இதுதான் இந்தியா.. தாக்க வந்த டிரோன்கள்.. உடனே பாதுகாப்பிற்கு சென்ற விக்ரம் போர்க்கப்பல்.. அதிரடி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அரபிக் கடல் அருகே வணிக கப்பல் மீது தாக்குதல் நடந்த நிலையில், இந்தியக் கடலோரக் காவல் படையின் விக்ரம் கப்பல் அதற்குப் பாதுகாப்பாகச் சென்றுள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் போர் சர்வதேச அளவில் பல சிக்கல்களை உருவாக்கி வருகிறது. குறிப்பாகச் சமீப காலமாகச் செங்கடல் அல்லது அதன் அருகே செல்லும் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது,.

 Indian coast guard ship Vikram escorts MV Chem Pluto to Mumbai After drone attack

நேற்று எம்வி செம் புளூட்டோ என்ற வணிக கப்பல் அரபிக்கடலில் சென்று கொண்டிருந்த போது அதன் மீது டிரோன் தாக்குதல் நடைபெற்றது. இது பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இந்தியக் கடலோரக் காவல் படையின் விக்ரம் கப்பல் அந்த வணிகக் கப்பலைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றது.

பாதுகாப்பு: மும்பைக்குச் செல்லும் அந்தக் கப்பல் டிசம்பர் 25ஆம் தேதிக்குள் அதன் இலக்கை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத் கடற்கரை அருகே எம்வி செம் புளூட்டோ மீது தாக்குதல் நடைபெற்றது. அந்த டிரோன்கள் ஈரானில் இருந்த வந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த டிரோன் தாக்குதலால் அந்த கப்பலில் தீ விபத்தும் ஏற்பட்டது.

 Indian coast guard ship Vikram escorts MV Chem Pluto to Mumbai After drone attack

தீ விபத்தால் கப்பலின் தானியங்கி அடையாள அமைப்பு, செயலிழந்தது. இதையடுத்து இந்த சம்பவத்திற்கு உடனடியாக பதிலளித்த இந்தியக் கடலோர காவல்படை, அதன் டோர்னியர் கண்காணிப்பு விமானத்தை அங்கே அனுப்பியது. கடந்த டிசம்பர் 19ஆம் தேதி ஐக்கிய அமீரகத்தில் இருந்து புறப்பட்ட அந்தக் கப்பல் மங்களூர் துறைமுகத்திற்குச் சென்று கொண்டிருந்தது.

தாக்குதல்: அப்போது குஜராத் துறைமுகம் அருகே சனிக்கிழமையன்று இந்தத் தாக்குதல் நடந்தது, இதையடுத்து இந்தியக் கடற்படை மற்றும் கடலோர காவல்படையின் உடனடி பாதுகாப்பிற்கு அங்கே விரைந்தது.

இதற்கிடையில், இந்தியக் கடற்படை போர்க்கப்பலான ஐஎன்எஸ் மோர்முகவ் சம்பவ இடத்திற்கு வந்து தாக்குதல் குறித்து ஆய்வு செய்தார். இந்த டிரோன் தாக்குதலால் கப்பல் சேதம் அடைந்தது என்ற போதிலும் அதிர்ஷ்டவசமாக, அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து டிரோன் தாக்குதல் குறித்து அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

 Indian coast guard ship Vikram escorts MV Chem Pluto to Mumbai After drone attack

விசாரணை: முதற்கட்டமாக இது நீண்ட தூரத்திலிருந்து ஏவப்பட்டதா இல்லை அருகே மற்றொரு கப்பலில் இருந்து ஏவப்பட்டதா என்பது குறித்த விசாரணையை ஆரம்பித்துள்ளனர். அருகே இருக்கும் மற்ற கப்பல்கள் குறித்தும் இந்தியக் கடற்படை உன்னிப்பாக ஆய்வு செய்து வருகிறது.

இது தொடர்பாக பென்டகன் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "எம்வி கெம் புளூட்டோ மீதான தாக்குதல் ஈரானில் இருந்து நடத்தப்பட்டுள்ளது. லைபீரியா கொடியுடன் இயங்கிய இந்த போர்க் கப்பல் ஜப்பானுக்குச் சொந்தமானது. மேலும், நெதர்லாந்து நிறுவனம் இந்த ரசாயன டேங்கர் கப்பலை இயக்கி வருகிறது. இந்தியக் கடற்கரையில் இருந்து சுமார் 200 கடல் மைல் தொலைவில் இருந்த போது இந்த கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த 2021க்கு பிறகு வர்த்தக கப்பல் மீது ஈரான் நடத்திய ஏழாவது தாக்குதல் இதுவாகும்" என்றார்.

இந்தியக் கடற்படை கப்பல்: எம்வி கெம் புளூட்டோ கப்பலில் தீ பற்றிய தகவல் கிடைத்ததும், மும்பையில் உள்ள இந்தியக் கடலோர காவல்படை கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் விரைந்து செயல்பட்டது. முதலில் கப்பலைத் தொடர்பு கொண்டு உயிர்ச் சேதம் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்தனர். மேலும் தேவையான அனைத்து உதவிகளும் கிடைப்பதையும் உறுதி செய்தனர். கப்பலில் ஏற்பட்ட சிறு சிக்கல்களும் சரி செய்யப்பட்ட நிலையில், அது மும்பைக்குச் செல்கிறது.

இந்தத் தாக்குதல் சம்பவம் அந்த பிராந்தியத்தில் பதட்டத்தை அதிகரிக்கிறது. இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலைத் தொடர்ந்தே அங்கே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த வணிக கப்பல் மீதான ட்ரோன் தாக்குதல் என்பது கப்பல்கள் எந்தளவுக்கு ஆபத்தாக இருக்கிறது என்பதையே காட்டுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+