வெயிட்டிங் லிஸ்டே வராது.. புக்கிங் செய்யும் அனைவருக்கும் டிக்கெட்.. வேற லெவல் பிளானுடன் ரயில்வே

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வரும் 2032 ஆம் ஆண்டுக்குள் புக்கிங் செய்யும் அனைவருக்குமே டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதை இலக்காக கொண்டு ரயில்வே அமைச்சகம் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. ரயில்வேயின் இந்த பிளான் கச்சிதமாக நடந்தால் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் வெயிட்டிங் லிஸ்ட் என்ற ஒரு விஷயமே இருக்காது என ரயில்வே அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இந்தியாவில் பயணிகளின் போக்குவரத்து தேவையை தீர்த்து வைப்பதில் ரயில்வே தான் முக்கிய பங்க்கு வகிக்கிறது. அதிலும் தொலை தூரம் செல்வது என்றால் முதலில் ரயிலில் டிக்கெட் இருக்கிறதா என்றுதான் பார்ப்பார்கள். ரயிலில் டிக்கெட் கிடைக்காமல் போனால் மட்டுமே பேருந்துகளிலோ சொந்த வாகனங்களிலோ பயணம் செய்வதை பற்றி யோசிப்பார்கள்.

Railway Chennai Train Ticket Delhi

ரயில் பயணம்: பாதுகாப்பு மற்றும் சொகுசான பயணம்.. கிட்டத்தட்ட சரியான நேரத்தில் செல்ல வேண்டிய ஊர்களுக்கு செல்ல விடலாம் என்பதால் ரயில் பயணம் என்பது பயணிகளின் முதல் சாய்சாக எப்போதுமே உள்ளது. டிக்கெட் கட்டணம் குறைவு என்பதால் அனைத்து தரப்பு மக்களும் ரயிலில் பயணம் செய்ய விரும்புகிறார்கள். இந்தியாவில் தினமும் ஆயிரம் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

டிக்கெட் கிடைப்பதில் சவால்: எக்ஸ்பிரஸ், சூப்பர்பாஸ்ட் என தூரங்கள், மற்றும் பயண நேரம் அடிப்படையில் பல்வேறு வகையான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது அதி நவீன சொகுசு வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. அதுபோக வந்தே மெட்ரோ, வந்தே ஸ்லீப்பர் ரயில்களும் தயார் நிலையில் உள்ளன. என்னதான் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தாலும் பெரும்பாலான நேரங்களில் டிக்கெட் கிடைப்பது இல்லை என்பதே பயணிகளின் பெரும் மனக்குறையாக உள்ளது.

பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: தற்போது ரயில்களில் 120 நாட்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. முன்பதிவு துவங்கிய சில நாட்களிலேயே முக்கிய வழித்தடங்களில் டிக்கெட் தீர்ந்து விடுகிறது. வெயிட்டிங்க் லிஸ்டில் டிக்கெட் சென்றால் பயணம் செய்யும் கடைசி சில மணி நேரம் வரும் டிக்கெட் கன்பார்ம் ஆகுமா? என பயணிகள் பதைபதைப்புடன் காத்திருக்க வேண்டியுள்ளது.

அதிலும் இந்த ஆண்டு சம்மர் சீசனில் ரயிலில் இடம் கிடைக்காமல் முன்பதிவு பெட்டிக்குள் பயணிகள் பலரும் முண்டியடித்துக் கொண்டு பயணம் செய்ததை பார்க்க முடிந்தது. சொல்லப்போனால் முன்பதிவு வந்தே பாரத் ரயிலிலும் கூட இந்த நிலை இருந்தது. இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், நடப்பு ஆண்டில் சம்மர் சீசனில் ரயில் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து விட்டது.

2032 ஆம் ஆண்டுக்குள்: கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10 மடங்கு அதிகமாக ரயில்கள் இயக்கப்பட்டன. கூடுதலாக 4 கோடி பயணிகள் இந்த சம்மரில் ரயில் சேவையை பயன்படுத்தியிருக்கிறார்கள். 2032 க்குள் புக் செய்யும் அனைத்து பயணிகளுக்கு டிக்கெட் கிடைக்க வேண்டும் என்பதுதான் ரயில்வே அமைச்சகத்தின் இலக்காக உள்ளது.

அதாவது வெயிட்டிங் லிஸ்ட் என்ற ஒரு விஷயமே இருக்காது என்ற அடிப்படையில் ரயில்வே பணியாற்றி வருகிறது" என்றனர். அதாவது ரயில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, தேவைக்கேற்ப ரயில் செவையை அதிகபடுத்துவதன் மூலம் புக்கிங்க் செய்யும் அனைவருக்கும் டிக்கெட் கிடைக்கும் வகையில் ரயில்வே சேவை மேம்படுத்த இருப்பதாக சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+