அவர்களுடனும் கலந்தாலோசிக்கப்படும்.

திறன் வாய்ந்த தரப்பினர் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் தொழில்நுட்ப மேம்பாடு, புத்தாக்கம், பொருளாதார வளர்ச்சி ஆகிய பலவற்றுக்கு மிகப்பெரியளவில் பங்களிப்பு நல்கியுள்ளனர். இந்த நிலையில், கொள்கை வகுப்பாளர்கள், இரு நாடுகளிலும் உள்ள மக்களுக்கிடையிலான வலுவான உறவுகளை உள்ளடக்கிய பரஸ்பர பலனளிக்கும் நலன்களையும் கருத்தில் கொண்டு, அண்மையில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை பகுப்பாய்வு செய்ய வேண்டும்.

நம்பிக்கை உள்ளது

இந்த நடவடிக்கையானது, பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அதிலும் குறிப்பாக, சம்பந்தப்பட்ட குடும்பங்கள் பலவற்றுக்கு பாதிப்புகள் ஏற்படும். இவை அனைத்தும் அமெரிக்கால் உரிய முறையில் கையாளப்படும் என்று அரசு நம்பிக்கையுடன் இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஐடி நிறுவனங்களுக்கு பாதிப்பு

இந்திய மென்பொருள் மற்றும் சேவைத் துறைக்கான வர்த்தக சங்கமான நாஸ்காம், H-1B விசா விண்ணப்பங்களுக்கு 1,00,000 அமெரிக்க டாலர் கட்டணம் விதிக்கும் அமெரிக்காவின் முடிவு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நடவடிக்கை இந்திய தொழில்நுட்ப சேவை நிறுவனங்களின் உலகளாவிய செயல்பாடுகளை சீர்குலைத்து, அமெரிக்காவில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான திறமையான நிபுணர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது.

இந்த நடவடிக்கை அமெரிக்காவின் பரந்த வேலைவாய்ப்பு பொருளாதாரத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று நாஸ்காம் தெரிவித்துள்ளது. H-1B விசாக்களில் பணிபுரியும் இந்தியர்கள் நேரடியாகப் பாதிக்கப்படுவார்கள் என்றும், தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆன்சைட் பணியமர்த்தல் தேவைப்படும் திட்டங்களில் இடையூறுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் நாஸ்காம் எச்சரித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+