கராச்சி துறைமுகத்தை ரவுண்டு கட்டிய 36 போர்க்கப்பல்கள்.. பயம் காட்டிய இந்திய கடற்படையின் 'ஆர்மடா'!
டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய கடற்படையின் 36 போர்க்கப்பல்கள் கராச்சி துறைமுகத்தை தாக்க தயாராக இருந்தது என்று கடற்படை தெரிவித்திருக்கிறது.
ஐஎன்எஸ் விக்ராந்த் தலைமையில் சுமார் 36 போர்க்கப்பல்கள் கராச்சியை டார்கெட் வைத்திருந்ததாகவும், பாகிஸ்தான் ஓவராக போயிருந்தால், அமெரிக்காவின் பேர்ல் துறைமுகம் போல கராச்சி நொறுக்கப்பட்டிருக்கும் என்றும் கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

போர் காலத்தில் கடற்படை கப்பல்கள் எதிரி நாட்டை தாக்க கூட்டமாக செல்லும். இதனை 'ஆர்மடா' என்று அழைப்பார்கள். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய கடற்படை இதைத்தான் செய்தது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் தலைமையில், 8-10 போர்க்கப்பல்கள், 7 சிறப்பு போர்க்கப்பல், 6 நீர்மூழ்கிக் கப்பல்கள் என மொத்தம் 36 கப்பல்களை இந்திய கடற்படை கராச்சியை நோக்கி குறி வைத்திருந்தது.
இந்த கப்பல்களில் கடலிலிருந்து தரையில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் சிறப்பு ஏவுகணைகள், விமானங்களை சுட்டு வீழ்த்தும் ஏவுகணைகள், நீருக்கடியில் சென்று இலக்கை தாக்கும் ஏவுகணைகள் என அனைத்து நாசக்கார ஆயுதங்களும் இருந்தன. பாகிஸ்தான் கடற்படையின் மொத்த எண்ணிக்கை வெறும் 30 தான். அப்படியெனில் நாம் அடித்தால் அவர்களால் திருப்பி அடிக்க முடியாத அளவுக்கு பாதிப்பு இருக்கும்.
இந்தியா ரவுண்டு கட்டியதை உணர்ந்த பாகிஸ்தான் உடனடியாக NAVAREA அறிவுறுத்தலை வழங்கியது. அதாவது உலகம் முழுவதும் உள்ள கடல் பகுதிகள் 21 பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள நாடுகள் தங்கள் கடல் பரப்பில் உள்ள கப்பல்களுக்கு எச்சரிக்கையை கொடுக்கும். அப்படித்தான் இந்தியா ரவுண்ட் அப் செய்ததால், NAVAREA எச்சரிக்கையை தங்கள் நாட்டு கடல் எல்லையில் உள்ள கப்பல்களுக்கு பாகிஸ்தான் கொடுத்திருக்கிறது.
இந்தியா மேற்கொண்ட இந்த நடவடிக்கை மிகவும் வித்தியாசமான மற்றும் ஆழமானதாகும். காரணம் கடந்த 1971ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போர் நடந்தது. இந்த போர் நேரத்தில் நம்மிடம் கூடுதல் போர் கப்பல்கள் இருந்தாலும் கூட வெறும் 6 கப்பல்களை மட்டும்தான் நாம் கராச்சியை நோக்கி அனுப்பியிருந்தோம். அப்படி பார்த்தால் 36 கப்பல்களை காராச்சியை நோக்கி டார்கெட் வைக்க செய்திருந்தது பாகிஸ்தானுக்கு கிலியை கிளப்பியிருக்கிறது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் தீவிர எதிர்ப்பு காட்டாமல் அடக்கி வாசித்ததற்கு இந்திய கடற்படையின் மாஸ்டர் மூவும்தான் காரணம்.
இந்தியா நடத்திய அதிரடி நடவடிக்கையில் பயங்கரவாதிகள் சுமார் 100க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். அணு அயுதம் வைத்திருந்தபோதிலும், சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ராணுவ பலம் இருந்த போதும் கூட பாகிஸ்தானால் நம்முடைய முக்கிய ராணுவ தளங்களை வெற்றிகரமாக தாக்க முடியவில்லை. இந்த சண்டையில் வெற்றி நம்முடையது. இனி பயங்கரவாதத்திற்கு ஆதரவாகவோ, அதை பயன்படுத்தி இந்தியாவில் தாக்குதல் நடத்த முயன்றாலோ அது போரில்தான் போய் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications