சண்டை ஓவர்! பயங்கரவாதத்துக்கு எதிரான உறுதி தொடரும்! இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டம்
டெல்லி: பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் எதிராக இந்தியா தொடர்ந்து உறுதியாக இருக்கும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக கடுமையான தாக்குதல் நடந்து வந்த நிலையில், சண்டை நிறுத்தத்துக்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இந்நிலையில் தான் பயங்கரவாதத்துக்கு எதிரான உறுதியான நிலைப்பாடு தொடரும் என வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.

"துப்பாக்கிச் சூடு நிறுத்தம் மற்றும் இராணுவ நடவடிக்கை குறித்து இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன. பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்கள் மற்றும் வெளிப்பாடுகளுக்கு எதிராகவும் இந்தியா தொடர்ந்து உறுதியான மற்றும் சமரசமற்ற நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வருகிறது. இனியும் அது தொடரும்" என வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றத்தை தணிக்க அமெரிக்கா முயற்சி மேற்கொண்டது. அமெரிக்க வெளியறவுத்துறை மார்கோ ரூபியோ இரு தரப்பிலும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார். இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மார்கோ ரூபியோவிடம் பேசுகையில், "இந்தியாவின் அணுகுமுறை எப்போதும் பொறுப்பானது. அது அப்படியே தொடர்கிறது." எனத் தெரிவித்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் தான், இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தத்தை அமல்படுத்த இந்தியாவும், பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டன. வரும் 12 ஆம் தேதி இரு நாட்டுராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications