நேற்று ரஜினி வீடு... இன்று டெல்லி... கலவரம் நிகழ்ந்த பகுதிகளில் ஜமாத்துல் உலமா சபை ஆய்வு
டெல்லி: டெல்லியில் கலவரம் நிகழ்ந்த பகுதிகளை தமிழக ஜமாத்துல் உலமா சபை குழுவினர் இன்று நேரில் சென்று பார்வையிட்டனர்.
நடிகர் ரஜினிகாந்த்தை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்து பேசிய நிலையில் இன்று டெல்லிக்கு சென்று கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஜமாத்துல் உலமா சபை ஆய்வு செய்வது முக்கியமானதாக கருதப்படுகிறது. கடந்த 24-ம் தேதி வடகிழக்கு டெல்லியில் உள்ள சாந்த்பாக், பஜன்புரா, கோகுல்புரி, ஜாஃப்ராபாத் ஆகிய இடங்களில் கலவரம் வெடித்தது. சி ஏ ஏ -வுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தினர்.

இதனால் டெல்லியே கலவரக் காடாக காட்சியளித்தது. எங்கு நோக்கினும் பதற்றம் நிறைந்த பகுதிகளாகவே பார்க்கப்பட்டது. இத்தனைக்கும் அன்றைய தினம் வல்லரசு நாடான அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வந்திருந்தார். இதனால் வட கிழக்கு பகுதியில் நிகழ்ந்த தாக்குதல் சம்பவங்களும், கலவரமும் உலக மீடியாக்களில் எதிரொலித்தன. இந்தியாவை பற்றி சர்வதேச ஊடகங்கள் கிழித்தெடுத்தன. இதையடுத்து சுதாரித்துக்கொண்ட மத்திய உள்துறை கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில் அந்த சம்பவத்தை கண்டித்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது. அதில் தமிழக கமாத்துல் உலமா சபை நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர். மேலும், சி ஏ ஏ-வுக்கு எதிராக தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்கள் பற்றியும் அவர்கள் எடுத்துரைத்தனர். பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர் எனக் கருதப்படும் நடிகர் ரஜினிகாந்த்தை நேற்று அவர்கள் சந்தித்து பேசியதும், அவர்களுக்கு ரஜினி ஒரு சில உறுதிகளை கொடுத்ததும் முக்கியமானது.
இந்நிலையில் இன்று டெல்லியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டதுடன், கும்பல் தாக்குதலுக்கு பலியானவர்கள் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறவும் உள்ளனர். மேலும், கலவரத்தால் வீடு, உடைமைகளை இழந்து நிற்கதியாக நிற்பவர்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவும் திட்டமிட்டுள்ளார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications